logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகை அருகே தேவூர் அருள்மிகு குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலய மகா கும்பாபிஷேகம்; 400 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற விழாவில் திறளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலயம் அமைந்துள்ளது. முற்றிலுமாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி, அர்த்த மண்டம், அம்பாள் சன்னதி, விமானம், விநாயகர், சன்டிகேஸ்வரர் சன்னதிகள் புதிதாக அமைக்கப்பெற்று 400 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 2 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓதி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் உத்தரேசமுடையார், குதம்பை நாயகி அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

2 hrs ago
user_Chakravarthy
Chakravarthy
Nagapattinam, Tamil Nadu•
2 hrs ago

நாகை அருகே தேவூர் அருள்மிகு குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலய மகா கும்பாபிஷேகம்; 400 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற விழாவில் திறளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலயம் அமைந்துள்ளது. முற்றிலுமாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி, அர்த்த மண்டம், அம்பாள் சன்னதி, விமானம், விநாயகர், சன்டிகேஸ்வரர் சன்னதிகள் புதிதாக அமைக்கப்பெற்று 400 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 2 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓதி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் உத்தரேசமுடையார், குதம்பை நாயகி அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

More news from Thanjavur and nearby areas
  • தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலைகள் தெரியாதவாறு பனி மூட்டமாக இருந்ததால் வாகனத்தில் லைட்டுகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கினார்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்
    2
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலைகள் தெரியாதவாறு பனி மூட்டமாக இருந்ததால் வாகனத்தில் லைட்டுகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கினார்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்
    user_Saleem cctv technician
    Saleem cctv technician
    Electrician Pattukkottai, Thanjavur•
    6 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • விதைகள் அறக்கட்டளை சார்பில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அலுவகத்தில் கரூர் மாவட்ட சிறு குறு விவசாயிகள் மத்தியில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் புனிதாம்பிகா, இனுங்கூர் விதை சுத்திகரிப்பு நிலையம் வேளாண்மை அலுவலர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம், விதையின் வகைகள் அதன் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து தோகைமலை டிஎஸ்பிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கலந்து கொண்டு சவுக்கு மற்றும் தைலம் சாகுபடி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். அறக்கட்டளை நிறுவனர் அழகிரிசாமி கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை வைப்பது பாதுகாப்பது பற்றி விளக்கி கூறினார், அறக்கட்டளை நிறுவனர் சண்முகம் கலந்து கொண்டு தானியங்கள் முக்கியத்துவம், மதிப்பீட்டு முறை மற்றும் மலைப்பயிர்கள் வகைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இறுதியில் விதைகள் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஸ்வரன் நன்றி உரை ஆற்றினார். இதில் விவசாயிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    1
    விதைகள் அறக்கட்டளை சார்பில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி 
விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அலுவகத்தில் கரூர் மாவட்ட சிறு குறு விவசாயிகள் மத்தியில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 
இதில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் புனிதாம்பிகா, இனுங்கூர் விதை சுத்திகரிப்பு நிலையம் வேளாண்மை அலுவலர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம், விதையின் வகைகள் அதன் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து தோகைமலை டிஎஸ்பிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கலந்து கொண்டு சவுக்கு மற்றும் தைலம் சாகுபடி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
அறக்கட்டளை நிறுவனர் அழகிரிசாமி கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை வைப்பது பாதுகாப்பது பற்றி விளக்கி கூறினார், அறக்கட்டளை நிறுவனர் சண்முகம்  கலந்து கொண்டு தானியங்கள் முக்கியத்துவம், மதிப்பீட்டு முறை மற்றும் மலைப்பயிர்கள் வகைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இறுதியில்  விதைகள் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஸ்வரன் நன்றி உரை ஆற்றினார். இதில் விவசாயிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    21 hrs ago
  • மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். ​இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    1
    மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
​இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    1 hr ago
  • சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் ‌நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
    1
    சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் ‌நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு  பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் நெல் மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டையூர் கிழார் திருவாரூருக்கு உணவு பண்டங்கள் அனுப்பி வந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்ட போது  நெல்மலை ஒன்றை, இறைவன் தந்து மறைந்துள்ளார். தொடர்ந்து  அந்த நெல் மலையை திருவாரூருக்கு பூதகணங்கள் உதவியோடு கொண்டு செல்லும் ஐதீக விழா நெல் மகோற்சவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த பிப் 28 ம் தேதி துவங்கியது. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது‌. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ந்து  ஸ்ரீ கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை திருவாரூர் (ஆரூரில் ) சோ்ப்பிக்க  உத்தரவிட்ட நிலையில்,நெல் மலையோடு  பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.
    1
    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் நெல் மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டையூர் கிழார் திருவாரூருக்கு உணவு பண்டங்கள் அனுப்பி வந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்ட போது  நெல்மலை ஒன்றை, இறைவன் தந்து மறைந்துள்ளார். தொடர்ந்து  அந்த நெல் மலையை திருவாரூருக்கு பூதகணங்கள் உதவியோடு கொண்டு செல்லும் ஐதீக விழா நெல் மகோற்சவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த பிப் 28 ம் தேதி துவங்கியது.
தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது‌.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர்.
மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின.
தொடர்ந்து  ஸ்ரீ கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை திருவாரூர் (ஆரூரில் ) சோ்ப்பிக்க  உத்தரவிட்ட நிலையில்,நெல் மலையோடு  பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    5 hrs ago
  • வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    1
    வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம்  இன்று4:3:2026 புதன்கிழமை  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது  1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர்  
இந்த பேருந்து நிலையத்தில்  முன்பு இருந்ததைப் போல்  
15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை
தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ?
கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது
பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது?
தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை?
குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை?
மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது   தற்போது இல்லை ? 
பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது 
அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது  ..
இவன்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    14 hrs ago
  • மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. ​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    2
    மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.