logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகை டாட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெறும் மின்னொளி கைப்பந்து போட்டி நாகப்பட்டினம் டாட்டா நகரில் பாண்டியன் தியேட்டர் பின்புறம் உள்ள வெ.சி விளையாட்டு மைதானத்தில் ம.வெ. சிங்காரவேலவர் நற்பணி மன்றம் நடத்தும் 39 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று மே 1 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூரணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இப் போட்டியில் கலந்து கொள்ள நுழைவு கட்டணமாக ரூபாய் 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 hrs ago
user_Manikandan
Manikandan
Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
2 hrs ago

நாகை டாட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெறும் மின்னொளி கைப்பந்து போட்டி நாகப்பட்டினம் டாட்டா நகரில் பாண்டியன் தியேட்டர் பின்புறம் உள்ள வெ.சி விளையாட்டு மைதானத்தில் ம.வெ. சிங்காரவேலவர் நற்பணி மன்றம் நடத்தும் 39 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று மே 1 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூரணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இப் போட்டியில் கலந்து கொள்ள நுழைவு கட்டணமாக ரூபாய் 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகப்பட்டினம் டாட்டா நகரில் பாண்டியன் தியேட்டர் பின்புறம் உள்ள வெ.சி விளையாட்டு மைதானத்தில் ம.வெ. சிங்காரவேலவர் நற்பணி மன்றம் நடத்தும் 39 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று மே 1 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூரணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இப் போட்டியில் கலந்து கொள்ள நுழைவு கட்டணமாக ரூபாய் 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    1
    நாகப்பட்டினம் டாட்டா நகரில் பாண்டியன் தியேட்டர் பின்புறம் உள்ள வெ.சி விளையாட்டு மைதானத்தில் ம.வெ. சிங்காரவேலவர் நற்பணி மன்றம் நடத்தும் 39 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று மே 1 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூரணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக  20,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இப் போட்டியில் கலந்து கொள்ள நுழைவு கட்டணமாக ரூபாய் 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரவு நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.பின்பு அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் சோமஸ்கந்தர் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள மகாதீபாரதனை காண்பிக்கபட்டது.இரவு நடைபெற்ற தெப்ப உற்சவம் விழாவில் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறை, காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    1
    வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரவு நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.பின்பு அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில்
சோமஸ்கந்தர் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள மகாதீபாரதனை காண்பிக்கபட்டது.இரவு நடைபெற்ற தெப்ப உற்சவம் விழாவில் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறை, காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • நாகை: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வருவதாக தகவல் வெளிவந்ததன் பேரில் ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக பேராலயத்திற்கு விரைந்து வந்து இரவு முழுவதும் காத்துக் கிடந்து முதல் பூஜையில் விஜய் வழிபடுவார் என தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப கூட்டங்களை கட்டுக்கடங்காமல் கூட்டங்கள் அலைமோதி விஜய் டிவி கே விஜய் டிவி கே என்று கோஷமிட்டு கூச்சலிட்டனர். ஒரு வழியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரவில்லை என்று தெரிந்தும் கூட்டம் விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
    2
    நாகை: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வருவதாக தகவல் வெளிவந்ததன் பேரில் ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக பேராலயத்திற்கு விரைந்து வந்து இரவு முழுவதும் காத்துக் கிடந்து முதல் பூஜையில் விஜய் வழிபடுவார் என தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப கூட்டங்களை கட்டுக்கடங்காமல் கூட்டங்கள் அலைமோதி விஜய் டிவி கே விஜய் டிவி கே என்று கோஷமிட்டு கூச்சலிட்டனர். ஒரு வழியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரவில்லை என்று தெரிந்தும் கூட்டம் விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    13 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள கரைகாத்த முனியாண்டவர் கோயில் 54-ஆம் ஆண்டு சித்திரைபௌா்ணமி  பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து  சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர். அதனை  தொடா்ந்து, முணியாண்டவருக்கு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது.  விழாவில்  வங்காரம்பேட்டை அரையபுரம் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் 
பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள கரைகாத்த முனியாண்டவர் கோயில் 54-ஆம் ஆண்டு சித்திரைபௌா்ணமி  பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து  சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள்
வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.
