ஹஜ் பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையத்துக்கு அருகாமையில் ஹஜ் இல்லம் - தமிழக முதல்வருக்கு நன்றி- ஹஜ் கமிட்டி முன்னாள் உறுப்பினர் கலீபா சாஹிப் "ஒவ்வொரு இஸ்லாமியரின் புனித கடமைகளில் ஹஜ் பயணமும் ஒன்று. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் திறக்கப்பட இருக்கிறது" என முன்னாள் ஹஜ் கமிட்டி உறுப்பினரும், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவருமான சையத் முகம்மது கலீபா சாஹிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் டிச.16-ம் தேதி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்துக்கு அருகில் தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று மாண்புமிகு முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டி,தனது வாக்குறுதிபடி நிறைவேற்றி தந்துள்ளார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். இதனை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மனமார வரவேற்கின்றனர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த வருடம் என்னை தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமித்து பணியாற்றும் வாய்ப்பினை தந்தார்கள், அப்பொழுது நான் இந்த கோரிக்கையை நேரடியாகவே வலியுறுத்தினேன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த அரிய நேரத்தில் தமிழகத்தின் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹஜ் பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையத்துக்கு அருகாமையில் ஹஜ் இல்லம் - தமிழக முதல்வருக்கு நன்றி- ஹஜ் கமிட்டி முன்னாள் உறுப்பினர் கலீபா சாஹிப் "ஒவ்வொரு இஸ்லாமியரின் புனித கடமைகளில் ஹஜ் பயணமும் ஒன்று. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் திறக்கப்பட இருக்கிறது" என முன்னாள் ஹஜ் கமிட்டி உறுப்பினரும், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவருமான சையத் முகம்மது கலீபா சாஹிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் டிச.16-ம் தேதி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்துக்கு அருகில்
தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று மாண்புமிகு முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டி,தனது வாக்குறுதிபடி நிறைவேற்றி தந்துள்ளார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். இதனை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மனமார வரவேற்கின்றனர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த வருடம் என்னை தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமித்து பணியாற்றும் வாய்ப்பினை தந்தார்கள், அப்பொழுது நான் இந்த கோரிக்கையை நேரடியாகவே வலியுறுத்தினேன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த அரிய நேரத்தில் தமிழகத்தின் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இரவின் மடியில்.1
- சிரிக்க மட்டும் 😉1
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1