Shuru
Apke Nagar Ki App…
ஒகேனக்கலில் குவிந்த பயணிகள் கூட்டம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு, நேற்று ஜனவரி 01 ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். இதனால் பரிசல் பயணம் செல்லும் இடத்திலும், அருவிகளில் குளிக்கும் இடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
Raja
ஒகேனக்கலில் குவிந்த பயணிகள் கூட்டம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு, நேற்று ஜனவரி 01 ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். இதனால் பரிசல் பயணம் செல்லும் இடத்திலும், அருவிகளில் குளிக்கும் இடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று இருந்த நிலையில், நேற்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 10.5 பவுன் தங்க நகை 4 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்1
- ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் அருகே பெங்களூர் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.1
- Post by Moorthi Moorthi2
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சியில் இன்று ஜனவரி 1 புத்தாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாண்டு வரவேற்கும் பட்சத்தில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மற்றும் வண்ண வான வெடிகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன அனைத்து இல்லங்களிலும் வண்ணக் கோலங்கள் இட்டு மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்1
- வேடசந்தூர்: மாரம்பாடி புனித பெரிய அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோனியார் ஆலயம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்தின் பங்கு தந்தை சுரேஷ்சகாயராஜ், துணைப் பங்கு தந்தை அமல்ராஜ் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் மாரம்பாடி ஊர் மேனேஜர் மற்றும் நாட்டாமை, மணியக்காரர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.1
- இந்திய விண்வெளியின் புரட்சி நாயகன். யார் இவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.1
- லாரி மீது டிராவல்ஸ் வாகனம் மோதி விபத்து திருப்பத்தூரை சேர்ந்த 34 பக்தர்கள் டிராவல்ஸ் வாகனத்தில் பழனி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அலமேலுபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்றிருந்த ஈச்சர் லாரியின் மீது டிராவல்ஸ் வாகனம் மோதியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்1