Shuru
Apke Nagar Ki App…
விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர்.
செல்வம்
விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர்.
- Gowri Gowriஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு🙏1 hr ago
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக்பள்ளியின்அறிவுதிறன் திருவிழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைப்பெற்றது. பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதா ராணி மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருட்ச் சகோதரி ஜெசிந்தா முத்தையா மற்றும் பள்ளி நிர்வாகிகளான முனிகிருஷ்ணன், சேகர், ஜாக்கப்ஜார்ஜ், கராத்தே மாஸ்டர் மாரியப்பன், வெங்கடசாமி ,தீர்த்தகிரிஆகியோர் முன்னிலை வகித்தனர்.1
- மொரப்பூர் ரயில் நிலையத்தில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சொந்த ஊர் வந்த இளைஞருக்கு உறவினர்கள், கிராம மக்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு. கடந்த சில நாட்களுக்கு முன்பு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், நான் முதல்வன் திட்டத்தில் படித்த தமிழகத்தைச் சார்ந்த 56 இளைஞர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கட்டரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார், என்ற இளைஞர் தேர்ச்சி பெற்று, இந்திய அளவில் 585 ஆவது ரேங்க் பெற்றுள்ளார். இந்த நிலையில் யூபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பிறகு, இன்று சென்னையிலிருந்து ரயில் மூலமாக சொந்த ஊருக்கு வந்தார். அப்பொழுது கட்டரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்த இளைஞருக்கு, மொரப்பூர் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து, மேல தாளங்கள் முழங்க மயிலாட்டம், மாடாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞரின் தாயார் ஆர்த்தி எடுத்து வரவேற்றார். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர்களுக்கு மொரப்பு பகுதியைச் சார்ந்வர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேர்வில் வெற்றி பெற்றதை குறித்து அருண்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து கடந்த எட்டு வருடங்களாக யூபிஎஸ்சி தேர்வுக்காக படித்து, மூன்று முறை நேர்காணலுக்கு சென்று அதில் சரியான மதிப்பெண் கிடைக்கவில்லை. இந்த முறை தமிழ்நாட்டில் முக்கிய திட்டமான நான் முதல்வன் திட்டம், ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர் இணைந்து நடத்தியதால் நான் வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். மேலும், நான் இந்த தேர்வுக்காக 8 வருடங்களாக படித்தேன். தற்போது இருக்கின்ற மாணவர்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்படாது. அவர்கள் குறுகிய காலத்திலேயே இது போன்ற தேர்வில் வெற்றி பெற முடியும். அதற்கான அனைத்து வசதிகளும் தமிழக அரசு அவர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது என்றும் கூறினார்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர் மீது தாக்குதல் – பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை* --------- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் பீடி பிடித்ததாக கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியரிடம் கூறச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இதே பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கணிப்பொறிகள் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.1
- Post by Saravanan Vasanthi2
- Post by Govindappa Govindappa1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு,பிக்கிலிகாப்புக் காடு, பிக்கனஅள்ளி காப்புக் காடு மற்றும் மலையயூர் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து விசாயநிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில் தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலத்தை தேடி வருகிறது. கோடை காலம் துவங்கி கடும் வெயில் சுட்டெரிப்பதால் பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாறு அணையில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்து கூட்டமாக நீரில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு வருகிறது. இதனை பொது மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1