logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம், தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

2 hrs ago
user_Siva prakasam
Siva prakasam
Teacher பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
2 hrs ago

தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம், தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    1
    தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மதுரை வீரன், மகாலட்சுமி மற்றும் நாகேந்திரன் ஆகிய மூவர் மீது, நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் தலா ₹9 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் மனுவின்படி, எரதிமக்கள்பட்டி கிராமத்தில் அரசு வேலைக்காக காத்திருந்த நபர்களிடம், மதுரை வீரன் மகாலட்சுமியை அறிமுகப்படுத்தியுள்ளார். மகாலட்சுமிக்கு நீதிமன்ற பதிவாளர் தெரிந்தவர் என்றும், ₹10 லட்சம் கொடுத்தால் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவார் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் 2021ஆம் ஆண்டு முன்பணமாக சுமார் ₹9 லட்சம் கொடுத்துள்ளனர். ஓராண்டுக்குள் வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கிளர்க் வேலை உறுதியாகிவிட்டதாக கூறி, உத்தரவு நகல் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாகேந்திரன் என்பவர் வேலை தொடர்பான பயிற்சி அளிப்பார் என்று கூறி மகாலட்சுமி அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாகேந்திரனை சந்தித்தபோது, அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் சென்று வேலை வாங்குவதுபோல் செயல்பட்டு, மூன்று மாத சம்பளம் என ₹24,000 கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். பல மாதங்கள் கடந்தும் பணி நியமன அழைப்பு வராததால் சந்தேகம் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், மகாலட்சுமி அளித்த உத்தரவு நகலை ஆய்வு செய்தபோது அது போலி ஆணை எனத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டு மதுரை வீரன் மற்றும் மகாலட்சுமியை அணுகியபோது, பணத்தைத் தராமல் அலைக்கழித்ததாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்தால் மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை இழந்த 12 நபர்களும், தங்களை ஏமாற்றிய தவெக நிர்வாகி மதுரை வீரன், மகாலட்சுமி மற்றும் நாகேந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மதுரை வீரன், மகாலட்சுமி மற்றும் நாகேந்திரன் ஆகிய மூவர் மீது, நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் தலா ₹9 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவின்படி, எரதிமக்கள்பட்டி கிராமத்தில் அரசு வேலைக்காக காத்திருந்த நபர்களிடம், மதுரை வீரன் மகாலட்சுமியை அறிமுகப்படுத்தியுள்ளார். மகாலட்சுமிக்கு நீதிமன்ற பதிவாளர் தெரிந்தவர் என்றும், ₹10 லட்சம் கொடுத்தால் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவார் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் 2021ஆம் ஆண்டு முன்பணமாக சுமார் ₹9 லட்சம் கொடுத்துள்ளனர். ஓராண்டுக்குள் வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கிளர்க் வேலை உறுதியாகிவிட்டதாக கூறி, உத்தரவு நகல் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாகேந்திரன் என்பவர் வேலை தொடர்பான பயிற்சி அளிப்பார் என்று கூறி மகாலட்சுமி அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாகேந்திரனை சந்தித்தபோது, அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் சென்று வேலை வாங்குவதுபோல் செயல்பட்டு, மூன்று மாத சம்பளம் என ₹24,000 கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். பல மாதங்கள் கடந்தும் பணி நியமன அழைப்பு வராததால் சந்தேகம் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், மகாலட்சுமி அளித்த உத்தரவு நகலை ஆய்வு செய்தபோது அது போலி ஆணை எனத் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டு மதுரை வீரன் மற்றும் மகாலட்சுமியை அணுகியபோது, பணத்தைத் தராமல் அலைக்கழித்ததாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்தால் மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை இழந்த 12 நபர்களும், தங்களை ஏமாற்றிய தவெக நிர்வாகி மதுரை வீரன், மகாலட்சுமி மற்றும் நாகேந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில், போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தீர்வாக, ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள அரசு நிலத்தில், ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் 22,581 சதுர அடி பரப்பளவில், மூன்று தளங்களைக் கொண்ட புதிய அதிநவீன ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடமும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வளாகத்தில், காணொளி அறை, கணினி அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான மின்தூக்கி (லிஃப்ட்) மற்றும் சாய்வுதளப் பாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உயர்தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், இந்த நீதிமன்றக் கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, வாடகை கட்டிடத்தில் அன்றாடம் அவதிப்படும் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலன் கருதி, தயார் நிலையில் உள்ள இந்த நீதிமன்ற வளாகத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில், போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தீர்வாக, ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள அரசு நிலத்தில், ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் 22,581 சதுர அடி பரப்பளவில், மூன்று தளங்களைக் கொண்ட புதிய அதிநவீன ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடமும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வளாகத்தில், காணொளி அறை, கணினி அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான மின்தூக்கி (லிஃப்ட்) மற்றும் சாய்வுதளப் பாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உயர்தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், இந்த நீதிமன்றக் கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, வாடகை கட்டிடத்தில் அன்றாடம் அவதிப்படும் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலன் கருதி, தயார் நிலையில் உள்ள இந்த நீதிமன்ற வளாகத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_Ramesh
    Ramesh
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபலமான தனியார் தொண்டு நிறுவனமான மகேஸ்வரி மண்டல் அமைப்பின் சார்பில், இன்று சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஒரு சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மகேஸ்வரி மண்டல் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ரத்தங்களை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். இந்த ரத்ததான நிகழ்ச்சியில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
    1
    சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபலமான தனியார் தொண்டு நிறுவனமான மகேஸ்வரி மண்டல் அமைப்பின் சார்பில், இன்று சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஒரு சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மகேஸ்வரி மண்டல் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ரத்தங்களை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். இந்த ரத்ததான நிகழ்ச்சியில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசி கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து கற்களால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகலையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்தது. அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுவதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் அலட்சியத்தால், போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக்கொண்டு, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசி கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து கற்களால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் ரகலையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகலையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்தது. அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுவதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் அலட்சியத்தால், போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக்கொண்டு, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே க.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை அடுத்த சீகம்பட்டி கிராமத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹30.08 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சீகம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை தார் சாலை அமைப்பதற்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் பழைய சாலை அகற்றப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலைப் பணியைத் தொடங்காமலும், அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமலும் இருந்துள்ளனர். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் க.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது. வருகின்ற 29 ஆம் தேதிக்குள் சாலைப் பணிகள் தொடங்கப்படாவிட்டால், மறுநாள் ஜேசிபி இயந்திரம் கொண்டு நாங்களாகவே ஜல்லிக்கற்களை அகற்றி விடுவோம் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகள் முன்னிலையில் கடுமையாக எச்சரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே க.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை அடுத்த சீகம்பட்டி கிராமத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹30.08 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சீகம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை தார் சாலை அமைப்பதற்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் பழைய சாலை அகற்றப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலைப் பணியைத் தொடங்காமலும், அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமலும் இருந்துள்ளனர்.

இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் க.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

வருகின்ற 29 ஆம் தேதிக்குள் சாலைப் பணிகள் தொடங்கப்படாவிட்டால், மறுநாள் ஜேசிபி இயந்திரம் கொண்டு நாங்களாகவே ஜல்லிக்கற்களை அகற்றி விடுவோம் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகள் முன்னிலையில் கடுமையாக எச்சரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    18 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாதந்தோறும் வழங்கப்படும் மருந்து மாத்திரைகளைப் பெற பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகும் மக்கள், மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம், ஊழியர்கள் பற்றாக்குறை, மற்றும் முறையான வசதிகள் இல்லாததே இந்த காலதாமதத்திற்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் இந்த மருத்துவமனையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் மாத்திரைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்படாததாலும், மாதந்தோறும் பரிசோதனை செய்து மாத்திரை பெறுபவர்களுடன் புறநோயாளிகளுக்கும் ஒரே வரிசையில் மாத்திரைகள் வழங்கப்படுவதாலும் காத்திருப்பு நேரம் நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை பெயரளவில் மட்டுமே செயல்படுவதாகவும், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அனைவரையும் முறையாக சிகிச்சை அளிக்காமல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, மருத்துவமனையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையை உடனடியாக நீக்கி, நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை விரைந்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாதந்தோறும் வழங்கப்படும் மருந்து மாத்திரைகளைப் பெற பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகும் மக்கள், மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம், ஊழியர்கள் பற்றாக்குறை, மற்றும் முறையான வசதிகள் இல்லாததே இந்த காலதாமதத்திற்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் இந்த மருத்துவமனையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் மாத்திரைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்படாததாலும், மாதந்தோறும் பரிசோதனை செய்து மாத்திரை பெறுபவர்களுடன் புறநோயாளிகளுக்கும் ஒரே வரிசையில் மாத்திரைகள் வழங்கப்படுவதாலும் காத்திருப்பு நேரம் நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை பெயரளவில் மட்டுமே செயல்படுவதாகவும், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அனைவரையும் முறையாக சிகிச்சை அளிக்காமல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மருத்துவமனையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையை உடனடியாக நீக்கி, நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை விரைந்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களில் சில பழுதடைந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சேதமடைந்த வாகனங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்காமல், பேரூராட்சி வளாகத்திலேயே அப்படியே வைத்துள்ளனர். இதன் விளைவாக, வாகனங்கள் மேலும் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதேபோல, பல்வேறு வாகனங்களும் மற்றும் கைகளில் தள்ளும் வண்டிகளும் கூடச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த இந்த வாகனங்களை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களில் சில பழுதடைந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சேதமடைந்த வாகனங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்காமல், பேரூராட்சி வளாகத்திலேயே அப்படியே வைத்துள்ளனர். இதன் விளைவாக, வாகனங்கள் மேலும் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதேபோல, பல்வேறு வாகனங்களும் மற்றும் கைகளில் தள்ளும் வண்டிகளும் கூடச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த இந்த வாகனங்களை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Ramesh
    Ramesh
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சேலம் கோட்டை மைதானத்தில் இன்று தமிழ் தேச மக்கள் இயக்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால், கோட்டை மைதானம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    சேலம் கோட்டை மைதானத்தில் இன்று தமிழ் தேச மக்கள் இயக்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால், கோட்டை மைதானம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.