logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத், இன்று காலை காவல் தலைமையகத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, அவருக்குக் காவல் துறை ஆயுதப்படை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது எஸ்பி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தின் 37 வது புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

4 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
4 hrs ago
5bfa3d51-7ca9-4ffa-87ff-932f1addb61d

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத், இன்று

காலை காவல் தலைமையகத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, அவருக்குக் காவல் துறை ஆயுதப்படை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது எஸ்பி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த

18d7e304-d804-424c-b3ee-f45c21d50ec8

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தின் 37 வது புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

More news from Tuticorin and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவில், ஆதிதிராவிடர் (பறையர்) சமூக மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் அரசு கிராம நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் பொதுப் பாதை ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலய நுழைவாயிலை மறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவருக்கு வழங்கப்பட்ட நத்தம் நிலவரி திட்ட பட்டாவை உடனடியாக ரத்து செய்து சுவரை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலி ஆவணங்கள் மூலம் சுமார் 60 சென்ட் அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்து நிலத்தை ஆதிதிராவிடர் மக்களுக்கு மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், அரசு விரைந்து தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவில், ஆதிதிராவிடர் (பறையர்) சமூக மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் அரசு கிராம நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் பொதுப் பாதை ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலய நுழைவாயிலை மறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவருக்கு வழங்கப்பட்ட நத்தம் நிலவரி திட்ட பட்டாவை உடனடியாக ரத்து செய்து சுவரை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் சுமார் 60 சென்ட் அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்து நிலத்தை ஆதிதிராவிடர் மக்களுக்கு மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், அரசு விரைந்து தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    3 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத், இன்று காலை காவல் தலைமையகத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, அவருக்குக் காவல் துறை ஆயுதப்படை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது எஸ்பி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தின் 37 வது புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    3
    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத், இன்று காலை காவல் தலைமையகத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, அவருக்குக் காவல் துறை ஆயுதப்படை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது எஸ்பி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தின் 37 வது புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள சாயர்புரம் அருகே ஒரு பேருந்தில் இடமின்றி படிக்கட்டில் பயணம் செய்த கண்டக்டரின் புகைப்படம் வைரல் ஆகிவிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. பேருந்தில் இடமின்றி பயணிகள் படிக்கட்டில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. இது போக்குவரத்து வசதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.
    1
    தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள சாயர்புரம் அருகே ஒரு பேருந்தில் இடமின்றி படிக்கட்டில் பயணம் செய்த கண்டக்டரின் புகைப்படம் வைரல் ஆகிவிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்தில் இடமின்றி பயணிகள் படிக்கட்டில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. இது போக்குவரத்து வசதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தலைவணங்கி வணக்கம் செலுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தங்களது தேவைகள் எதுவாயினும் செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தலைவணங்கி வணக்கம் செலுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தங்களது தேவைகள் எதுவாயினும் செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பல செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல் சூளை தொழிலாளர்கள் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் சூளைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சூளைகள் மீண்டும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பல செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல் சூளை தொழிலாளர்கள் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் சூளைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சூளைகள் மீண்டும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிகளை ஆசிரியை தேன் மரிய சுகந்தி மட்டையால் தாக்கினார். இதனால் காயமடைந்த மாணவிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் இந்த சம்பவத்தைப் பற்றி கோபம் கொண்டுள்ளனர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிகளை ஆசிரியை தேன் மரிய சுகந்தி மட்டையால் தாக்கினார். இதனால் காயமடைந்த மாணவிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

மாணவிகள் மற்றும் பெற்றோர் இந்த சம்பவத்தைப் பற்றி கோபம் கொண்டுள்ளனர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த திட்டம் காரணமாக தங்களது பாரம்பரிய தொழிலான உப்பு உற்பத்தி அழியும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக இந்த தொழிலைச் செய்து வருவதாகவும், தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த தொழிலைச் சார்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் தங்களது குழந்தைகளைப் படிக்க வைத்து, வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் முயற்சியில் உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அஞ்சுகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம், எதிர்கால தலைமுறை பாரம்பரிய தொழில் அனைத்தும் அழியும் நிலை உள்ளது என்று கூறியுள்ளனர். எனவே, தனியார் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை இந்தப் பகுதியில் அமைக்கும் முயற்சியை கைவிடவும், பாரம்பரிய தொழில் இயற்கை வளம் பாதிக்காமல் மாற்று இடங்களில் இந்த திட்டத்தை அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் முள்ளக்காடு பகுதி மக்கள் சார்பில் அனுப்பியுள்ளனர்.
    2
    தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த திட்டம் காரணமாக தங்களது பாரம்பரிய தொழிலான உப்பு உற்பத்தி அழியும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக இந்த தொழிலைச் செய்து வருவதாகவும், தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த தொழிலைச் சார்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் தங்களது குழந்தைகளைப் படிக்க வைத்து, வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் முயற்சியில் உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அஞ்சுகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம், எதிர்கால தலைமுறை பாரம்பரிய தொழில் அனைத்தும் அழியும் நிலை உள்ளது என்று கூறியுள்ளனர்.

எனவே, தனியார் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை இந்தப் பகுதியில் அமைக்கும் முயற்சியை கைவிடவும், பாரம்பரிய தொழில் இயற்கை வளம் பாதிக்காமல் மாற்று இடங்களில் இந்த திட்டத்தை அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் முள்ளக்காடு பகுதி மக்கள் சார்பில் அனுப்பியுள்ளனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • ஐடி ஊழியர் கவின் கொலை சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி கவின் என்ற ஐடி ஊழியர் திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 29ஆம் தேதி இந்த கொலை சம்பவத்தில் அந்த பெண்ணின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியும் தொடர்பு இருந்ததாக கூறி அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. இன்று கவின் நினைவு தினத்தை அவரது வீட்டில் அனுசரித்தனர். சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் விசிக நிர்வாகிகள் நேரில் வருகை தந்து கவின் தாய் மற்றும் தந்தையருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். கவினின் தாய் கவினின் புகைப்படத்தை பார்த்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. வீட்டின் முன்பு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் வன்னியரசு, பவானிசாகர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினரும் கவினின் பெரியம்மாவுமான தமிழ்ச்செல்வி, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். கவினின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர். சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேசுகையில், இந்த ஆணவ கொலை சம்பவம் மிகவும் வேதனை தருகிறது என்றும், மீண்டும் வருங்காலங்களில் இது போல் நடக்காமல் இருக்க கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கவினின் பெரியம்மாவும் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்ச்செல்வி பேசுகையில், எனது சகோதரியின் மகனின் இது போல் இனி எவருக்கும் நடக்கக்கூடாது என்று மேடையிலேயே கண்ணீர் விட்டார்.
    1
    ஐடி ஊழியர் கவின் கொலை சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி கவின் என்ற ஐடி ஊழியர் திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 29ஆம் தேதி இந்த கொலை சம்பவத்தில் அந்த பெண்ணின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியும் தொடர்பு இருந்ததாக கூறி அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

இன்று கவின் நினைவு தினத்தை அவரது வீட்டில் அனுசரித்தனர். சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் விசிக நிர்வாகிகள் நேரில் வருகை தந்து கவின் தாய் மற்றும் தந்தையருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். கவினின் தாய் கவினின் புகைப்படத்தை பார்த்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

வீட்டின் முன்பு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் வன்னியரசு, பவானிசாகர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினரும் கவினின் பெரியம்மாவுமான தமிழ்ச்செல்வி, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். கவினின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர்.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேசுகையில், இந்த ஆணவ கொலை சம்பவம் மிகவும் வேதனை தருகிறது என்றும், மீண்டும் வருங்காலங்களில் இது போல் நடக்காமல் இருக்க கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கவினின் பெரியம்மாவும் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்ச்செல்வி பேசுகையில், எனது சகோதரியின் மகனின் இது போல் இனி எவருக்கும் நடக்கக்கூடாது என்று மேடையிலேயே கண்ணீர் விட்டார்.
    user_திகழன்
    திகழன்
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.