கோபி நகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்கும் குடும்பத்திற்கு நகராட்சியின் பாராட்டு சான்றிதழ் ஒட்டப்பட்டது கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 9,காந்திநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதி எண் 2026 ன் படி,சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வருகின்ற குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் தனி கவனம் செலுத்த வேண்டிய கழிவுகள் என நான்கு வகையாக பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டு நன்றாக பிரித்து வழங்கும் குடும்பத்திற்கு நகராட்சியின் பாராட்டு சான்றிதழ் ஒட்டப்பட்டது. மேலும் குப்பையை வருகின்ற 01. 10. 2026க்குள் பிரித்து வழங்காத வீடுகளில் நகராட்சி மூலம் குப்பை சேகரிக்கப்பட மாட்டாது. மீறி குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்,சட்ட விதிகளின்படி நடவடிக்கை தொடரப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் , சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் நிருபன் சக்ரவர்த்தி,சௌந்தர்ராஜன் மற்றும் மேற்பார்வையாளர்கள் பரப்புரையாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு குப்பையை பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோபி நகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்கும் குடும்பத்திற்கு நகராட்சியின் பாராட்டு சான்றிதழ் ஒட்டப்பட்டது கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 9,காந்திநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதி எண் 2026 ன் படி,சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வருகின்ற குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து
மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் தனி கவனம் செலுத்த வேண்டிய கழிவுகள் என நான்கு வகையாக பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டு நன்றாக பிரித்து வழங்கும் குடும்பத்திற்கு நகராட்சியின் பாராட்டு சான்றிதழ் ஒட்டப்பட்டது. மேலும் குப்பையை வருகின்ற 01. 10. 2026க்குள் பிரித்து வழங்காத வீடுகளில் நகராட்சி மூலம் குப்பை
சேகரிக்கப்பட மாட்டாது. மீறி குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்,சட்ட விதிகளின்படி நடவடிக்கை தொடரப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் , சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் நிருபன் சக்ரவர்த்தி,சௌந்தர்ராஜன் மற்றும் மேற்பார்வையாளர்கள் பரப்புரையாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு குப்பையை பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நொச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரை பாபு தலைமையில் மதுவிலக்கு போலீசார் முகமது ரபி, நாகேந்திரன் மற்றும் குமாரசாமி ஆகியோர் நொச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் சந்தேகத்திற்கு கிடமான வகையில் நின்று கொண்டு இருந்ததை அறிந்த போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் 22 என்பதும் அவர் தற்போது திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கி பணி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து காங்கேயம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.1
- கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.4
- 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதியில் வறட்சி காரணமாக குட்டையில் நீர் இல்லாததால் செயற்கையாக அமைக்கப்பட்ட 20 அடி ஆழ குட்டையில் மாநகராட்சி சார்பில் நீர் நிரப்பி அதில் கரைத்தனர். கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிசத், அகில பாரத இந்து மஹா சபா, iந்து மக்கள் கட்சி, பாரத் சேன, சிவ சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். மூன்றாம் நாளான இன்று அவ்வாறு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதியில் வறட்சி காரணமாக குட்டையில் நீர் இல்லாததால் செயற்கையாக அமைக்கப்பட்ட 20 அடி ஆழ குட்டையில் மாநகராட்சி சார்பில் நீர் நிரப்பி அதில் கரைத்தனர். குட்டையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் தண்ணீர் இறங்கி விநாயகர் சிலைகலை பெற்று நீரில் மீழ்க வைத்து கரைத்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.4
- பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.1
- ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்! தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதியில் நகராட்சி குடிநீர் வழங்கல் நிர்வாகம் சார்பில் சபா சிறப்பு கூட்டம் பகுதியின் நகர மன்ற உறுப்பினர் கே.ஏ முஸ்தபா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சார்பில் பகுதி சபா சிறப்புக் கூட்டம் உதகை 18 வது வார்டு பகுதி நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள் தலைமையில், நகராட்சி வருவாய் உதவியாளர் ராஜ்குமார் மற்றும் பகுதி மக்கள், நகரத் துணைச் செயலாளர் இச்சுபாய், ஆகியோர் முன்னிலையில் சபா கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஏராளமான பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் கோரிக்கைகளை நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்களிடம் மக்கள் தெரிவித்ததாவது வனவிலங்கு சிறுத்தை நடமாட்டம் இன்றுவரை அதிகரித்து உள்ளதால் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான நிலையை சந்தித்து வருகின்றன? வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினர்? பகுதிகளில் குடிநீர் விநியோகம் இரவு நேரங்களில் வருவதால் பகுதி மக்கள் அன்றாட வேலைகளின் களைப்பில் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரவு நேரங்களில் குடிநீர் பிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது, மற்றும் சிலப்பகுதியில் குழாய்கள் வெளியே இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதல் அபாயம்? மழை காரணம் போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் உதகை நகராட்சி இப்பகுதிக்கு தண்ணீர் விடும் நேரத்தை பகுதி மக்களின் வசதிக்கேற்ற நேரங்களின் அனுமதிக்க வேண்டுமென்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்?? பாதாள சாக்கடைகள் சீரமைக்காமல் இன்னும் பல இடங்கள் உள்ளதால் அதையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதை நகர மன்ற உறுப்பினர் தெரிவித்தார், எலிகள் கோவில் பகுதியில் எட்டு ஒன்பது நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் தரப்படுகிறது இதனை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பகுதி மக்களுக்கு இரண்டு நாள் ஒரு முறையாவது தண்ணி கொடுக்க உதகை நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார், மற்றும் 18 ஆவது வார்டு பாம்பே கேஸ்டல்,ரோஸ் கார்டன் சாலை, எலிகள் சாலை, ஹைவேஸ் அலுவலகம் செல்லும் சாலைகள் பல இடங்களில் மோசமடைந்து உள்ளன இதனை சீக்கிரமாக வேண்டும் என்பதே தெரிவித்தனர், இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற சபா சிறப்பு கூட்டத்தில் பகுதியில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களின் அனைத்து குறைகளையும் முன்வைத்து நகராட்சி அதிகாரியிடமும் நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டனர், இப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக மக்களின் அனைத்து கோரிக்கைகளை உடனுக்கு உடனடியாக செய்யப்பட்டு வருகிறது, மற்றும் இப்பகுதியில் மக்களின் அனைத்து அடிப்படை வசதி தேவைகளுக்கு நகரமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்து அதனை நகராட்சி துறையின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து தந்து மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ள நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள், இன்று நடைபெற்ற சபா கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நகரமன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்கள் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது,1
- கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.1
- தாராபுரம் இடைத்தேர்தலில் அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளர் ராஜரத்தினம் பேட்டி தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில்அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக ராஜரத்தினம் (52) நிறுத்தப்பட்டுள்ளார் இதையடுத்து அவர் சுயேச்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் தாராபுரம் வட்டம் மணக்கடவு அஞ்சல் மணக்கடவு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் ராஜரத்தினம் இவர் எம்.ஏ., பி.எட். வரை படித்துள்ளார். கல்வித் தகுதி இருந்தபோதிலும்தற்போது கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவரது வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த வடிவேல்ராமன் ராஜசேகரன் இளங்கோ கணேசன் விடுதலைவீரன் என்டிஆர் திருப்பூர் திருமுகசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ராஜரத்தினத்திற்கு சுதா (38) என்ற மனைவியும், குணால் (22) என்ற மகனும், செந்தமிழ் அரசி (19) என்ற மகளும் உள்ளனர் தாராபுரம் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் ராஜரத்தினம் பொது வேட்பாளராக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது தேர்தல் களத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக பிரதிநிதித்துவம் மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் பல்வேறு தரப்பினரின் போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது1