Shuru
Apke Nagar Ki App…
தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் செய்தியாளர் சந்திப்பு தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஆணைய குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர் இன்று மாலையுடன் ஆய்வுகள் முடிவடைந்த நிலையில் சட்டமன்ற உறுதிமொழி ஆணையக் குழுவின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 33 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் 14 புதிய உறுதிமொழிகள் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்
Raja
தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் செய்தியாளர் சந்திப்பு தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஆணைய குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர் இன்று மாலையுடன் ஆய்வுகள் முடிவடைந்த நிலையில் சட்டமன்ற உறுதிமொழி ஆணையக் குழுவின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 33 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் 14 புதிய உறுதிமொழிகள் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்
More news from Tamil Nadu and nearby areas
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்.ஐ. மதியழகன் தரதரவென்று இழுத்து சென்றதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் காவல் நிலையம் முன்பு போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் பொதுமக்கள் அச்சம் பாலக்கோடு அருகே ஏர்ரணஹள்ளி அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் தேடி அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது இந்த நிலையில் இன்று காலை பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராம பகுதியில் நடந்த இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி தஞ்சம் அடைந்தது இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.1
- விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். உற்பத்தியில் வெளிப்படை தன்மை வேண்டும். வேட்டி சேலை உற்பத்தி செய்தவர்களுக்கு 3 ஆண்டாக நிலுவையில் உள்ள தொகை மற்றும் சீருடை உற்பத்தி செய்தவர்களுக்கு 6 ஆண்டு நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில தலைவர் G.N. சுந்தரவேல் பேட்டி* இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் டி.ஏ. கதிரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தேவராஜன் மாநில பொருளாளர் என்.காவேரி மாநில நிர்வாகி டி.ஆர்.கோதண்ட ராமன், காங்கிரஸ் கட்சி நாமக்கல் மாவட்டத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராககாங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கலந்து கொண்டார் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, நாமக்கல் மாவட்ட பொது செயலாளர் நந்தகோபால், மாவட்ட பொருளாளர் TST. பொன்னுசாமி, Ex மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மற்றும்சிவாஜி சேகர் தியாகராஜன் மயில்சாமி மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் நவீத், பொன்முடி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கூறியதாவது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கருதி விலை இல்லா வேட்டி திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப் பட்டது ஆனால் அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை வழங்கப் படுவதில்லை. இரண்டு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது அந்த நிலையை போக்கி ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குகின்ற வகையிலே உற்பத்தி திட்டம் வழங்க வேண்டும். உற்பத்தி திட்டமானது வெளிப்படை தன்மையாக வழங்கப் படுவதில்லை. அது அனைத்து பகுதிகளிலும் புகாராக இருந்து வருகிறது. உற்பத்தி திட்டம் வழங்கப்படும் போது வெளிப்படை தன்மையாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு ஆறாண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது எனவே இதையெல்லாம் உடனடியாக தமிழக அரசு கலைய வேண்டும் அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்குவதன் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கூட்ட முடியும். எனவே வேட்டி வேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் .அடுத்து அனைத்து நெசவாளர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாகவும் உதவித்தொகையாகவும் மருத்துவ பயன்பாடு என்பது வசதி படைத்தவர்களுக்கு இருக்கின்ற ஒரு மருத்துவ பயன்பாடு போல ஒவ்வொரு எளிய மக்களுக்கும் அதே ரீதியாக மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். அடுத்து ஆண்டு முழுவதும் ரிபேட் தள்ளுபடி தள்ளுபடி என்பது இப்போது 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது மேலும் 60 வயதை கடந்த அனைத்து நெசவாளர்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசையும் தமிழக முதல்வர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். என கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை எங்கள் தலைவர் முடிவு செய்வார். அவர் யாருடன் கூட்டணி என அறிவிக்கிறாரோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர் வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.1
- Post by Gaurav Mohore4
- தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாலிபால் வாலிபால் கபடி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி. நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தமிழகமெங்கும் திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் திராவிட பொங்கல் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.08) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கனஅடியாக குறைந்துள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1