Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் : விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம்-2026 பணி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். விளம்பரங்கள் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்
Naga Rajan
காஞ்சிபுரம் : விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம்-2026 பணி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். விளம்பரங்கள் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்
More news from Tamil Nadu and nearby areas
- தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக புகை இல்லா போகி விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திருமதி லதா அவர்கள் புகையில்லாத போகி விழிப்புணர்வு பேரணியை கொடியாசித்து துவக்கி வைத்தார் இந்தப் பேரணி சேவல் ஐயா இல்லத்தில் இருந்து தொழில் மையம் ஒட்டப்பட்டி வழியாக சென்று மீண்டும் தேவையா இல்லத்தில் பேரணையானது நிறைவு பெற்றது இந்த பேரணியில் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி இந்தியன் பிலர்ஸ் நிறுவனர் வினோத் குமார் அதியமான் கோட்டை ராமன் ஜெயம் யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜெயப்பிரியா மற்றும் சேவாலயா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் உடன் கல்லூரி பேராசிரியர்கள் ரஞ்சிதா .நந்தினி. குமுதா .கல்லூரி துணைப் பேராசிரியர் சந்தியா .கல்லூரி அலுவலக மேலாளர் அனிதா .கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதி பாசு ஆகியோர் ஒன்றிணைந்து பேரணியை நடத்துகிறார்கள் பேரணி முடிந்த பிறகு பொது மக்களுக்கு தலைக்கவசம் அணிவதுடைய நன்மைகளைப் பற்றி காவல்துறை கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது காவல் ஆய்வாளர் லதா அவர்கள் வாகனத்தில் சென்று வந்தவர்களுக்கு பூச்செடி கொடுத்து புகையில்லா போகி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பெண்கள் பாதுகாப்பு பெண்களுடைய அவசர எண் பெண்களுடைய பாலியல் துன்புறுத்தல் சட்டங்களை பற்றி காவல் ஆய்வாளர் லதா அவர்கள் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இறுதியாக கல்லூரி தாளாளர் மாணவ மாணவிகளுக்கும் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு மற்றும் அனைத்து பொது மக்களுக்கும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நன்றி கூறினார்...1
- பொங்கலை முன்னிட்டு இன்று வெளியான வா வாத்தியார் படத்தை பார்க்க திருப்பூர் திரையரங்கிற்கு வந்த நடிகர் கார்த்திக். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் படம் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. படத்தின் மீதான வரவேற்பு குறித்து படக்குழுவினர் திரையரங்கங்களுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து படம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் வெளியான வா வாத்தியார் திரைப்படத்தை காண்பதற்காக நடிகர் கார்த்திக் வருகை தந்தார். திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம், கார்த்தி ஆகியோர் வரவேற்றார். தொடர்ந்து திரையரங்கிற்குள் சென்ற கார்த்திக் மக்களுடன் அமர்ந்து தான் நடிப்பில் வெளியாகி உள்ள வாத்தியார் திரைப்படத்தை பார்த்து வருகிறார்.1
- தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது1
- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன1
- எடப்பாடியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது... தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டியானது காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது... மேலும் இந்த ஓவியப் போட்டியில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது,ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்,அதிக வேகமாக செல்ல கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகள் ஓவியத்தை வரைந்தனர்... மேலும் சாலை விபத்து குறித்து பள்ளி மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் எடுத்துக் கோரி பேசினார். அதன் பின்னர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.இதில் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், தலைமை ஆசிரியர் செந்தில் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்...1
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை. 82 வயதான இவர் தொடர்ந்து 12வது ஆண்டாக தனது அன்பு மகளுக்கு பொங்கல் சீரை சுமார் 17 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே கொண்டு செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் வீட்டிற்கு பெண் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் பழக்கமாக உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை -அமிர்தவள்ளி தம்பதியருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுந்தராம்பாளை சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்ட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்தள்ளது. அதற்கு முன்பு வரை ஆயிரம் ரூபாய் பொங்கல் சீராக வழங்கி வந்த செல்லத்துரை மகளுக்கு குழந்தை பிறந்த தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 12 ஆண்டு காலமாக பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும் மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தலையில் கரும்பு கட்டும், சைக்கில் கேரியரில் சீர் பொருட்க்களையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் சுமார் 17 கிமீ பயணம் செய்து பொங்கல் சீர் வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் 82 வயதிலையும் அவரது சைக்கிளில் விவேகானந்தர் காலண்டர் தேங்காய் பழம் மஞ்சள் கொத்து வேட்டி துண்டு பொங்கல் பூ பச்சரிசி வெள்ளம் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார். வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத் தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியந்து வருவதோடு முதியவருக்கு கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். காலங்கள் கடந்தும் தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும் தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு பாரம்பரியமாக சைக்கிளையே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகி கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.1
- தர்மபுரி நகராட்சி பள்ளியில் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பொங்கல் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் திமுக நகர மன்ற தலைவர் நாட்டார் மாது மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1