logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக நடந்து சென்று மனுக்களை வழங்கினார் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து சென்று தங்களது கோரிக்கை மனுக்களை துணை வட்டாட்சியர் ரவி அவர்களிடம் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர் மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வேலை அட்டைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும், பழைய முறையில் கையொப்பமிட்டு வேலை பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

5 hrs ago
user_ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
5 hrs ago

வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக நடந்து சென்று மனுக்களை வழங்கினார் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து சென்று தங்களது கோரிக்கை மனுக்களை துணை வட்டாட்சியர் ரவி அவர்களிடம் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர் மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வேலை அட்டைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும், பழைய முறையில் கையொப்பமிட்டு வேலை பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.27: ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் ,விவசாய சங்க தாலுகா தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன்,முன்னாள் எம்பி அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் தொடர்ந்து 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.பழைய முறைப்படி கையொப்பம் பெற்று வேலை வழங்க வேண்டும் என்பத கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் மூர்த்தி,மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரசோழன் உள்பட விவசாய தொழிலாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்



ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.27:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் ,விவசாய சங்க தாலுகா தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன்,முன்னாள் எம்பி அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.
விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் தொடர்ந்து 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.பழைய முறைப்படி கையொப்பம் பெற்று வேலை வழங்க வேண்டும் என்பத கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் மூர்த்தி,மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரசோழன் உள்பட விவசாய தொழிலாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
    user_Praba
    Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    8 min ago
  • வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக நடந்து சென்று மனுக்களை வழங்கினார் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து சென்று தங்களது கோரிக்கை மனுக்களை துணை வட்டாட்சியர் ரவி அவர்களிடம் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர் மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வேலை அட்டைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும், பழைய முறையில் கையொப்பமிட்டு வேலை பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
    1
    வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது 
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக நடந்து சென்று மனுக்களை வழங்கினார் 
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து ஊர்வலமாக  வட்டாட்சியர் அலுவலகம் வரை  நடந்து சென்று  தங்களது கோரிக்கை மனுக்களை துணை வட்டாட்சியர் ரவி அவர்களிடம் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர் 
மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வேலை அட்டைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும், பழைய முறையில் கையொப்பமிட்டு வேலை பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது. மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்!

கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல்
கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்!
கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல்
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,  கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது.
மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    21 min ago
  • தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    1
    தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை
தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம்  மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார்  துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    35 min ago
  • காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முக்குலத்தோர் உறவின்முறை கட்டிட மணிமண்டபத்தில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதற்கட்டமாக, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் காரியாபட்டி நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வீர வணக்கத்தைச் செலுத்தினர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே போன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் முக்கு ரோடு பகுதியில் மருது சேனை சார்பாகவும் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .
    1
    காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முக்குலத்தோர் உறவின்முறை கட்டிட மணிமண்டபத்தில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவில் முதற்கட்டமாக, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் காரியாபட்டி நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வீர வணக்கத்தைச் செலுத்தினர்.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதே போன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் முக்கு ரோடு பகுதியில் மருது சேனை சார்பாகவும் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின்  திரு உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு  அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது. மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்!
கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல்
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,  கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது.
மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • மருது சகோதரர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்... மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு இன்று ( அக்.27) அவரது குருபூஜையை முன்னிட்டு சோலை அழகுபுரம், அனுப்பானடி, சிந்தாமணி, வண்டியூர் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தி சென்றனர்.
    1
    மருது சகோதரர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்...
மதுரை  மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள  மருது பாண்டியர்கள் சிலைக்கு இன்று ( அக்.27) அவரது குருபூஜையை முன்னிட்டு சோலை அழகுபுரம், அனுப்பானடி, சிந்தாமணி, வண்டியூர் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தி சென்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    10 hrs ago
  • தேனி மாவட்ட சிறைச்சாலையில் 17 விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்.... தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி தேனி மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்.... தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகள் 17 பேர் தப்பி ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அந்த சிறை சாலையில் ஒரே அறையில் தங்கி இருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்ததாக கூறி நாடகம் ஆடி சிறை காவலர் தாக்கி விட்டு சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தென் மண்டல விஜயேந்திர பிடாரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி விஜயந்திர பிடாரி, சிறையில் இருந்து தப்பி சென்ற விசாரணை கைதிகளை பிடிக்கும் பணி மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கைதிகளின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்த விவரங்களை தற்போது தெரிவிப்பது சரியாக இருக்காது. முழு விவரங்களையும் உங்களுக்கு பிறகு சொல்கிறேன். முதல் கட்டமாக தப்பி ஓடிய விசாரணை கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மற்றும் மாநில எல்லைகளில் இவரை தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    2
    தேனி மாவட்ட சிறைச்சாலையில் 17 விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்....  தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி
தேனி மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்....  தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகள் 17 பேர் தப்பி ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அந்த சிறை சாலையில் ஒரே அறையில் தங்கி இருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்ததாக கூறி நாடகம் ஆடி சிறை காவலர் தாக்கி விட்டு சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பி ஓடி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து தென் மண்டல விஜயேந்திர பிடாரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி விஜயந்திர பிடாரி, 
சிறையில் இருந்து தப்பி சென்ற விசாரணை கைதிகளை பிடிக்கும் பணி மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கைதிகளின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்த விவரங்களை தற்போது தெரிவிப்பது சரியாக இருக்காது. முழு விவரங்களையும் உங்களுக்கு பிறகு சொல்கிறேன். முதல் கட்டமாக தப்பி ஓடிய விசாரணை கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மற்றும் மாநில எல்லைகளில் இவரை தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.