Shuru
Apke Nagar Ki App…
இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
Devakottaigani news
இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.2
- சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் குரு முருகனாந்தம், தனது சொந்த தொகுதியான ராஜ கம்பீரத்தில் தொடக்கப்பள்ளியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். பொதுமக்களும் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் அமைதியான சூழல் நிலவிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.1
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.1
- *போலீசாரை கண்டித்து தொடரும்* *போராட்டம்* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியன் நடத்தலாம் ஆகவே தடியிடத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள சாவடியில் போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது தடியடி நடத்திய காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 4மணிநேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஐஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்போது வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.1
- தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கையில் நடந்த ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. சாதாரணமாக திருமண நாளில் புகைப்படங்கள், சடங்குகள், உறவினர்களின் கொண்டாட்டங்கள் எனவே நாளை கழிப்பார்கள். ஆனால், சிவகங்கை மேலவாணியங்குடியைச் சேர்ந்த ஹரி ஹர சுதன் – மேனகா தம்பதிகள், இந்த வழக்கத்தை உடைத்துள்ளனர். இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமணம் முடிந்ததும், இன்னும் மணமாலை கழிக்காமல், கல்யாண வேஷ்டி–சேலையிலேயே நேராக வாக்குச்சாவடிக்கு சென்றனர். அருகிலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், இருவரும் தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை முன்னிலைப்படுத்தினர். “கல்யாணம் வாழ்க்கையில் முக்கியம் தான்… ஆனா வாக்கு செலுத்துவது நாட்டுக்கு செய்யும் கடமை. அதனால தான் முதலில் இதை முடிச்சோம்,” என்று சிரிப்புடன் கூறிய ஹரி ஹர சுதன், இந்த நாளை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.1