புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தினையாகுடி திருநெல்லிவயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரத்து முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இவ்விழா, தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் களைகட்டியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று காலை வேத விற்பன்னர்களின் மந்திர ஓசையுடன் நடத்தப்பட்டது. புனித கலசங்களில் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் ஆலய விமான கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் இனிதே நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தினையாகுடி, திருநெல்லிவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகுடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தினையாகுடி திருநெல்லிவயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரத்து முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இவ்விழா, தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் களைகட்டியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று காலை வேத விற்பன்னர்களின் மந்திர ஓசையுடன் நடத்தப்பட்டது. புனித கலசங்களில் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் ஆலய விமான கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் இனிதே நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தினையாகுடி, திருநெல்லிவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகுடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த செஸ் சாம்பியன் சபரிநாதன், குக்கிராமத்தில் பிறந்து ஒழுகும் ஓலைக் குடிசையில் வளர்ந்து வருகிறார். கடுமையான வறுமையின் பிடியிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்து வரும் இவர், உலக செஸ் மேடைக்கு முன்னேற வேண்டும் என்ற கனவுடன் போராடி வருகிறார். சபரிநாதனின் தந்தை ஐயப்பன் தினசரி கூலித் தொழிலாளியாகவும், தாய் மேனகா குடும்பத்தை நடத்தப் போராடுபவராகவும் உள்ளனர். சாட்டியக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சபரிநாதன், ஒன்றாம் வகுப்பு முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, தனது தம்பி சரணுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற இவர், அதன் பிறகு அரசு மற்றும் தனியார் நடத்திய பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைக் குவித்துள்ளார். கடந்த ஆண்டு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 46வது இடத்தைப் பிடித்து தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்த சபரிநாதன், திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த போட்டிகளிலும் பங்கேற்று ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட கோப்பைகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று, இளம் வயதிலேயே "சதுரங்க நாயகன்" என அழைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார். எனினும், இந்த சாதனைகளின் பின்னணியில் ஒழுகும் கூரை வீடு, பொருளாதாரச் சிரமம் மற்றும் அடிப்படை வசதிகளே இல்லாத வாழ்க்கை எனப் பல கசப்பான உண்மைகள் உள்ளன. செஸ் பயிற்சிக்குத் தேவையான டைமர் மற்றும் லேப்டாப் போன்ற உபகரணங்களை வாங்க முடியாத நிலை உள்ளதோடு, தினசரி கூலி வேலைக்குச் செல்லும் தந்தையை சிரமப்படுத்த விரும்பாத சபரிநாதன், தனது மனக் கவலைகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக உள்ளார். "எனக்கு இன்னும் நிறைய போட்டிகளில் வெல்லணும்… நாட்டுக்கு பெயர் வாங்கணும்…" என்று ஆசைப்படும் இந்த திறமையான மாணவனுக்கு அரசு உதவி கிடைத்தால், அவர் இன்னும் பல உயரங்களை அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை. வறுமையை வென்று உலக மேடையில் சாதனை படைக்கத் துடிக்கும் இத்தகைய திறமையாளர்களை அரசு கவனித்து, தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு ஊக்குவிக்கப்படும்போதுதான் தமிழகம் விளையாட்டுத் துறையில் மேலும் உயரங்களை அடையும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மதுரை மாவட்டம், துரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியில் கடந்த ஜூன் 19ஆம் தேதி பகலில் பாலாஜி என்ற வாலிபர் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையைச் செய்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் ஐந்து நபர்களை ஏற்கனவே கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பூவலிங்கமும் பின்னர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான மௌன முனீஸ் மற்றும் சண்முகம் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாலாஜியின் உறவினர்களும், தலித் அமைப்பினரும் இன்று (ஜூன் 24) அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அம்பேத்கர் சிலை முன்பு கூடியிருந்த போராட்டக்காரர்களிடம், முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, உறவினர்கள் கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.1
- இன்று செம்போடையில், தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் தனியார் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தவெக மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமை தாங்கினார். அவர் மாணவர்களுக்கு பயண அட்டைகளை வழங்கியதுடன், சிறப்பு பேருந்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தனியார் பேருந்து உரிமையாளர் குணபாலன் செய்திருந்தார். விஜயின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு இந்த இலவச பேருந்து பயண வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் தீவிர முயற்சியால், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய தீர்ப்பை வழங்கினார்.1
- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள குச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்போடும் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்த புனித நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.1
- திண்டுக்கல்லில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அன்னதான விழாவானது 2வது வார்டு செயலாளர் நா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் குரு அருண் மற்றும் நகரக் கழகத் துணைச்செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது. நகர இணைச்செயலாளர் சூர்யா, மாவட்ட பொறுப்பாளர் குட்டி மதன், நகர தொண்டரணி அமைப்பாளர் விசாகன், வழக்கறிஞர் கணேஸ்குமார், கோபி, ரஞ்சித், பால்ராஜ், சரவணக்குமார், அருண்குமார், ஆண்டவன், தமிழரசன், சுபாஸ் உள்ளிட்ட பல உறுப்பினர்களும், நகரக் கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் 2வது வார்டு பகுதிகளான பெரியாஞ்செட்டிபட்டி மற்றும் இருளக்குடும்பன்பட்டியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.4
- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரை காவல்துறையினர் சிறைபிடித்துள்ளனர்.1
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அண்ணா கூட்டுறவு நூற்பாலை, போதுமான பராமரிப்பு இல்லாததாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலை உற்பத்தி செய்யும் நூல்கள் அரசு துறைகளுக்கு, குறிப்பாக இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நட்டத்தில் இயங்கும் அரசு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது; இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் செயல்படும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் உற்பத்தித்திறன், பணியாளர்களின் எண்ணிக்கை, மற்றும் நட்டத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நூற்பாலையின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பதையும், அதற்கான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆலை மீண்டும் நல்ல முறையில் செயல்படவும், தரம் உயர்த்தப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தனியார் ஆலைகளுக்கு நிகராக அரசு நூற்பாலைகளை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் மேம்பாட்டிற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மாவட்ட செயலாளர்கள் லெப்ட் பாண்டி, பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.2