Shuru
Apke Nagar Ki App…
சிங்கம்புணரி மங்கள விநாயகர் மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்தரும் ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதற்கால யாகபூஜை நிறைவுபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகபூஜைகளுக்குப் பின் புனித தீர்த்த குடங்கள் கோவிலை வலம் வந்து விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சர்வ சாதகம் அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் ஏழு சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர். நிறைவாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
ABDUL SALAM
சிங்கம்புணரி மங்கள விநாயகர் மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்தரும் ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதற்கால யாகபூஜை நிறைவுபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகபூஜைகளுக்குப் பின் புனித தீர்த்த குடங்கள் கோவிலை வலம் வந்து விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சர்வ சாதகம் அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் ஏழு சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர். நிறைவாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிங்கம்புணரி மங்கள விநாயகர் மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்தரும் ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதற்கால யாகபூஜை நிறைவுபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகபூஜைகளுக்குப் பின் புனித தீர்த்த குடங்கள் கோவிலை வலம் வந்து விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சர்வ சாதகம் அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் ஏழு சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர். நிறைவாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குறும்பப்பட்டி அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரா பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.1
- வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது தற்போது புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவணம் 20 நிமிடமாக மழை பெய்து கொண்டிருக்கிறது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவர்ணம் கோவில்பட்டி முத்துரயன்பட்டி போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் மிகக் கடுமையான வெயில் அடித்த நிலையில் மாலை நாலு முப்பது முதல் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்1
- PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் மதுரை, ஆகஸ்ட் 28: பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, இன்று மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, PCR மற்றும் SC/ST சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழகத்தில் PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மை இல்லாமல் அல்லது பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 2. இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கான உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3. உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. 5. PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் தனி சட்ட ஆலோசகர் குழு அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 6. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனி ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார். — பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு1
- மணப்பாறை அருகே நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்து விபத்து rs5 லட்சம் பொருட்கள் சேதம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு பகுதியில் இன்று மாலை இயங்கி வந்த நகை பட்டறை ஒன்றில், எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. நடந்தது என்ன? பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வித்யாசங்கர் என்பவர், அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் நகை தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இன்று மாலையும் அவர் நகைகளைச் செப்பனிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நகை செய்யப் பயன்படுத்தப்படும் சிறிய ரக சிலிண்டரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வித்யாசங்கர் மற்றும் கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் சமயோசிதமாக உடனடியாக வெளியேறி அலறி அடித்து ஓடினர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. வானுயர எழும்பிய கரும்புகை: சிலிண்டர் வெடித்த வேகத்தில் பட்டறையில் இருந்த நகை செய்யும் நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களிலும் தீ அடுத்தடுத்து பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை வானுயர எழும்பி காட்சி அளித்தது. இதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதியும் அச்சமும் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் தீவிர நடவடிக்கை: விபத்து குறித்து உடனடியாக மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பரவி இருந்த தீயை மேலும் பரவ விடாமல் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். நல்வாய்ப்பாக ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தீ விபத்தில் பட்டறையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்ததில் சுமார் ₹5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறை அருகே பேருந்து வசதி கேட்டு கல்லூரி மாணாக்கர்கள் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு அடுத்த பண்ணப்பட்டி அருகே அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சரியான பேருந்து வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவிகள் சரியான நேரத்தில் கல்லூரிக்கு செல்ல இயலாமல் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். இதுகுறித்து பலமுறை எம்எல்ஏ மற்றும் எம்பி, அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.1