Shuru
Apke Nagar Ki App…
சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தங்கள் நடித்த அனுபவங்களை பேட்டி கொடுத்தார்கள் படத்தைப் பற்றி அவர்களின் கருத்து இன்று கே எஸ் பி எஸ் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது படம் முடிந்து நமது செய்தியாளர்களுக்கு காமெடி நடிகர் சுமங்கலி சதீஷ் அவர்கள் பேட்டி பெரிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களுக்கு இணையாக மக்கள் வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் மேலும் அனைத்து மக்களும் படத்தை பார்க்க அன்புடன் அழைக்கின்றோம்
Balu
சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தங்கள் நடித்த அனுபவங்களை பேட்டி கொடுத்தார்கள் படத்தைப் பற்றி அவர்களின் கருத்து இன்று கே எஸ் பி எஸ் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது படம் முடிந்து நமது செய்தியாளர்களுக்கு காமெடி நடிகர் சுமங்கலி சதீஷ் அவர்கள் பேட்டி பெரிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களுக்கு இணையாக மக்கள் வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் மேலும் அனைத்து மக்களும் படத்தை பார்க்க அன்புடன் அழைக்கின்றோம்
More news from தமிழ்நாடு and nearby areas
- (4-3-2026) புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம் விரிவாக்க பணிகளுக்காக ரு.150 கோடியில் திட்ட பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார், இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார் மேலும் அவர் பேசுகையில் தூத்துக்குடி துறைமுகம் பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது அதேபோல் அருகில் உள்ள அனைத்து மீன்பிடி தொழில் சார்ந்த கடற்கரை கிராமங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் மேலும் மீனவ மக்கள் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், விரிவாக்க பணி ஒப்பந்தக்காரர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2
- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தானது பயணிகள் இன்றி இந்த விபத்து நடைபெற்றதாலும் அதிகாலை என்பதால் அவ்வழியாக வேறு ஏதும் வேறு வாகனங்கள் வராததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறையாக பேருந்துகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் மேலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக செல்லும் முன் ஓட்டுனர் பேருந்தில் பிரேக் ஆக்ஸிலேட்டர் கிளட்ச் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்த பின்னரே பேருந்தை பயணிகளை ஏற்றுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் மெத்தனத்தால் இது போன்ற தரமற்ற பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்1
- தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் தேனி தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளை சந்தித்து மரியாதை செய்தார் பின் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் முயற்சியால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் பொருளாதாரத்தில் முன்னேறிய முதல் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என அனைத்து தரப்பு மக்களும் பேசிக் கொண்டு வருகின்றனர் என்னையும் என்னுடன் சேர்ந்தவர்களையும் தாய் உள்ளத்தோடு திமுகவில் இணைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் வருகிற 7 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் மற்றும் திமுக நிர்வாகிகள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- Post by Sangili.v1
- Post by RAJA news1
- மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.3
- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன பாதுகாப்பு சரணாலய பகுதியாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, உள்பட ஏழுமலை கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும் அதனால் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும், அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தாங்கள் விளைவிக்கும் தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக கொண்டு செல்லும் மூலப் பொருட்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேகமலை மக்களின் வாழ்வாதார உரிமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் தன்னிச்சை அதிகார போக்கால் விதித்து வரும் தடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறி பலமுறை அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தடை விதிக்கும் வனத்துறையினரை கண்டிப்பதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் ஒன்று கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்களும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து வனத்துறையினரை கண்டித்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.1
- பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இன்று பிறப்பு விழா இன்று நடைபெறுகிறது1