பாசிப்பட்டினம் கடலில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை மாயம்: 2-வது நாளாக தீவிரத் தேடுதல் வேட்டை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினம் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனமாரி (35). மீனவரான இவர், தனது மகன்கள் காளீஸ்வரன் மற்றும் சரத் ஆகியோருடன் தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதிகாலை 4 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மகன் சரத் தவறி கடலில் விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்தனமாரி, மகனைக் காப்பாற்றுவதற்காக உடனடியாகக் கடலில் குதித்துள்ளார். நீச்சல் தெரிந்த மகனை உயிருடன் மீட்க முடிந்தது. ஆனால், கடலில் ஏற்பட்ட வலுவான நீரோட்டம் காரணமாகச் சந்தனமாரி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். தகவலறிந்த கடலோரக் காவல் படையினரும் உள்ளூர் மீனவர்களும் உடனடியாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-வது நாளாகவும் அவர் கிடைக்காத நிலையில், தற்போது 'ஸ்கூபா டைவிங்' (Scuba Diving) வீரர்களைக் கொண்டு கடலின் அடியில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சோக சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாசிப்பட்டினம் கடலில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை மாயம்: 2-வது நாளாக தீவிரத் தேடுதல் வேட்டை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினம் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனமாரி (35). மீனவரான இவர், தனது மகன்கள் காளீஸ்வரன் மற்றும் சரத் ஆகியோருடன் தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதிகாலை 4 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மகன் சரத் தவறி கடலில் விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்தனமாரி, மகனைக் காப்பாற்றுவதற்காக உடனடியாகக் கடலில் குதித்துள்ளார். நீச்சல் தெரிந்த மகனை உயிருடன் மீட்க முடிந்தது. ஆனால், கடலில் ஏற்பட்ட வலுவான நீரோட்டம் காரணமாகச் சந்தனமாரி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். தகவலறிந்த கடலோரக் காவல் படையினரும் உள்ளூர் மீனவர்களும் உடனடியாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-வது நாளாகவும் அவர் கிடைக்காத நிலையில், தற்போது 'ஸ்கூபா டைவிங்' (Scuba Diving) வீரர்களைக் கொண்டு கடலின் அடியில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சோக சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- அதிகாரி வாங்காமல் போடுவாரா? என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் E -HUP திட்டத்தின் மூலம் தனியாரிடம் ஒப்படைக்கும் தவெக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைப்பதால் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்படுவதோடு, நீண்டகாலமாக இத்துறையை நம்பி வாழ்ந்துவரும் ஆவண ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாகக் கூறினர். எனவே பொதுமக்களின் நலன் மற்றும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் கூறினர். அப்போது காரைக்குடி பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஒருவர் பேசும்போது கூறுகையில் : அதிகாரிகள் வாங்காமல் போடுவாரா? என்றும், என்னதான் சரியான முறையில் பத்திரங்களை தயார் செய்து கொடுத்தாலும் 22A என்று சொல்லி மறுப்பதாகவும், கழுதைக்கு வாக்கப்பட்டால் உதைபட்டு தானே ஆக வேண்டும் என்றும் பேசினார். இது அங்கு இருப்பவர்கள் மத்தியில் ஒரு வித சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவண ஏற்பாட்டாளர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திருவாடானை இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வலியுறுத்தப்பட்டது.1
- செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவி,மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிலையில் கலந்து கொண்டு பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது பற்றி ஆடல் பாடல் மூலம் பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி புரிய வைத்தனர். பிறகு ஆசிரியர் தீபாவளி பண்டிகை பற்றியும் , பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது பற்றியும் கூறினார்கள்.இதில் பங்கு தந்தை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,பள்ளி மாணவ ,மாணவியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.1
- தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் அரங்கத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினார் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள்..! புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் பாக்ஸ் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்..!1
- ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டத்தில் ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டத்தில் ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலானது காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்ட கோவிலாக உள்ளது. நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கும் இங்கு பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது. இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணி முடிக்கப்பட்டதில் ஒருகோடி இருபது லட்சத்து நாற்பத்தி நான்காயிரத்து தொண்ணூற்று ஐந்து ரூபாய் பணம், 14 கிராம் தங்கம், 1 கிலோ 405 கிராம் வெள்ளி, 191 வெளிநாட்டு பணங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதி! 🚨 ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதி! பண்டிகைக் காலத்திலும் குறையாத மக்கள் கூட்டம்… அதிகரிக்காத பேருந்து வசதி! ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரையிலான வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் வெளியூர்களிலிருந்து சொந்த ஊருக்கு வரும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய போக்குவரத்துத் துறை, ஏன் போதிய பேருந்துகளை இயக்கவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை: ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கி, பண்டிகைக் காலங்களில் சிறப்புப் பேருந்துகளை ஏற்பாடு செய்து மக்களின் சிரமத்தைப் போக்க போக்குவரத்துத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அவதிக்கு எப்போது தீர்வு கிடைக்கும்? அதிகாரிகள் கவனிப்பார்களா? 📢 மக்களின் குரல்… இனியாவது அதிகாரிகளின் காதுகளில் ஒலிக்கட்டும்!2
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- பாசிப்பட்டினம் கடலில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை மாயம்: 2-வது நாளாக தீவிரத் தேடுதல் வேட்டை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினம் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனமாரி (35). மீனவரான இவர், தனது மகன்கள் காளீஸ்வரன் மற்றும் சரத் ஆகியோருடன் தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதிகாலை 4 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மகன் சரத் தவறி கடலில் விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்தனமாரி, மகனைக் காப்பாற்றுவதற்காக உடனடியாகக் கடலில் குதித்துள்ளார். நீச்சல் தெரிந்த மகனை உயிருடன் மீட்க முடிந்தது. ஆனால், கடலில் ஏற்பட்ட வலுவான நீரோட்டம் காரணமாகச் சந்தனமாரி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். தகவலறிந்த கடலோரக் காவல் படையினரும் உள்ளூர் மீனவர்களும் உடனடியாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-வது நாளாகவும் அவர் கிடைக்காத நிலையில், தற்போது 'ஸ்கூபா டைவிங்' (Scuba Diving) வீரர்களைக் கொண்டு கடலின் அடியில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சோக சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.1