Shuru
Apke Nagar Ki App…
ஈரோடு நாமக்கல் இடையே சிறப்பு ரயில் குறித்து ஈரோடு எம்பி கோரிக்கை நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று (16/03/2026) ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு–நாமக்கல் இடையே குமாரபாளையம், திருச்செங்கோடு வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும், 66601/02 கோயமுத்தூர்–ஈரோடு MEMU ரயிலை கரூர் மற்றும் நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
DHINESH KUMAR
ஈரோடு நாமக்கல் இடையே சிறப்பு ரயில் குறித்து ஈரோடு எம்பி கோரிக்கை நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று (16/03/2026) ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு–நாமக்கல் இடையே குமாரபாளையம், திருச்செங்கோடு வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும், 66601/02 கோயமுத்தூர்–ஈரோடு MEMU ரயிலை கரூர் மற்றும் நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று (16/03/2026) ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு–நாமக்கல் இடையே குமாரபாளையம், திருச்செங்கோடு வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும், 66601/02 கோயமுத்தூர்–ஈரோடு MEMU ரயிலை கரூர் மற்றும் நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.1
- சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சேலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் முறை, உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் கந்தாதேவி அரசியல் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் நடத்தை சம்பந்தமாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் டிஎஸ்பி சத்யராஜ் சபரிநாதன் தாசில்தார் பாலாஜி ஜெயந்தி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர் அப்பொழுது தேர்தல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது சிலைகளை மூட வேண்டும் சுவர்களில் உள்ள சின்னங்களை உடனே அகற்ற வேண்டும்.1
- Post by R. Suresh1
- ஐயா எங்கு ஊரில் சிந்தாமணிப்பட்டி அருகில் சிந்தாமணிப்பட்டி டு பாளையம் நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி3
- தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையின் அராஜகத்தை தடுக்க கோரி கலெக்டர் காலில் விழுந்த கதறிய குடும்பத்தால் பரபரப்பு தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள வத்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது-சக்தி தம்பதியினருக்கு மேகநாதன் வெள்ளியங்கிரி முத்துலட்சுமி என்ற 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவம் என்பவரிடமிருந்து 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளனர். இந்த இடத்தில் இவர்கள் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பரமசிவத்தின் மருமகன் சாமிகண்ணு என்பவர் அடியாட்களுடன் வந்து மாது மற்றும் அவரது குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது நிலத்தை விட்டு வெளியேற கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந் வர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.1
- வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்களர்களை வாக்களிக்க தேவையான அனைத்து விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 85 வயதிற்க்கு மேற்பட்ட 9541 வாக்காளர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி அவர்கள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்குசாவடி மையத்தில் நேரடியாக சென்று வாக்களிக்க விரும்பினாலும் நேரடியாக சென்று வாக்களிக்கலாம், 11345 மாற்றுதிறனாளி வாக்களர்கள் உள்ளனர். 1596 வாக்குசாவடிகளிலும் அவர்களுக்கு தேவையான சாய்வுதளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் மாற்று திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் தரப்பட்டு அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முப்படை ரானுவத்தில் பணியாற்றும் 1601 வாக்களர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் நிறைவடையும் 10 தினங்களுக்கு முன்னர் வரை படிவம், 6, 7, 8 மூலம் புதிய இளம் வாக்காளர்களை சேர்த்து கொள்ள முடியும், வாக்களர்கள் வாக்களிக்க வசதியாக புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த அனைத்து வாக்களர்களுக்கும் தேவையான வசதிகள் தங்கு தடையின்றி செய்து தரப்படும், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 1500 லிருந்து 1200 வாக்களர்களாக குறைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்களித்து விட்டு செல்ல முடியும், மாவட்டத்தில் உள்ள 1596 வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் யாருடையை அச்சுறுத்தலும் இன்றி தைரியமாக வாக்களித்து செல்ல முடியும், வாக்களர்கள் பகுதி எண், பாகம் எண், எளிதாக கண்டறியும் வாக்கு சீட்டின் வலது புறத்தில் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. செல்போன்களை வாக்குசாவடி மையத்திற்க்குள் அனுமதி இல்லை என்பதால் செல்போன்கள் பாதுகாக்க வாக்கு சாவடி வெளியே தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது, வாக்களர்கள் செல்போனை அங்கே ஒப்படைத்து விட்டு வாக்கு செலுத்தி விட்டு திரும்பி செல்லும் போது பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குசாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்க்கு அப்பால் தான் மற்றவர்கள் இருக்க வேண்டும், வாக்களர்கள் மட்டுமே அதனை தாண்டி வர முடியும், இந்த முறை வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் கலர் புகைப்படபம் இடம் பெற்றுள்ளதால் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அனைத்து வாக்குசாவடி முகவர்களுக்கும் 17 சி என்றபடிவம் வழங்கப்படும், பெண்கள், மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும், ஒரே மையத்தில் 5 க்கு மேற்பட்ட வாக்கு சாவடி மையங்கள் இருந்தால் வார்டுகள் கண்டறியும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்படும், அனைத்து வசதிகள் மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 130 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது, அதற்கு தேவையான சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்ளனர்.அத்தகைய வாக்குசாவடிகள் தொடர்ந்து கண்காணிக்ப்பட்டு வருகிறது, 12 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை வன பகுதியில் உள்ளது அப்பகுதியில் உள்ள சாலைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் காண்காணித்து வருகிறோம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவனத்துடன் எடுத்து செல்ல வேண்டும். உரிய ஆவனமின்றி எடுத்து செல்லும் பணம் தங்க நகை பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கில் வைக்கப்படும், உரிய ஆவணங்கள் காட்டி பெற்று செல்லலாம். தர்மபுரி மாவட்டத்தில் கோட்டூர் மலை, ஏரிமலை கிராமங்களுக்கு இதற்கு முன்னர் வாக்கு எந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன, தற்போது டிராக்டர் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்தல் தொடர்பான புகார்களை சி.விஜில் என்ற ஆப்பிலும், 9443947017 என்ற செல்போனில் எண்ணிலும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.1
- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.1