ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.27: ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் ,விவசாய சங்க தாலுகா தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன்,முன்னாள் எம்பி அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் தொடர்ந்து 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.பழைய முறைப்படி கையொப்பம் பெற்று வேலை வழங்க வேண்டும் என்பத கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் மூர்த்தி,மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரசோழன் உள்பட விவசாய தொழிலாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.27: ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் ,விவசாய சங்க தாலுகா தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன்,முன்னாள் எம்பி அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் தொடர்ந்து 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.பழைய முறைப்படி கையொப்பம் பெற்று வேலை வழங்க வேண்டும் என்பத கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் மூர்த்தி,மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரசோழன் உள்பட விவசாய தொழிலாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.27: ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் ,விவசாய சங்க தாலுகா தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன்,முன்னாள் எம்பி அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் தொடர்ந்து 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.பழைய முறைப்படி கையொப்பம் பெற்று வேலை வழங்க வேண்டும் என்பத கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் மூர்த்தி,மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரசோழன் உள்பட விவசாய தொழிலாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.1
- வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக நடந்து சென்று மனுக்களை வழங்கினார் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து சென்று தங்களது கோரிக்கை மனுக்களை துணை வட்டாட்சியர் ரவி அவர்களிடம் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர் மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வேலை அட்டைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும், பழைய முறையில் கையொப்பமிட்டு வேலை பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.1
- தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 26 ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் 17 கைதிகள் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர் அவர்களில் 13 பேரை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி பிடித்தனர் இதனைத் தொடர்ந்து தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர்2
- தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.1
- காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முக்குலத்தோர் உறவின்முறை கட்டிட மணிமண்டபத்தில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதற்கட்டமாக, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் காரியாபட்டி நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வீர வணக்கத்தைச் செலுத்தினர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே போன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் முக்கு ரோடு பகுதியில் மருது சேனை சார்பாகவும் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .1
- *தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் 13 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர் - சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி* தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் கூறுகையை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவரை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காலையிலிருந்து ஒத்துழைப்பு தந்த செய்தியாளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்1
- மருது சகோதரர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்... மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு இன்று ( அக்.27) அவரது குருபூஜையை முன்னிட்டு சோலை அழகுபுரம், அனுப்பானடி, சிந்தாமணி, வண்டியூர் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தி சென்றனர்.1
- சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் நடந்து சென்று மலைச்சாலையில் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு பணிகள் குறித்து கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு பணிகளை மேற்கொண்டார் . சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் நடந்து சென்று மலைச்சாலையில் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு பணிகள் குறித்து கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு பணிகளை மேற்கொண்டார் . சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டில் மண்டலம் மற்றும் மகர ஜோதி பூஜை தொடங்க உள்ளதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஐயப்ப பக்தர்கள் தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, பல்வேறு துறை அதிகாரிகளுடன் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் கம்பம் மெட்டு வரை செல்லும் இந்த மலைச்சாலையில், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டனர். சபரிமலை மண்டல பூஜை காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கம்பம் மெட்டு சாலை வழியாகச் செல்வார்கள். இதனால் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். அப்போது, சாலையோரங்களில் உள்ள புதர்களை அகற்றவும், ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கவும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளியைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், மலைப்பாதையில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கவும், ஆபத்தான வளைவுகளில் முந்திச் செல்வதைத் தவிர்க்கவும், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றவும் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம், வருவாய்த்துறை ஆய்வாளர் ரவீந்திரன், வனச்சரகர் தீனதயாளன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். பேட்டி: ஜெகநாத் மிஸ்ரா கம்பம் எம் எல் ஏ2