Shuru
Apke Nagar Ki App…
வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி உடன் இருந்தனர்.
Naga Rajan
வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி உடன் இருந்தனர்.
More news from Tamil Nadu and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.1
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் 3கோடிக்கு ஆடுகள் விற்பனை, ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரைவிற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி1
- சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில், ரஸ்க் கம்பெனியில் பணிக்கு இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.1
- ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.7
- தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து 30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.1
- ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 7 மாதங்களில் பேரூராட்சி கோடிக்கணக்கில் ஊழல் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 15 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்முருகன் 4 ஆண்டுகளாக மேலாக செயல்பட்டு வருகிறார். சில மாதங்களாக பேரூராட்சி தலைவரும் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் புதிய குடிநீர் இணைப்புகள். கொசு மருந்து வாங்குவதில். மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் குழாய் மோட்டர்கள் வாங்குவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பொதுமக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்யவில்லை என செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஊர் பொதுமக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனை அறிந்த பேரூராட்சி ஊழியர்கள் போஸ்டர்கள் கிழித்து வருகின்றனர்.1
- சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபிநாதம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காவலர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சாலை விபத்து தவிர்ப்பது எப்படி, தலைக்கவசம் அணிவதும் வாகனம் ஓட்டும்போது செல்போன் தவிப்பதை அதிவேகமாக செல்வதை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி ஆசிரியர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்1