Shuru
Apke Nagar Ki App…
காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
த.சுரேஷ்
காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.1
- டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹.30 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையில்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ₹.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். வீ கொடுக்கல் பயிர் கடன், நகைகடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது தற்போது புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவணம் 20 நிமிடமாக மழை பெய்து கொண்டிருக்கிறது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவர்ணம் கோவில்பட்டி முத்துரயன்பட்டி போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் மிகக் கடுமையான வெயில் அடித்த நிலையில் மாலை நாலு முப்பது முதல் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மணப்பாறை அருகே நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்து விபத்து rs5 லட்சம் பொருட்கள் சேதம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு பகுதியில் இன்று மாலை இயங்கி வந்த நகை பட்டறை ஒன்றில், எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. நடந்தது என்ன? பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வித்யாசங்கர் என்பவர், அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் நகை தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இன்று மாலையும் அவர் நகைகளைச் செப்பனிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நகை செய்யப் பயன்படுத்தப்படும் சிறிய ரக சிலிண்டரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வித்யாசங்கர் மற்றும் கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் சமயோசிதமாக உடனடியாக வெளியேறி அலறி அடித்து ஓடினர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. வானுயர எழும்பிய கரும்புகை: சிலிண்டர் வெடித்த வேகத்தில் பட்டறையில் இருந்த நகை செய்யும் நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களிலும் தீ அடுத்தடுத்து பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை வானுயர எழும்பி காட்சி அளித்தது. இதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதியும் அச்சமும் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் தீவிர நடவடிக்கை: விபத்து குறித்து உடனடியாக மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பரவி இருந்த தீயை மேலும் பரவ விடாமல் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். நல்வாய்ப்பாக ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தீ விபத்தில் பட்டறையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்ததில் சுமார் ₹5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குறும்பப்பட்டி அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரா பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.1
- புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் ஆத்தூர் தலைவாசல் கருமந்துறை பகுதிக்கு புதிய வழித்தடம் பேருந்தை தொடங்கி வைத்தார் மேலும் புதிய பேருந்து ஆத்தூர் பணி மணைக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..1
- வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.1
- மணப்பாறை அருகே பேருந்து வசதி கேட்டு கல்லூரி மாணாக்கர்கள் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு அடுத்த பண்ணப்பட்டி அருகே அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சரியான பேருந்து வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவிகள் சரியான நேரத்தில் கல்லூரிக்கு செல்ல இயலாமல் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். இதுகுறித்து பலமுறை எம்எல்ஏ மற்றும் எம்பி, அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.1