Shuru
Apke Nagar Ki App…
மின் கம்பி உரசி வைக்கோல் லாரி தீ பிடித்து நாசம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றி க்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியதால் வைக்கோலில் தீப்பிடித்து புகைய தொடங்கியது. உடனே லாரி டிரைவர் அதை தாதப்பநாயக்கன்பட்டி பிரிவு சாலை ஓரம் நிறுத்தினார். அதற்குள் தீ வேகமாக பரவி எறிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை நேரம் போராடி வைக்கோல்களை அகற்றி தீயை அணைத்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சு.இரத்தினவேல்
மின் கம்பி உரசி வைக்கோல் லாரி தீ பிடித்து நாசம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றி க்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியதால் வைக்கோலில் தீப்பிடித்து புகைய தொடங்கியது. உடனே லாரி டிரைவர் அதை தாதப்பநாயக்கன்பட்டி பிரிவு சாலை ஓரம் நிறுத்தினார். அதற்குள் தீ வேகமாக பரவி எறிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை நேரம் போராடி வைக்கோல்களை அகற்றி தீயை அணைத்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Corp M4
- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.1
- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்1
- கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.4
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.1
- Post by மா.சுடலைமணி1
- அச்சம்பட்டியில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மதிமுக துணை பொதுச்செயலாளர் திமு ராஜேந்திரன் அறிமுக கூட்டம் இன்று நடந்தது இதில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்1