கோவையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் எழுதிய 'மை பிரெஞ்சு கிராமர்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் மதிவாணன் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார். இது கிருபாஷினியின் நான்காவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்தவரான கிருபாஷினி ஜெயக்குமார், கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆவார். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை கொண்டுள்ள இவர், ஒரு மொழி பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இதற்கு முன்னதாக 'மை இங்கிலிஷ் கிராமர்', 'தி அன்டோல்ட் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்', 'மை இங்கிலிஷ் கிராமர்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருபாஷினி, தான் இதுவரை மொழி தொடர்பான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே தனது எதிர்கால லட்சியம் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பொதுமக்களுக்குப் பயிற்றுவித்து வருவதாகவும், இரண்டு மொழிகளுக்கு மேல் கற்பது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்பதையும், எந்த வயதினரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மொழி கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் எழுதிய 'மை பிரெஞ்சு கிராமர்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் மதிவாணன் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார். இது கிருபாஷினியின் நான்காவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்தவரான கிருபாஷினி ஜெயக்குமார், கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆவார். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில்
புலமை கொண்டுள்ள இவர், ஒரு மொழி பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இதற்கு முன்னதாக 'மை இங்கிலிஷ் கிராமர்', 'தி அன்டோல்ட் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்', 'மை இங்கிலிஷ் கிராமர்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருபாஷினி, தான் இதுவரை மொழி தொடர்பான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே
தனது எதிர்கால லட்சியம் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பொதுமக்களுக்குப் பயிற்றுவித்து வருவதாகவும், இரண்டு மொழிகளுக்கு மேல் கற்பது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்பதையும், எந்த வயதினரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மொழி கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு! தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன் அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்1
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் – திமுக சார்பில் மரியாதை கரூர் மாவட்ட திமுக சார்பில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ என ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.1
- திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…1
- சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.1
- நத்தம் கல்குவாரியில் அனுமதியை மீறி கல் எடுத்து இயற்கை வளத்தை கடித்து கல்குவாரியின் உரிமையாளரை கண்டித்து போராட்டம் நடத்த தயார் என நத்தம் உரிமையாளர்கள் அறிவித்த நிலையில் அந்த கல்குவார் படத்தை இப்பொழுது நத்தம் குடியிருப்பு பகுதியினர் வெளியீட்டு விட்டனர்1
- சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்கு எதிர்ப்பு தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது மரங்கள் வெட்டுவதற்கு இந்து எழுச்சி முன்னணி கண்டனம்... தேனி மாவட்டம், தேனி–பெரியகுளம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், JCB இயந்திரம் மூலம் சாலையோரம் உள்ள பசுமையான மரங்களும் வெட்டி சாய்க்கப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியமான பணிதான். சாலையின் பாதுகாப்பிற்கும், பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை இந்து எழுச்சி முன்னணி வரவேற்கிறது. ஆனால் மழை குறைந்து, நீர்மட்டம் குறைந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக பொதுமக்கள் தவித்து வரும் காலகட்டத்தில், வளர்ந்த மரங்களை வெட்டுவது எந்த வகையில் நியாயம்?ஒரு மரம் வளர பல ஆண்டுகள் ஆகிறது. ஒரு JCB இயந்திரத்தால் சில நிமிடங்களில் அதை வெட்டி சாய்த்துவிட முடியும். ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் – வரவேற்கிறோம் ஆனால் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறையினர் இது போன்ற சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என இன்று எழுச்சி முன்னணி சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்1
- தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் ஒன்றிய அரசை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாட்டம் ஜாதி வாரி கணக்கெடுப்பதில் ஏற்படுத்த நினைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகமாவட்ட தலைவர் சுருளிராஜு வரவேற்புரை ஆற்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தில் துவக்க உரையும் நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகன் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பேச்சாளர் கண்ணன் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் போடி முகமது ஆரிப் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீல கனலன் ஆதித்தமிழர் பேரவை செய்தி தொடர்புத்துறை சுரேஷ் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி புரட்சி தமிழர் கட்சி மாநில அமைப்பாளர் அருந்தமிழர் அரசு மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாநில பொருளாளர் மணிகண்டன் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தருண் திராவிட புரட்சி கழக செயலாளர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்1