தனது காரை முற்றுகையிட்டு போராடிய போராட்டக்காரர்களுடன் கைகலப்பில் இறங்கிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவானின் திருக்கோவிலில் பக்தர்களுக்காக அமரும் இடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை வழிமறித்து தங்கள் கிராமத்தில் மின் மயானம் வேண்டாம் என கூறி மனு அளிக்க வந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர் தரப்பில் எங்கள் ஊருக்கு மின் மயானம் வேண்டும் என ஒரு தரப்பினர் கோஷமிட்டு வந்தனர். இருதரப்புக்கு இடையே பேச்சு வார்த்தை செய்யும் போது வாக்குவாதம் ஏற்பட்டதால் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அந்த இடத்திலிருந்து தனது காரில் ஏறி கிளம்பும் பொழுது போராட்டக்காரர்கள் காரை வழிமறித்தனர். அப்பொழுது பேசிய நபர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் காரில் இருந்தவாறு வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றவே காரில் இருந்து இறங்கி வாக்குவாதம் செய்த வரை தாக்க கையை ஓங்கி கூட்டத்துக்குள் சென்று தாக்க முற்பட்டார். மேலும் சத்தமாக கத்தியபடி வாக்குவாதம் செய்தார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனே அவரை கட்சியினர் தடுத்து நிறுத்தி பாராளுமன்ற உறுப்பினரை காரில் ஏற்றி அவசரமாக வழி அனுப்பி வைத்தனர். இந்தப் பிரச்சினையாள் அடிக்கல் நாட்ட வந்த வேலையை விட்டு விட்டு அந்த பணியை செய்யாமல் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து இறைச்சி ஆடுகளை ஆர்வமாக வாங்கிசென்ற வியாபாரிகள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை ஆட்டுசந்தை நடைபெறுகிறது. இங்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் தேனி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் விவசாயிகள் ஆடுகளை வாங்குவதற்கு வருவர். இந்நிலையில் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட ஆடு 6 ஆயிரம் ரூபாய்க்கும்,25 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும், 10 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 8 ஆயிரம் ரூபாய் வரையிலும், 25 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 17 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை இறைச்சிக்காக ஆர்வமாக வாங்கி சென்றதால் இன்று மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.1
- தேனியில்அகில இந்தியா ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் TUCC மாவட்ட மாநாடு நடைபெற்றது1
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு வரும் ஏழாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழாக்களை குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டியளித்தார்1
- *கொடைக்கானலில் காட்டு மாடுகள் மோதல் - வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நாயுடுபுரம் பகுதியில் இரண்டு காட்டு மாடுகள் ஒன்றை ஒன்று தாக்கி சண்டை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்1
- வேடசந்தூர் மகாலட்சுமிபுரம் குரும்பபட்டி பூதிபுரம் சீத்தபட்டி மினுக்கம்பட்டி காந்திநகர் ஐயர் மடம் இந்த பகுதிகளில் சுமார் ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்1
- அபாச வீடியோவை பதிவு செய்பவர்களை இந்த சேனல் கண்டு கொள்ளாமல் இருப்பது சேனலுக்கு ஆபத்து. பெண்கள் பார்க்கும் இந்த சேனலில் இது போன்ற பதிவுகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை பதிவு எதுவும் போட வேண்டாம் அன்பு சகோதர சகோதரிகளே. பதிவு செய்வது இந்த ஆப்யை பற்றி சொல்வது அசிங்கமாக உள்ளது. கடைசியில் இந்த மாடு போல ஆகபோகிறது இந்த சேனல். நன்றி.1
- 05.01.2026_ADP_INTERNATIONAL KICK BOXING சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தகுதி பெற்ற தேனி மாவட்ட மாணவர்கள் சர்வதேச கிக்பாக்சிங் போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளிகளில் படிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தினர் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. சர்வதேச கிக்பாக்சிங் போட்டிகள் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள இந்திராகாந்த உள் விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 4ம்தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த மூன்று வருடங்களாக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.இதில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று அதையடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் என தனித்தனியாக வெற்றி பெற்றதற்கான மதிப்பெண் புள்ளிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பட்டது.அந்த தரவரிசை பட்டியலில் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.குறிப்பாக சீனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, சப் ஜூனியர் பிரிவு என மூன்று பிரிவுகளில் யாழினி, சம்சிதா , கிருபா ஸ்ரீ , வசுமதி , ரீகாஸ்ரீ , சபரிஸ் ஆகிய ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டியில் உள்ள கிக்பாக்ஸிங் உள் அரங்க கூடத்தில் தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் துரைமுருகன் தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.இந்நிலையில் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வான கிராமப்புற ஆறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக்பாக்சிங் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.இதில் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களை தேனிமாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்ட சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.1