கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில் மனை, புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. நாகை மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, கோவில் மனை மற்றும் பல்வேறு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவில் மனை, ஆற்றுப் புறம்போக்கு, சாலைப் புறம்போக்கு, குளம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், தினக்கூலியை ரூ.700-ஆக உயர்த்தி, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், விவசாய சங்கம் ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- மிகவும் பழமை வாய்ந்த பெருமை வாய்ந்த ஆலயத்தை கும்பாபிஷேகம் அரியலூர் - பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளது. இக்கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை, கோவிலை பூனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது கிராம மக்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கோயில்களை புணரமைத்து புதுப்பித்தனர். கோவில் வளாகம் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்றாம் கால யாக பூஜைகள் முடிவுற்று, யாத்ரா தானம் கடம் புறப்பாடு, மேளதாளத்துடன் தொடங்கியது. புனித கலசத்தை எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மாரியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்ததோடு சுவாமி தரிசனம் செய்தனர். தவுத்தாய்குளம் அம்மாகுளம் ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா.திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள்,இளைஞரணியினர்,தகவல்தொழில்நுட்ப அணியினர் மற்றும் அனைத்து சார்பு நிலை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- தந்தை பெரியாரின் 148 பிறந்தநாள் விழா அமைச்சர் பர்வேஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்2
- தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது .இதனை அடுத்து அரிமளம் தெப்ப குளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிமளம் பசுமை மீட்பு குழு வரத்து வாரிகளை தூய்மை செய்ததன் பேரில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்1
- காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணியில் விநாயகர் சிலை கரைத்தனர் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணி விநாயகர் சிலை கரைத்தனர் பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் கரைத்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.2
- ஒரத்தூரில் வாகனங்களில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்.நேற்று இரவு நடைப்பெற்றது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஒரத்தூரில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைள் வைத்து வழிபட்டனர். ஒரத்தூரில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர்ந்து 3 நாட்கள் பூஜைகள் நடந்தது. பிரதிஷ்டை செய்து 3வது நாளான நேற்று இரவு விசர்ஜன ஊர்வலம் நடைப்பெற்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தனித் தனி வாகனங்களில் புறப்பட்டு ஹிந்து முன்னணி சார்பில் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வாகனங்களில் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் நடைபெற்றது. பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் சிவன் கோயில் திடலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்றதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. வான வேடிக்கைகளுடன் வாத்தியங்கள் முழங்க தொடங்கிய ஊர்வலத்தில் விழாக்குழு விநாயகருடன், நகரில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாட்டுக்கல், வலையபட்டி, புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்துநிலையம் வழியாக வந்து அமரகண்டான் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.1
- “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇1