logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குறும்பப்பட்டி அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரா பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

8 hrs ago
user_Mayilvaganan
Mayilvaganan
திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
8 hrs ago

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குறும்பப்பட்டி அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரா பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நேற்று திருச்சி வழியாக சேலம் செல்லும் வழியில் எப்படி போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்று பாருங்கள்
    1
    நேற்று திருச்சி வழியாக சேலம் செல்லும் வழியில் எப்படி போக்குவரத்து நெரிசல் 
இருக்கிறது என்று பாருங்கள்
    user_நம்ம ஊரு ஆடானை 2
    நம்ம ஊரு ஆடானை 2
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!
    1
    வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு  பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. 
சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பாய்மரபடகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. இப்போட்டிக்கு 15 கடல் மைல்கள் தொலைவு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது. இப் போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
    1
    கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது
திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பாய்மரபடகு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன.
இப்போட்டிக்கு 15 கடல் மைல்கள் தொலைவு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள்
இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது.
இப் போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் மதுரை, ஆகஸ்ட் 28: பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, இன்று மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, PCR மற்றும் SC/ST சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழகத்தில் PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மை இல்லாமல் அல்லது பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 2. இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கான உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3. உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. 5. PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் தனி சட்ட ஆலோசகர் குழு அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 6. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனி ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார். — பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு
    1
    PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்
PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்
மதுரை, ஆகஸ்ட் 28:
பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, இன்று மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, PCR மற்றும் SC/ST சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மை இல்லாமல் அல்லது பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2. இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கான உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
5. PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் தனி சட்ட ஆலோசகர் குழு அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
6. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனி ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார்.
— பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
    1
    காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
    user_த.சுரேஷ்
    த.சுரேஷ்
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
    1
    மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
    user_Kalam karthikeyan
    Kalam karthikeyan
    திருப்புவனம், சிவகங்கை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முன சந்தை வலையப்பட்டி கிராமம் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. *புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முனசந்தை சேர்ந்த வலையப்பட்டி கிராம பகுதியில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய ஜீரணோதரன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் வளையம் பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் இணைந்து நடத்திய மகா கும்பாபிஷேக விழா கடந்த 27 8 2026 வியாழக்கிழமை தொடங்கி இரண்டாம் கால பூஜை ஆன இன்று கோயில் வளாகம் முன்பாக வைக்கப்பட்ட யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீரினை கலசத்தில் ஊற்றி யாகசாலையில் வைத்து இரண்டு தினங்களாக வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்று நிறைவு கால பூஜை கணபதி ஹோமம் முத்து முனீஸ்வரர் சுவாமி பரிவார ஸ்வாமிகளுக்கு கோ பூஜை நாடி சாந்தானம் போன்ற பூஜைகள் நடைபெற்று இறுதியாக பூர்ணாகதி பூஜையாக நிறைவு பெற்றது அதைத் தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீர் கலசத்தினை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி வேத மந்திரங்கள் முழங்க சரியாக 10:30 மணி அளவில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய கோபுரத்தில் கருட பகவான் வட்டமிட்டு கலசத்தில் ஊற்றப்பட்டது இதில் வளையம்பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் அதன் தொடர்ச்சியாக அருள்மிகு முத்து முனீஸ்வரர் கர்ப்பகிரகத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முன சந்தை வலையப்பட்டி கிராமம் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

*புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முனசந்தை சேர்ந்த வலையப்பட்டி கிராம பகுதியில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய ஜீரணோதரன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் வளையம் பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் இணைந்து நடத்திய மகா கும்பாபிஷேக விழா கடந்த 27 8 2026 வியாழக்கிழமை தொடங்கி இரண்டாம் கால பூஜை ஆன இன்று கோயில் வளாகம் முன்பாக வைக்கப்பட்ட யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீரினை கலசத்தில் ஊற்றி யாகசாலையில் வைத்து இரண்டு தினங்களாக வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்று நிறைவு கால பூஜை கணபதி ஹோமம் முத்து முனீஸ்வரர் சுவாமி பரிவார ஸ்வாமிகளுக்கு கோ பூஜை நாடி சாந்தானம் போன்ற பூஜைகள் நடைபெற்று இறுதியாக பூர்ணாகதி பூஜையாக நிறைவு பெற்றது அதைத் தொடர்ந்து  யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீர் கலசத்தினை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி வேத மந்திரங்கள் முழங்க சரியாக 10:30 மணி அளவில் அருள்மிகு முத்து முனீஸ்வரர் ஆலய கோபுரத்தில் கருட பகவான் வட்டமிட்டு கலசத்தில் ஊற்றப்பட்டது இதில் வளையம்பட்டி கிராமத்தார்களும் இளைஞர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் அதன் தொடர்ச்சியாக அருள்மிகு முத்து முனீஸ்வரர் கர்ப்பகிரகத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.
நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
    1
    வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
    user_த.சுரேஷ்
    த.சுரேஷ்
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.