logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வேநல்லசிவன் தகவல் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வார வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து விதகல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைநாடுநர்களின் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளார்.

1 day ago
user_Flower
Flower
Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
1 day ago
be6bd08f-9e97-4ba0-ac15-f187317c7019

திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வேநல்லசிவன் தகவல் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வார வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை

0740637b-f669-4b58-ba42-aa1391ed5273

நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து விதகல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைநாடுநர்களின் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    3
    மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்!
மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப்
சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும்.
அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும்.
எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும்.
இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    12 min ago
  • பாலக்கோடு அருகே ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! பாலக்கோடு அருகே ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கீழ்கொள்ளூப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம் முழங்க மங்கள இசையுடன் பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பூக்களால் அலங்கரித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதையடுத்து அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். . இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
    2
    பாலக்கோடு அருகே ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
பாலக்கோடு அருகே ஸ்ரீஊர்மாரியம்மன்  கோயில்  கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கீழ்கொள்ளூப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி,
ஸ்ரீஊர்மாரியம்மன்  கோயில்  மகாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, 
இன்று அதிகாலை  முதலே  கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், 
பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம் முழங்க மங்கள இசையுடன்  பூர்ணாஹதி நடைப்பெற்றது.
இதையடுத்து  யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை  கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து  திருக்குட நன்னீராட்டு செய்து   தீபாரதனை காட்டினார். 
பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி,
ஸ்ரீஊர்மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பூக்களால் அலங்கரித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதையடுத்து
அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி,
ஸ்ரீஊர்மாரியம்மன்   சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
.
இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை  விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால்,
 போக்குவரத்து பாதிப்பு.
ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால்,
போக்குவரத்து பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    1 hr ago
  • கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஜிப்சி இல்லத்தில் உள்ள நாடோடி  குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் வழங்கினார். கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் அமைந்துள்ள ஜிப்சி ஏழை எளிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் 81வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது,
    1
    கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஜிப்சி இல்லத்தில் உள்ள நாடோடி  குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் வழங்கினார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் அமைந்துள்ள ஜிப்சி ஏழை எளிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுடன்
முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் 81வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது,
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர்  பாமகவில்  இணைந்தனர்.
    1
    வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் 

பாமகவில்  இணைந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    35 min ago
  • கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி..! தருமபுரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. போட்டிகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பாராட்டுக்குரியது என்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும், தவறான பழக்கவழக்கங்களில் இருந்து விலகி உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் கூறினார். மேலும், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆவின் பால் கொள்முதல் சற்று சரிந்துள்ளதாகவும், பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்குவதால் கால்நடை வளர்ப்போர் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர். மேலும், மாட்டுத்தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சட்டப்பேரவையில் மழைநீர் வெளியேறுவதற்கான வசதி மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பேசியதாகவும், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், விளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய மைதானமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு அரசு சமீபத்தில் சுமார் ரூ.6,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் சுமார் ரூ.14,000 கோடி விவசாயக் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேருந்து நிலைய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேவைப்பட்டால் பேருந்து நிலைய பிரச்சனைக்காக பாமக உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்றும் கூறினார். தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து கழிவுநீர் காவிரியில் கலக்கப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல தண்ணீரில் கழிவுநீர் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தருமபுரி மாவட்டத்தில் தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தொடர்ந்து இயக்குவதற்காக அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் கரும்புகளை அரவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கரும்பு சாகுபடி குறைந்து வரும் நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி மற்றும் பாமக நிர்வாகிகள் பெரியசாமி, மாது, நம்பிராஜன், வாசு நாயுடு உள்ளிட்டோர், மகளிர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி..!
தருமபுரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. போட்டிகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பாராட்டுக்குரியது என்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும், தவறான பழக்கவழக்கங்களில் இருந்து விலகி உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் கூறினார்.
மேலும், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆவின் பால் கொள்முதல் சற்று சரிந்துள்ளதாகவும், பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்குவதால் கால்நடை வளர்ப்போர் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர். மேலும், மாட்டுத்தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சட்டப்பேரவையில் மழைநீர் வெளியேறுவதற்கான வசதி மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பேசியதாகவும், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், விளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய மைதானமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் சுமார் ரூ.6,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் சுமார் ரூ.14,000 கோடி விவசாயக் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேருந்து நிலைய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேவைப்பட்டால் பேருந்து நிலைய பிரச்சனைக்காக பாமக உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்றும் கூறினார்.
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து கழிவுநீர் காவிரியில் கலக்கப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல தண்ணீரில் கழிவுநீர் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தொடர்ந்து இயக்குவதற்காக அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் கரும்புகளை அரவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கரும்பு சாகுபடி குறைந்து வரும் நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி மற்றும் பாமக நிர்வாகிகள் பெரியசாமி, மாது, நம்பிராஜன், வாசு நாயுடு உள்ளிட்டோர், மகளிர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி: அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் வாலிபால் உள்ளிட்ட அனைத்து அணிகளையும் மாநில போட்டிக்கு பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும் எனவும், தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து பேசியவர், தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
    1
    தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி: 
அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு  
தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,  அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் வாலிபால் உள்ளிட்ட அனைத்து அணிகளையும் மாநில போட்டிக்கு பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும் எனவும், 
தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து பேசியவர்,
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் 
இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது,
மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது,
தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.