Mediation for the Nation 3.0” திட்டம் – தருமபுரியில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ், சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீதித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சட்டக் கல்லூரி மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ் சமரசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு சமரசம் மற்றும் இணக்கமுறை மையத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் சமரச முறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 9 மணியளவில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி கே. சுதா அவர்கள் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, நான்கு சாலைகள் வழியாக சென்று, டி மேக்ஸ் திரையரங்கம் வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ–மாணவியர்கள் மற்றும் தருமபுரி கலைக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ–மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், கூடுதல் மாவட்ட நீதிபதி, போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், சார்பு நீதிபதிகள், மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் அனைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் உள்ளிட்ட நீதித்துறை அலுவலர்களும் பேரணியில் பங்கேற்றனர். இதனுடன், சமரச வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சமரச முறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

- பாலக்கோட்டில் பரபரப்பு: டிராக்டர் பின்னால் மோதிய பைக்! அதிமுக பிரமுகர் பலி பாலக்கோட்டில் பரபரப்பு: டிராக்டர் பின்னால் மோதிய பைக்! அதிமுக பிரமுகர் பலி கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன ஆர்பாட்டம்1
- நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம செழுமை மீழ்ச்சி திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இளம்பரதி உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமேனி தலைமையில் நடைபெற்றது. உடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார் மற்றும் 26 கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.3
- ராசிபுரம் அருகே, உரிய மருத்துவப் படிப்பு இன்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியதுடன்நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததாகவும், வீடுகளுக்குச் சென்று குளுக்கோஸ் செலுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம் ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில் உள்ள இஸ்லாமி மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.1
- ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ராசிபுரம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.1
- சாலையில் கொட்டி கிடந்த குப்பையால் இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல அவதி வாணியம்பாடி புதூர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையில் தேங்கி உள்ளது இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல கூட வழியில்லாமல் குப்பைகள் சாலையில் கொட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி1
- ஒகேனக்கலில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பரிசல் தொழிலாளர்கள் வாழ்வாதார கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி குடும்பத்தினருடன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்திற்கு தர்மபுரி மட்டுமின்றி, வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசிப்பதுடன், ஆயில் மசாஜ் செய்து கொள்வதோடு, மீன் உணவுகளையும் சுவைத்து செல்கின்றனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பரிசல் இயக்கம் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது வழக்கம். தற்போது நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், பரிசல் இயக்கத்திற்கு அடிக்கடி தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பரிசல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த 12-ஆம் தேதி முதல் பரிசல் இயக்கத் தடை அமலில் உள்ளதால், தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையடைப்பு, வேலைநிறுத்தம் போராட்டத்திலும் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைத்து தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ராஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் கூடுதல் கழிவறைகள் அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தரமான உயிர்காக்கும் கவச உடைகள் (லைஃப் ஜாக்கெட்டுகள்) வழங்க வேண்டும். பரிசல் இயக்க முடியாத காலங்களில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிய உரிமம் வழங்க வேண்டும். சமையல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஒகேனக்கலில் உள்ள மூன்று பரிசல் வழித்தடங்களிலும் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். மூன்றாவது வழித்தடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பரிசல் இயக்கத் தடை விதிக்கப்படுவதால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.1
- தொடர் மழை எதிரொலி: காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய் விலை சரிவு தொடர் மழை எதிரொலி: காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய் விலை சரிவு! கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை காண்க!1
- கிருஷ்ணகிரிஅருகே குறிஞ்சி நகர் பகுதிமக்கள் கலெக்டரிடம் மனு கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் திருக்கோயில்கள் பள்ளிக்கூடங்கள் மத்தியில் அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி இருக்கிறது இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமக்களின் அலப்பறையினால் குடியிருப்பு பகுதி மக்கள் தினமும் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.1