Shuru
Apke Nagar Ki App…
1049
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by 10491
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.1
- தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு தமிழக வெற்றி கழகம் சார்பில் பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் பொது பஜனையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கி அன்னதான நிகழ்வில் உணவு பரிமாறிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் இஸ்லாமியர்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொது பஜனை நடைபெற்றது. இதில் அண்டக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2000கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அண்ணதான நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கியும் உணவு பரிமாறிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அதனை தொடர்ந்து தேநீர் வழங்கி உணவு பரிமாறிய இஸ்லாமிய சகோதரர்களை ஐயப்ப பக்தர்கள் தொழுகைக்கு பிறகு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து தொப்புள் கொடி உறவின் அருமையை பறைசாற்றினார்கள்.1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்1
- சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம் – வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட சூளகுண்டா சாலையில், இன்று காலை நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை வேளையில் பணிக்காக சென்ற வாகனங்களை யானைக் கூட்டம் வழிமறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி, யானைகள் சாலையை கடந்து செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். வனத்துறையினரின் கண்காணிப்பில் யானைக் கூட்டம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகன போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பியது. இந்த அபூர்வ நிகழ்வை நேரில் கண்ட பொதுமக்கள், தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர். யானைகள் பாதுகாப்பாக சென்றதை பார்த்து மக்கள் நிம்மதி அடைந்தனர். தேவைப்பட்டால்1
- ஜமுனாமரத்தூர் : கோமுட்டி ஏரி அருகில்,கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றபட்டு வரும் சூழலில், வனத்துறை பள்ளி ஆசிரியர் குடியிருப்பு பகுதியிலும் மற்றும் சொசைட்டி அருகாமையில் செல்லும் பைப் விரிசல் ஏற்பட்டிருந்ததை,way2news செய்த வெளியிட்டதன் மூலம் உள்ளாட்சித்துறை சார்ந்த பணியாளர்கள் பைப் சரி செய்தனர் இன்று 27/12/25 குடிநீர் தொட்டியில் ஏற்றபட்டு குடிநீர் மக்கள் பயன்பட்டிற்கு திறப்பு.3
- காஞ்சிபுரம். பாமகவின் இரு கண்களான ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேரனும் - காஞ்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேச்சு...!!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில், பாமகவின் இரு கண்களாக உள்ள ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேர வேண்டுமெனவும்,குருவின் ஆசியோடு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் வருகிற தேர்தலை நாம் கண்டிப்பாக சந்திப்போம் என நிர்வாகிகள் மத்தியில் மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேசினார்.1