Shuru
Apke Nagar Ki App…
தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட ரிஷிவந்தியம் பாமக வேட்பாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
OREDESAM REPORTER
தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட ரிஷிவந்தியம் பாமக வேட்பாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.1
- உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி1
- கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ சரவணன் போட்டிருக்கிறார். தற்போது வேட்பாளர் சரவணன் பிரச்சாரத்தை கிராம கிராம சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள கோ.மாவிடத்தல் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது வேட்பாளர் சரவணன் திமுக கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கை குறித்து ஓர் பெண்ணிடம் கேள்வி கேட்ட பொழுது. அந்தப் பெண் அதற்கு மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரத்தில் இருந்து 2500 ரூபாயும், 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இப்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.1
- திருப்பத்தூர் மாவட்டம் – ஏலகிரி மலை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீ விபத்துகள் குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக, சமூக விரோதிகள் திட்டமிட்டு காடு பகுதிகளில் தீ வைத்து வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், ஏலகிரி மலையின் இயற்கை சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் அரிய தாவரங்கள் தீ விபத்தால் அழிவை சந்தித்து வருகின்றன. மேலும், தீ பரவலால் காற்று மாசுபாடு அதிகரித்து, அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: “தீ வைத்துச் செல்லும் சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டித்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது” என்று வலியுறுத்தினர். மேலும், காடு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிபத்துகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏலகிரி மலைப்பகுதியின் இயற்கை வளங்களையும், உயிரியல் வளங்களையும் பாதுகாப்பது அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. தர்மபுரி சட்டசபை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம் இந்திரா நகர் அவ்வை வழி ஒட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ஆரத்தி எடுத்தும் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்ப்பளித்தனர். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி முரசு சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.1
- சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- பென்னாகரம் அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட 2பேர் கைது பென்னாகரம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட 2 பேரை மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பென்னாகரம் அடுத்த ரங்காபுரத்தில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் பென்னாகரம் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரங்காபுரத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் ஆணா?பெண்ணா? என கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் பசுபதி, ரவிந்தர், வசந்தவேலன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் ரங்காபுரத்தில் செந்தில் என்பவரது வீட்டை சோதனை செய்தபோது கருவில் உள்ள குழந்தை ஆண, பெண்ணா என கண்டறியும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையெடுத்து, அங்கிருந்த மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட ரங்காபுரம் செந்தில் மகள் பரிமளா, வயது 34டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி, வயது47 என்பவரின் உதவியோடு கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் இன்ஸ்பெக்டர்பாபு சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்த பென்னாகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலக்கோடு பகுதியில் கருக்கலைப்பு செய்ததாக இருவரையும் சுகாதாரத் துறையினர் பிடிக்க சென்றபோது பரிமளா தலைமுறைவாகி ஜாமினில் வெளிவந் உள்ளதாகவும் மீண்டும் பென்னாகரம் பகுதியில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போது பிடிபட்டதாகவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.1