Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் திருடனாய் பார்த்து திரிந்தி விட்டால் திண்டுக்கல்லில் நேற்று இருசக்கர வாகனம் திருட்டு போனது இது குறித்து சமூகவலை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் திருடிய இடத்திலே திருடன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று விட்டான்
RAJA news
திண்டுக்கல்லில் திருடனாய் பார்த்து திரிந்தி விட்டால் திண்டுக்கல்லில் நேற்று இருசக்கர வாகனம் திருட்டு போனது இது குறித்து சமூகவலை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் திருடிய இடத்திலே திருடன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று விட்டான்
More news from தமிழ்நாடு and nearby areas
- கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் .. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை1
- காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்ப வேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சி சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பார்வையாளராக காங்கிரஸ் கமிட்டி தலைமை நியமிக்கப்பட்டுள்ள சிறுவை தா. ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள இயக்க மறுசீரமைப்பு எஸ்.எஸ்.2 திட்டம் தொடர்பாக விளக்க உரையை மாவட்ட தலைவர் வி. பாலசுப்பிரமணியன் மற்றும் தா. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து மண்டலம், மாவட்டம், ஒன்றியம், பேரூராட்சி அளவில் கலந்து கொண்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர்கள் முருகானந்தம், ரமேஷ், ராயப்பன், முருகேசன், ஆர். எஸ். கண்ணன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மௌனகுரு, பெனிக்ஸ் ராஜா, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் சேவியர், பிரான்சிஸ், கோனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, சிவசுப்பிரமணியன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்புகள் வேண்டி விருப்ப விண்ணப்ப மனுக்களை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் இடம் வழங்கினர். இந்நிலையில் கூட்ட அரங்கிற்கு வந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மதசார்பற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வலியினை பின்பற்றுவதாக கூறி மேலிட பார்வையாளர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.1
- இரண்டாவது நாளாக ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு பூஜை ஊஞ்சல் சேவை பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மட்டும் பௌர்ணமி முன்னிட்டு ராதே கிருஷ்ணன் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது அதன் பின்பு தாயார் ஊஞ்சல் சேவை மற்றும் கிருஷ்ணன் ராதே சுவாமி வீதி உலா நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது இந்த பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக கிருஷ்ணன் மற்றும் ராதே சுவாமிக்கு வண்ண பட்டுடுத்தி ஆவணங்கள் மற்றும் சுவாமிக்கு கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீமத் பாகவதம், நாரத மகரிஷி சரித்திரம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு கேட்டனர் அதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ராதே கிருஷ்ணசுவாமிக்கு வண்ண பட்டாடை ஆவணங்களால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தாயார் ஊஞ்சல் சேவை நடைபெற்றனர் இந்த ஊஞ்சல் சேவையில் சுவாமிக்கு பல்வேறு மலர்கள் தூவி சிறப்பு பூஜை மற்றும் மகா தீபா நிகழ் பெற்றது அதனை தொடர்ந்து ராதே கிருஷ்ணன் சுவாமி பல்லாக்கில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகளான தெற்கு பிரகாரம் வடக்க கிரகாரம் சங்கூரிடம் பெருமாள் கோவில் தெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா என மந்திரங்களை ஒழித்த படி வீதி உலாவில் கலந்து கொண்டனர் அதன் பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரார்த்தனை மையம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் *போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள். கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* . தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய். போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது. மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்1
- காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு உடையார் காலனியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை : காங்கேயம் நகராட்சி 9-வது வார்டு, உடையார் காலனி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கனம், உடையார் காலனி, 9-வது வார்டு பொதுமக்கள்.1
- குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்1
- *திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்* திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.1