Shuru
Apke Nagar Ki App…
RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
RR AARI WORK
RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
More news from Tamil Nadu and nearby areas
- திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு; நோயாளிகள் அவதி மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய குடிநீர் வாகனம் – மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!1
- PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் மதுரை, ஆகஸ்ட் 28: பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, இன்று மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, PCR மற்றும் SC/ST சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழகத்தில் PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மை இல்லாமல் அல்லது பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 2. இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கான உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3. உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. 5. PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் தனி சட்ட ஆலோசகர் குழு அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 6. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனி ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார். — பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு1
- நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளது . இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது . அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று இரண்டாவது நாளான நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது . இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை நடைபெற்றது . அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் கோவிலை வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்1
- ஓட்டப்பிடாரம் அருகே கால்நடை மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் 1997 ஆம் ஆண்டு எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆதி திராவிட நலத்துறை மூலம் குடியிருப்பு மனை பட்டா வழங்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரன்லிங்கம் நகர் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி இன்று வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள நிலத்தை இங்குள்ள விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அதனை மேச்சல் தரையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு மோசடி பேர்வழிகளால் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மோசடி செய்து மேற்கண்ட நிலத்தை தற்போது முள்வேலி அமைத்துள்ளனர். மேலும் அந்த வழியாகத்தான் வீரன் சுந்தரலிங்கம் நகருக்கு குடிநீர் பைப் லைனும் செல்கிறது. அந்த பைப் லைனையும் உடைத்து விட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே மேற்கண்ட தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்த நிலத்தை, எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி மேற்படி விவசாயிகள் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலத்தை கையகப்படுத்தி வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்த மக்களுக்கே இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். வட்டாட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் கூறினார்1
- மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.1
- தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது1
- CPI(M) தேனி தாலுகா குழு சார்பில் சாமதர்மபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்ட் தேனி தாலுகா குழு சார்பில் மாவட்ட குழு தலைவர் ஜெயபாண்டி தலைமையில் தேனி சமதர்மபுரத்தில் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தேனி நகர் புறவழிச்சாலையை திறந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ரோடு தெருவிளக்கு குடிநீர் குப்பைகளை அகற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தாலுகா செயலாளர் தர்மர் வெங்கடேசன் நாகராஜன் ஆறுமுகம் தர்மர் வெண்மணி அண்ணாமலை முருகன் சத்தியா மற்றும் தேனி தாலுகா குழு உறுப்பினர்கள் வீரமணி முத்துக்குமார் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்1
- ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவு சபரிமலை நடை அடைப்பு ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவு அடைக்கப்பட்டது பிரசித்தி பெற்ற சபரிமலை நடை அடுத்து மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறப்பு!! * "ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவுற்று பிரசித்தி பெற்ற சபரிமலை நடை அடைக்கப்பட்டது. * நடை திறக்கப்பட்ட ஆகஸ்ட் 24ம் தேதியிலிருந்து சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி வழக்கமான பூஜைகள் செய்தார். * திருவோண நட்சத்திர தினமான ஆகஸ்ட் 26ம் தேதி "ஓணம் பண்டிகை" நாளன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. * இரு முடியோடு 18ம் படியேறி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். * ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நிறைவுற்று இன்று (ஆகஸ்ட் 28ம் தேதி) இரவு 10 மணிக்கு "ஹரிவராசனம்" பாடி நடை அடைக்கப்பட்டது. * அடுத்து மலையாள "கன்னி" மாதம் மற்றும் தமிழின் "புரட்டாசி" மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. * செப்டம்பர் 21ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1