logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒகேனக்கலில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பரிசல் தொழிலாளர்கள் வாழ்வாதார கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி குடும்பத்தினருடன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்திற்கு தர்மபுரி மட்டுமின்றி, வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசிப்பதுடன், ஆயில் மசாஜ் செய்து கொள்வதோடு, மீன் உணவுகளையும் சுவைத்து செல்கின்றனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பரிசல் இயக்கம் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது வழக்கம். தற்போது நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், பரிசல் இயக்கத்திற்கு அடிக்கடி தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பரிசல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த 12-ஆம் தேதி முதல் பரிசல் இயக்கத் தடை அமலில் உள்ளதால், தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையடைப்பு, வேலைநிறுத்தம் போராட்டத்திலும் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைத்து தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ராஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் கூடுதல் கழிவறைகள் அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தரமான உயிர்காக்கும் கவச உடைகள் (லைஃப் ஜாக்கெட்டுகள்) வழங்க வேண்டும். பரிசல் இயக்க முடியாத காலங்களில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிய உரிமம் வழங்க வேண்டும். சமையல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஒகேனக்கலில் உள்ள மூன்று பரிசல் வழித்தடங்களிலும் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். மூன்றாவது வழித்தடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பரிசல் இயக்கத் தடை விதிக்கப்படுவதால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

2 hrs ago
user_G Krishnan
G Krishnan
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
2 hrs ago

ஒகேனக்கலில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பரிசல் தொழிலாளர்கள் வாழ்வாதார கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி குடும்பத்தினருடன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்திற்கு தர்மபுரி மட்டுமின்றி, வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசிப்பதுடன், ஆயில் மசாஜ் செய்து கொள்வதோடு, மீன் உணவுகளையும் சுவைத்து செல்கின்றனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பரிசல் இயக்கம் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது வழக்கம். தற்போது நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், பரிசல் இயக்கத்திற்கு அடிக்கடி தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பரிசல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த 12-ஆம் தேதி முதல் பரிசல் இயக்கத் தடை அமலில் உள்ளதால், தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையடைப்பு, வேலைநிறுத்தம் போராட்டத்திலும் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைத்து தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ராஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் கூடுதல் கழிவறைகள் அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தரமான உயிர்காக்கும் கவச உடைகள் (லைஃப் ஜாக்கெட்டுகள்) வழங்க வேண்டும். பரிசல் இயக்க முடியாத காலங்களில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிய உரிமம் வழங்க வேண்டும். சமையல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஒகேனக்கலில் உள்ள மூன்று பரிசல் வழித்தடங்களிலும் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். மூன்றாவது வழித்தடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பரிசல் இயக்கத் தடை விதிக்கப்படுவதால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம். தருமபுரியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம். தருமபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். விவசாயிகளுடன் நல்லுறவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நட்பும், நல்லுறவும் நிலவி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான கடன் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சேவைகளை வழங்குவதில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். மேலும், பெரும்பாலான விவசாயிகள் தங்களது கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தி வருவதுடன், விவசாயிகளின் பூரண ஒத்துழைப்பால் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் இந்த நிலையில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவர்களது பணியை அவமதிக்கும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவரது பேச்சின் முழுமையான உள்ளடக்கம், கிடைக்கக்கூடிய சட்டரீதியான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறை முறையாக ஆய்வு செய்து, அதில் குற்றத்திற்குரிய அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கோஷங்கள் எழுப்பி கண்டனம் கூட்டுறவு ஊழியர்களின் கண்ணியம், பணிப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறையின் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், கூட்டுறவு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அவதூறான பேச்சுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டுறவு ஊழியர்களின் பணிப் பாதுகாப்பையும், கூட்டுறவுத் துறையின் நற்பெயரையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பு என வலியுறுத்திய அவர்கள், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
    1
    கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தருமபுரியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தருமபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
விவசாயிகளுடன் நல்லுறவு
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நட்பும், நல்லுறவும் நிலவி வருகிறது.
விவசாயிகளுக்கு தேவையான கடன் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சேவைகளை வழங்குவதில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும், பெரும்பாலான விவசாயிகள் தங்களது கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தி வருவதுடன், விவசாயிகளின் பூரண ஒத்துழைப்பால் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்த நிலையில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவர்களது பணியை அவமதிக்கும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அவரது பேச்சின் முழுமையான உள்ளடக்கம், கிடைக்கக்கூடிய சட்டரீதியான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறை முறையாக ஆய்வு செய்து, அதில் குற்றத்திற்குரிய அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோஷங்கள் எழுப்பி கண்டனம்
கூட்டுறவு ஊழியர்களின் கண்ணியம், பணிப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறையின் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
மேலும், கூட்டுறவு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அவதூறான பேச்சுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவு ஊழியர்களின் பணிப் பாதுகாப்பையும், கூட்டுறவுத் துறையின் நற்பெயரையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பு என வலியுறுத்திய அவர்கள், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகள் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டின் பேரில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது ஆவணங்கள் கோப்புகள் கணக்கில் வராத பணம் உள்ளிட்டவைகள் குறித்து மாலை 5 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணம் பொருள் கணக்கில் வராத பணம் குறித்து இரவு 8:30 மணிக்கு மேல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    1
    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை 
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகள் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டின் பேரில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது ஆவணங்கள் கோப்புகள் கணக்கில் வராத பணம் உள்ளிட்டவைகள் குறித்து மாலை 5 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணம் பொருள் கணக்கில் வராத பணம் குறித்து இரவு 8:30 மணிக்கு மேல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    user_Sowmiya 93
    Sowmiya 93
    பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி
    1
    பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம்
டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    14 hrs ago
  • பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு! மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
    1
    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு!
மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம் கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு  மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம் உடனடியாக மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் பூபால் கோரிக்கை விடுத்துள்ளார்,
    1
    கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம்


கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு 
மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம் உடனடியாக மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் பூபால் கோரிக்கை விடுத்துள்ளார்,
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • சேலத்தில் உலக சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி! மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைப்பு! உலக சைகை மொழி தினத்தை முன்னிட்டு, இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி திருவள்ளுவர் சிலை சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    1
    சேலத்தில் உலக சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி! மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைப்பு! 
உலக சைகை மொழி தினத்தை முன்னிட்டு, இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி திருவள்ளுவர் சிலை சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    24 min ago
  • நாட்றம்பள்ளி தாலுக்கா கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! நாட்றம்பள்ளி தாலுக்கா கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா ஜோலார்பேட்டை ஒன்றியம் கே. பந்தரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் உங்களை தேடி உங்கள் ஊரில் எடுத்து இருக்கிறேன் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் ஆய்வு மேற்கொண்டார்கள் ஆய்வின் போது ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தூய்மை பணியாளரின் வருகை மற்றும் வரி வசூல் இனங்கள் ஆகியவை கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணன் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் கௌரி சங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    2
    நாட்றம்பள்ளி தாலுக்கா கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
நாட்றம்பள்ளி தாலுக்கா கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா ஜோலார்பேட்டை ஒன்றியம் கே. பந்தரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் உங்களை தேடி உங்கள் ஊரில் எடுத்து இருக்கிறேன் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் ஆய்வு மேற்கொண்டார்கள் ஆய்வின் போது ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தூய்மை பணியாளரின் வருகை மற்றும் வரி வசூல் இனங்கள் ஆகியவை கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணன் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் கௌரி சங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Mediation for the Nation 3.0” திட்டம் – தருமபுரியில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ், சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீதித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சட்டக் கல்லூரி மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ் சமரசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு சமரசம் மற்றும் இணக்கமுறை மையத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் சமரச முறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 9 மணியளவில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி கே. சுதா அவர்கள் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, நான்கு சாலைகள் வழியாக சென்று, டி மேக்ஸ் திரையரங்கம் வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ–மாணவியர்கள் மற்றும் தருமபுரி கலைக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ–மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், கூடுதல் மாவட்ட நீதிபதி, போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், சார்பு நீதிபதிகள், மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் அனைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் உள்ளிட்ட நீதித்துறை அலுவலர்களும் பேரணியில் பங்கேற்றனர். இதனுடன், சமரச வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சமரச முறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    1
    Mediation for the Nation 3.0” திட்டம் – தருமபுரியில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி
தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ், சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீதித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சட்டக் கல்லூரி மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ் சமரசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு சமரசம் மற்றும் இணக்கமுறை மையத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் சமரச முறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 9 மணியளவில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி கே. சுதா அவர்கள் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, நான்கு சாலைகள் வழியாக சென்று, டி மேக்ஸ் திரையரங்கம் வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ–மாணவியர்கள் மற்றும் தருமபுரி கலைக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ–மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும், கூடுதல் மாவட்ட நீதிபதி, போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், சார்பு நீதிபதிகள், மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் அனைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் உள்ளிட்ட நீதித்துறை அலுவலர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
இதனுடன், சமரச வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சமரச முறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.