logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-... இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

1 day ago
user_SIMMA
SIMMA
Engineer இராமநாதபுரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
1 day ago
9e956add-219c-418f-bd4b-c693e81ef65b

16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-... இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவாடானை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடும் அவதி திருவாடானை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்களும் சில்லறை விற்பனையாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.​இப்பகுதியில் ஆவின் நிர்வாகம் சார்பில் 10 ரூபாய் பால் பாக்கெட் முதல் 1 லிட்டர் பாக்கெட் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 10 ரூபாய் பால் பாக்கெட்டுகளையே அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த 10 ரூபாய் பால் பாக்கெட்டுகள் முற்றிலுமாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.​மேலும், தினசரி தேவைகளுக்கான அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளும் மிகக் குறைந்த அளவிலேயே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பால் முகவர்கள் மற்றும் கடைக்காரர்கள் பால் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கமாக கிடைக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்காததால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பால் பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.​எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை கருத்தில் கொண்டு, திருவாடானை பகுதியில் சீரான முறையில் ஆவின் பால் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திருவாடானை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடும் அவதி
திருவாடானை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்களும் சில்லறை விற்பனையாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.​இப்பகுதியில் ஆவின் நிர்வாகம் சார்பில் 10 ரூபாய் பால் பாக்கெட் முதல் 1 லிட்டர் பாக்கெட் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 10 ரூபாய் பால் பாக்கெட்டுகளையே அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த 10 ரூபாய் பால் பாக்கெட்டுகள் முற்றிலுமாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.​மேலும், தினசரி தேவைகளுக்கான அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளும் மிகக் குறைந்த அளவிலேயே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பால் முகவர்கள் மற்றும் கடைக்காரர்கள் பால் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கமாக கிடைக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்காததால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பால் பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.​எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை கருத்தில் கொண்டு, திருவாடானை பகுதியில் சீரான முறையில் ஆவின் பால் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்! கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்! ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர். இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக (Post-mortem) ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்!
கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர்.
இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக (Post-mortem) ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Kaviston
    Kaviston
    இராமேஸ்வரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • சிவகங்கையில் அருகே இரட்டை கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான நபர்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டக்காரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்னும் உடற்கூறு ஆய்வு நடைபெறாததால், நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    1
    சிவகங்கையில்  அருகே இரட்டை கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான நபர்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போராட்டக்காரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்னும் உடற்கூறு ஆய்வு நடைபெறாததால், நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணியில் விநாயகர் சிலை கரைத்தனர் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணி விநாயகர் சிலை கரைத்தனர் பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் கரைத்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.
    2
    காரைக்குடி கழனி வாசலில் 
பருப்பு ஊரணியில் 
விநாயகர் சிலை கரைத்தனர் :
சிவகங்கை மாவட்டம் 
காரைக்குடி கழனி வாசலில் 
பருப்பு ஊரணி 
விநாயகர் சிலை கரைத்தனர் 
பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் 
கரைத்தனர்.
ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை  திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின்  முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை  19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில்  இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.
இதனை முன்னிட்டு இன்று காலையில்  ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    3 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது .இதனை அடுத்து அரிமளம் தெப்ப குளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிமளம் பசுமை மீட்பு குழு வரத்து வாரிகளை தூய்மை செய்ததன் பேரில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
    1
    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது .இதனை அடுத்து அரிமளம் தெப்ப குளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிமளம் பசுமை மீட்பு குழு வரத்து வாரிகளை தூய்மை செய்ததன் பேரில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பணைகள் மற்றும் கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. விவசாய நிலங்களைச் சீரமைக்க மானியம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளைச் சீரமைத்தல், பேருந்து வழித்தடங்களை நீட்டித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் 151 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி  குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பணைகள் மற்றும் கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
விவசாய நிலங்களைச் சீரமைக்க மானியம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளைச் சீரமைத்தல், பேருந்து வழித்தடங்களை நீட்டித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் 151 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருவாடானை அருகே வயல்வெளிகளில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளாலும் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.​சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் எழும்புக் கூடான மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது. இதேபோல, ஆதியூர் அருகே மல்லிக்குடி கிராமத்திலும் மின் கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் வயல்வெளியில் சாய்ந்து நிற்கிறது.​மேலும், மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி ஆகிய பகுதிகளில் உயர்மின்னழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.​நிலத்தை உழுது விதைப்பது முதல், பயிர்களைப் பராமரித்து அறுவடை செய்வது வரை அனைத்துக் கட்டங்களிலும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பணியாற்றும் அவலநிலை நீடிக்கிறது. டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாத சூழல் நிலவுவதால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.​இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருவாடானை அருகே வயல்வெளிகளில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு
திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளாலும் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.​சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் எழும்புக் கூடான மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது. இதேபோல, ஆதியூர் அருகே மல்லிக்குடி கிராமத்திலும் மின் கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் வயல்வெளியில் சாய்ந்து நிற்கிறது.​மேலும், மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி ஆகிய பகுதிகளில் உயர்மின்னழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.​நிலத்தை உழுது விதைப்பது முதல், பயிர்களைப் பராமரித்து அறுவடை செய்வது வரை அனைத்துக் கட்டங்களிலும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பணியாற்றும் அவலநிலை நீடிக்கிறது. டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாத சூழல் நிலவுவதால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.​இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.