Shuru
Apke Nagar Ki App…
திருபுவனம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பொற்கொடி உறுதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வள்ளாரேந்தல், பழையனூர் கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, பேருந்து வசதி, 100 நாள் வேலைவாய்ப்பு பணி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கவில்லை எனக் கூறியும் மாதம் ஒரு மணி மற்றும் ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் மேலும் குடிநீருக்காக சுமார் 3 கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பொற்கொடி அதிகாரிகளை ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
Devakottaigani news
திருபுவனம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பொற்கொடி உறுதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வள்ளாரேந்தல், பழையனூர் கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, பேருந்து வசதி, 100 நாள் வேலைவாய்ப்பு பணி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கவில்லை எனக் கூறியும் மாதம் ஒரு மணி மற்றும் ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் மேலும் குடிநீருக்காக சுமார் 3 கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பொற்கொடி அதிகாரிகளை ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல்,வீடியோ வைரல் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல். பக்தர்கள் அதிர்ச்சி. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பூசாரியாக முத்துக்குமார் என்பவர் வழிபாடு நடத்தி வருகிறார். இக்கோவிலில் பூஜை செய்வதற்காக தங்களுக்கும் உரிமை உள்ளதாக பூசாரி முத்துக்குமாரின் பங்காளிகள் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் முறையிட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்ற கொண்டிருக்கும் போது பக்தர்கள் முன்னிலையில் முத்துக்குமாரை அவரது பங்காளிகள் தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி நிலையில் இளையான்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவில் சன்னதியில் பூசாரி தாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.1
- திருவாடானையில் முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.1
- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை கொண்டாடி புதுக்கோட்டை மாவட்டத்தில் தவெக-வினரால் வைக்கப்பட்ட பதாகைகள் அவர்களாலேயே அகற்றப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து, அனைத்து அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்றக் கோரி போலீசார் வலியுறுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.3
- தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி *தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி* தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.1
- திருபுவனம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பொற்கொடி உறுதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வள்ளாரேந்தல், பழையனூர் கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, பேருந்து வசதி, 100 நாள் வேலைவாய்ப்பு பணி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கவில்லை எனக் கூறியும் மாதம் ஒரு மணி மற்றும் ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் மேலும் குடிநீருக்காக சுமார் 3 கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பொற்கொடி அதிகாரிகளை ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.1