PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் மதுரை, ஆகஸ்ட் 28: பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, இன்று மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, PCR மற்றும் SC/ST சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழகத்தில் PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மை இல்லாமல் அல்லது பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 2. இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கான உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3. உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. 5. PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் தனி சட்ட ஆலோசகர் குழு அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 6. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனி ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார். — பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு

- PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் மதுரை, ஆகஸ்ட் 28: பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, இன்று மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, PCR மற்றும் SC/ST சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழகத்தில் PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மை இல்லாமல் அல்லது பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 2. இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கான உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3. உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. 5. PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் தனி சட்ட ஆலோசகர் குழு அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 6. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனி ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார். — பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு1
- திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு; நோயாளிகள் அவதி மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.1
- சிங்கம்புணரி மங்கள விநாயகர் மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்தரும் ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதற்கால யாகபூஜை நிறைவுபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகபூஜைகளுக்குப் பின் புனித தீர்த்த குடங்கள் கோவிலை வலம் வந்து விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சர்வ சாதகம் அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் ஏழு சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர். நிறைவாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.1
- காரியாபட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் இறக்காததால் பெண்கள் வாக்குவாதம் – ஓட்டுநரை செருப்பால் விரட்டியடிக்க முயன்றதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டதாக கூறி, 5 பெண்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று கல்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் 5 பெண்களும் இறங்க வேண்டிய நிலையில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருந்ததாகவும், இதனால் பேருந்தை வலையங்குளம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பெண்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களது செருப்புகளை கழற்றி ஓட்டுநரை விரட்டி விரட்டி அடிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு காரணமாக அரசு பேருந்து சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் ஓட்டுநரை பெண்கள் செருப்பால் விரட்டிய சம்பவமாக மாறியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.1
- வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!1
- காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்ப வேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சி சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பார்வையாளராக காங்கிரஸ் கமிட்டி தலைமை நியமிக்கப்பட்டுள்ள சிறுவை தா. ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள இயக்க மறுசீரமைப்பு எஸ்.எஸ்.2 திட்டம் தொடர்பாக விளக்க உரையை மாவட்ட தலைவர் வி. பாலசுப்பிரமணியன் மற்றும் தா. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து மண்டலம், மாவட்டம், ஒன்றியம், பேரூராட்சி அளவில் கலந்து கொண்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர்கள் முருகானந்தம், ரமேஷ், ராயப்பன், முருகேசன், ஆர். எஸ். கண்ணன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மௌனகுரு, பெனிக்ஸ் ராஜா, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் சேவியர், பிரான்சிஸ், கோனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, சிவசுப்பிரமணியன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்புகள் வேண்டி விருப்ப விண்ணப்ப மனுக்களை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் இடம் வழங்கினர். இந்நிலையில் கூட்ட அரங்கிற்கு வந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மதசார்பற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வலியினை பின்பற்றுவதாக கூறி மேலிட பார்வையாளர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.1
- குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்1