அதனை  தொடா்ந்து, முணியாண்டவருக்கு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது. 
விழாவில்  வங்காரம்பேட்டை அரையபுரம் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள் கடை வீதியில் திடீரென தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் ஐந்தாம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவருடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தான் மனையில் நடைபெற உள்ள கிடா வெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடை வீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து செல்லும் பொழுது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அவரது மனைவி தன்ராஜிடம் என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறினார். உடனடியாக தன்ராஜும் அவரது மனைவி மலரும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்தவர்கள் நீரினை ஊற்றி அணைக்க முயன்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் போராடி அதீயினை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிந்து நாசமாயின தற்போது இந்த இருசக்கர வாகனம் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள் கடை வீதியில் திடீரென தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் ஐந்தாம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவருடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தான் மனையில் நடைபெற உள்ள கிடா வெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடை வீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து செல்லும் பொழுது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அவரது மனைவி தன்ராஜிடம் என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறினார். உடனடியாக தன்ராஜும் அவரது மனைவி மலரும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்தவர்கள் நீரினை ஊற்றி அணைக்க முயன்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் போராடி அதீயினை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிந்து நாசமாயின தற்போது இந்த இருசக்கர வாகனம் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    3
    திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. 
இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார்.
இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது.
மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல்  உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர்
இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல்  உருவாகியது 
இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    25 min ago
  • எட்டுக்குடி ஸ்ரீ முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பால்காவடிகள், ரதக்காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த 11 நாள் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் நடைபெற்று வருவது பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை அதிகரித்துள்ளது. தேரோட்டத்தைத் தொடர்ந்து தொடங்கிய பாலாபிஷேகம், பௌர்ணமி தினமான இன்று இடைவிடாமல் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.இந்த பெருவிழாவின் மற்றொரு சிறப்பாக, ரதக் காவடி எடுத்து வரும் பக்தர்களின் பக்தி வெளிப்பாடு அனைவரையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினரின் எட்டாவது ஆண்டு ரதக் காவடி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ரதக் காவடி ஊர்வலம், கொளப்பாடு, பையூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று, எட்டுக்குடி முருகன் கோவிலை சென்றடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்று பக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.இந்த ரதக் காவடியை சுமந்த இளைஞர்கள், தாளம் மற்றும் பக்திப் பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி சென்றது திருவிழாவிற்கு தனி சிறப்பை சேர்த்தது. இந்நிலையில், வரும் மே 2ஆம் தேதி இரவு 11 மணி வரை கோவில் நடை சாத்தப்படாமல், 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
    1
    எட்டுக்குடி ஸ்ரீ முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பால்காவடிகள், ரதக்காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த 11 நாள் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் நடைபெற்று வருவது பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை அதிகரித்துள்ளது. தேரோட்டத்தைத் தொடர்ந்து தொடங்கிய பாலாபிஷேகம், பௌர்ணமி தினமான இன்று இடைவிடாமல் நடந்து வருகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.இந்த பெருவிழாவின் மற்றொரு சிறப்பாக, ரதக் காவடி எடுத்து வரும் பக்தர்களின் பக்தி வெளிப்பாடு அனைவரையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினரின் எட்டாவது ஆண்டு ரதக் காவடி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ரதக் காவடி ஊர்வலம், கொளப்பாடு, பையூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று, எட்டுக்குடி முருகன் கோவிலை சென்றடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்று பக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.இந்த ரதக் காவடியை சுமந்த இளைஞர்கள், தாளம் மற்றும் பக்திப் பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி சென்றது திருவிழாவிற்கு தனி சிறப்பை சேர்த்தது. இந்நிலையில், வரும் மே 2ஆம் தேதி இரவு 11 மணி வரை கோவில் நடை சாத்தப்படாமல், 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.