தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையின் அராஜகத்தை தடுக்க கோரி கலெக்டர் காலில் விழுந்த கதறிய குடும்பத்தால் பரபரப்பு தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையின் அராஜகத்தை தடுக்க கோரி கலெக்டர் காலில் விழுந்த கதறிய குடும்பத்தால் பரபரப்பு தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள வத்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது-சக்தி தம்பதியினருக்கு மேகநாதன் வெள்ளியங்கிரி முத்துலட்சுமி என்ற 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவம் என்பவரிடமிருந்து 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளனர். இந்த இடத்தில் இவர்கள் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பரமசிவத்தின் மருமகன் சாமிகண்ணு என்பவர் அடியாட்களுடன் வந்து மாது மற்றும் அவரது குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது நிலத்தை விட்டு வெளியேற கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந் வர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையின் அராஜகத்தை தடுக்க கோரி கலெக்டர் காலில் விழுந்த கதறிய குடும்பத்தால் பரபரப்பு தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையின் அராஜகத்தை தடுக்க கோரி கலெக்டர் காலில் விழுந்த கதறிய குடும்பத்தால் பரபரப்பு தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள வத்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது-சக்தி தம்பதியினருக்கு மேகநாதன் வெள்ளியங்கிரி முத்துலட்சுமி என்ற 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவம் என்பவரிடமிருந்து 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளனர். இந்த இடத்தில் இவர்கள் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பரமசிவத்தின் மருமகன் சாமிகண்ணு என்பவர் அடியாட்களுடன் வந்து மாது மற்றும் அவரது குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது நிலத்தை விட்டு வெளியேற கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந் வர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டனர். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் பேருந்து நிலையம், கட்சி அலுவலகங்கள், சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி தலைவர்களின் சிலை மூடப்பட்டது. ஆங்காங்கே ஒட்டப்பட்ட வால் போஸ்டர்கள், சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரப் பததைகள், கட்சி கொடிகள் என அனைத்தையும் நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் மூலம் தூய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டனர்.1
- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.1
- Post by R. Suresh1
- ஐயா எங்கு ஊரில் சிந்தாமணிப்பட்டி அருகில் சிந்தாமணிப்பட்டி டு பாளையம் நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி3
- தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்1
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரன் சாலையில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கார்த்திகேயன் என்பவர் கொண்டுவந்த 6 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.1
- தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் சதிஷ் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பேட்டி. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்களர்களை வாக்களிக்க தேவையான அனைத்து விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 85 வயதிற்க்கு மேற்பட்ட 9541 வாக்காளர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி அவர்கள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்குசாவடி மையத்தில் நேரடியாக சென்று வாக்களிக்க விரும்பினாலும் நேரடியாக சென்று வாக்களிக்கலாம், 11345 மாற்றுதிறனாளி வாக்களர்கள் உள்ளனர். 1596 வாக்குசாவடிகளிலும் அவர்களுக்கு தேவையான சாய்வுதளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் மாற்று திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் தரப்பட்டு அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முப்படை ரானுவத்தில் பணியாற்றும் 1601 வாக்களர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் நிறைவடையும் 10 தினங்களுக்கு முன்னர் வரை படிவம், 6, 7, 8 மூலம் புதிய இளம் வாக்காளர்களை சேர்த்து கொள்ள முடியும், வாக்களர்கள் வாக்களிக்க வசதியாக புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த அனைத்து வாக்களர்களுக்கும் தேவையான வசதிகள் தங்கு தடையின்றி செய்து தரப்படும், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 1500 லிருந்து 1200 வாக்களர்களாக குறைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்களித்து விட்டு செல்ல முடியும், மாவட்டத்தில் உள்ள 1596 வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் யாருடையை அச்சுறுத்தலும் இன்றி தைரியமாக வாக்களித்து செல்ல முடியும், வாக்களர்கள் பகுதி எண், பாகம் எண், எளிதாக கண்டறியும் வாக்கு சீட்டின் வலது புறத்தில் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. செல்போன்களை வாக்குசாவடி மையத்திற்க்குள் அனுமதி இல்லை என்பதால் செல்போன்கள் பாதுகாக்க வாக்கு சாவடி வெளியே தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது, வாக்களர்கள் செல்போனை அங்கே ஒப்படைத்து விட்டு வாக்கு செலுத்தி விட்டு திரும்பி செல்லும் போது பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குசாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்க்கு அப்பால் தான் மற்றவர்கள் இருக்க வேண்டும், வாக்களர்கள் மட்டுமே அதனை தாண்டி வர முடியும், இந்த முறை வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் கலர் புகைப்படபம் இடம் பெற்றுள்ளதால் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அனைத்து வாக்குசாவடி முகவர்களுக்கும் 17 சி என்றபடிவம் வழங்கப்படும், பெண்கள், மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும், ஒரே மையத்தில் 5 க்கு மேற்பட்ட வாக்கு சாவடி மையங்கள் இருந்தால் வார்டுகள் கண்டறியும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்படும், அனைத்து வசதிகள் மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 130 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது, அதற்கு தேவையான சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்ளனர்.அத்தகைய வாக்குசாவடிகள் தொடர்ந்து கண்காணிக்ப்பட்டு வருகிறது, 12 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை வன பகுதியில் உள்ளது அப்பகுதியில் உள்ள சாலைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் காண்காணித்து வருகிறோம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவனத்துடன் எடுத்து செல்ல வேண்டும். உரிய ஆவனமின்றி எடுத்து செல்லும் பணம் தங்க நகை பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கில் வைக்கப்படும், உரிய ஆவணங்கள் காட்டி பெற்று செல்லலாம். தர்மபுரி மாவட்டத்தில் கோட்டூர் மலை, ஏரிமலை கிராமங்களுக்கு இதற்கு முன்னர் வாக்கு எந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன, தற்போது டிராக்டர் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்தல் தொடர்பான புகார்களை சி.விஜில் என்ற ஆப்பிலும், 9443947017 என்ற செல்போனில் எண்ணிலும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.1
- கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது1
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.1