logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குமரி:வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையாளர் ஆய்வு நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.

4 hrs ago
user_Magson jones
Magson jones
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
4 hrs ago

குமரி:வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையாளர் ஆய்வு நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20)  காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன்  திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    3 hrs ago
  • சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • காரைக்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    காரைக்குடி சட்டமன்ற தொகுதி  மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து  தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்
இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது
தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் நேற்று (ஏப்.19) இரவு ரூ. 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான செய்தி அறிந்த தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமார் காவல் நிலையம் வந்து குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்றும், பணம் பட்டுவாடா தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் நேற்று (ஏப்.19) இரவு ரூ. 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான செய்தி அறிந்த தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமார் காவல் நிலையம் வந்து குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்றும், பணம் பட்டுவாடா தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
  • சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் , பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார், பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில், கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர் கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார், பின்னர் அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், பாசிச சித்தாந்ததின் மூலம் மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
    1
    சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்  கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் ,  
பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்,
பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில்,
கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்,
வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து  உற்சாக வரவேற்பளித்தனர். 
கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர்  கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார்,
பின்னர்  அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், 
பாசிச சித்தாந்ததின் மூலம்  மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி,
அதிமுகவை  வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . 
தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார் அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டும் லோயர் கேம்ப் பளியன் குடி வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. 
இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். 
இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. 
லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார்  தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார்  
அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த ஆண்டும் லோயர் கேம்ப்  பளியன் குடி  வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை 
இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது  இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது
கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது 
கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.