logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

on 7 November
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukudi, Tamil Nadu•
on 7 November

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறை காற்றில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் உழவர் சந்தை மேற் கூறை காற்றில் பறந்தது. பகலில் பலத்த வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது
    1
    நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறை காற்றில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் உழவர் சந்தை மேற் கூறை காற்றில் பறந்தது. பகலில் பலத்த வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மேலகரம் பேரூர் நன்னகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    1
    தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மேலகரம் பேரூர் நன்னகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    12 hrs ago
  • 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    1
    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் காவல்துறை தடுப்பை மீறி கடலில் குதித்த போதை ஆசாமி. * மக்கள் அதிகம் கூடி இருந்த மாலை நேரத்தில் கடலில் உள்ளே சென்ற நபரால் அரைமணிநேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது, * கடலோர காவல்துறை சார்ந்த வீரர்களுக்கு போக்கு காட்டிய நபர் வட மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. * போராடி கரைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
    1
    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் காவல்துறை தடுப்பை மீறி கடலில் குதித்த போதை ஆசாமி.
* மக்கள் அதிகம் கூடி இருந்த மாலை நேரத்தில் கடலில் உள்ளே சென்ற நபரால் அரைமணிநேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது, 
* கடலோர காவல்துறை சார்ந்த வீரர்களுக்கு போக்கு காட்டிய நபர் வட மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 
* போராடி கரைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    12 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான். அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops, TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது. எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார். அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது,
சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான்.  அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். 
இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், 
எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops,  TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். 
எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. 
எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது.  எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார்.
அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை  ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    48 min ago
  • திமுகவை பற்றி கேவலமாக பேசும் பாஜக இணையதளத்தில் வெளியீடு
    1
    திமுகவை பற்றி கேவலமாக பேசும் பாஜக இணையதளத்தில் வெளியீடு
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்
    1
    கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார். மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார்.
மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.