Shuru
Apke Nagar Ki App…
நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது
CHANDRA SEKAR
நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.1
- *முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல் - தந்தையின் உடலை பார்த்து மகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது* *தாய், தந்தை உயிரிழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை* தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த சங்கர்(50) மற்றும் அவரது மனைவி கணேஸ்வரி (46) கடந்த செவ்வாய்க்கிழமை லோயர் கேம்ப் பாலம் அருகில் மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட தடுப்பணை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது சங்கர் மறுக்கரையில் இருந்த தனது பேரக்குழந்தையை அழைத்துக் கொண்டு வரும்போது ஆற்றின் வேகம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டார் தனது கணவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போது அவரின் மனைவியும் அடித்துச் செல்லப்பட்டார் இதனை அடுத்து கரையில் நின்று இருந்த நபர் உடனே ஆற்றில் இறங்கி குழந்தையை மட்டும் காப்பாற்றிய நிலையில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டு சங்கரை தொடர்ந்து தேடி வந்தனர் இந்த நிலையில் இன்று மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சங்கரின் உடல் மீட்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர் அவரின் உடலைப் பார்த்து மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது தந்தை மற்றும் தாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் மகன் மற்றும் மகளுக்கு தமிழக அரசு உதவ நிதி உதவி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்1
- அரசியல் காரணத்திற்காக கிரிவலம் மேற்கொள்ளவில்லை பலமுறை திருச்செங்கோடு வந்துள்ளேன் இந்த முறை பௌர்ணமி தினம் என்பதால் கிரிவலத்தில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி உள்ளோம்.67 லிலும் 77 லிலும் நடந்ததைபோல் பாமரர்கள் படித்தவர்கள் பண்பாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் இட ஒதுக்கீடு உள்ள தொகுதிகள் அல்லாத பொது தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள்வேட்பாளராக ஆவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.அதிமுகவை சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல யார் நல்லவர்கள் யார் சிறந்த கொள்கை உடையவர்கள் என்பதை அறிந்தவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேர்கிறார்கள்.நிரந்தர முதல்வர் என்று சொல்வது நகைச்சுவை அல்ல 2026 தேர்தலில் த வெக மகத்தான வெற்றி பெறும் விஜய் முதல்வராவார் தொடர்ந்து நிரந்தர முதல்வராக இருப்பார் கிரிவலத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ் பேட்டி* திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் திருவண்ணாமலைக்கு நிகராக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம் அதன்படி மார்கழி மாத பௌர்ணமி தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் அருண்ராஜ் கிரிவளத்தில் பாதயாத்திரையாக நடந்து சென்றதோடு ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மலையடிவாரம் ஆறுமுகசாமிகோவிலில் சாமி தரிசனம் செய்து மரியாதையை ஏற்றுக் கொண்டுநெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு பின் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் கிரிவலம் தொடங்கினார். நாமக்கல் ரோடு சந்திப்பில் கிரிவலப் பாதை தொடங்கும் இடத்தில்அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதேபோல் மலையடிகுட்டைப் பகுதிகளும் வேலூர் ரோட்டில் ஒரு பகுதியிலும் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் அருண்ராஜ் கலந்து கொண்டு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு உணவுகளை வழங்கினார். அருண்ராஜ் கிரிவலம் வருவதை ஒட்டிவிஜயின் பேச்சுகள் ஒளிபரப்பவும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையிலும்அன்னதானம் வழங்கப்பட்ட மூன்று இடங்களிலும் எல்இடி திரைகள் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் எல்இடி தரை செயல்படவில்லை.அன்னதானம் நடைபெற்ற இடங்களிலோ அல்லது கிரிவலப் பாதைகளிலோ எங்கும் கட்சி கொடிகள் எதுவும் நடப்படவில்லை பேனர்கள் வைக்கப்படவில்லை மேம் அறக்கட்டளை என்கிற பேனர் ஒன்று மட்டும் வைக்கப் பட்டிருந்தது.ஆறுமுகசாமி கோவில் அருகில் கிரிவலம் தொடங்கிய தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த கிரிவலம் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும் விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் என வேண்டிய கிரிவலம் செல்கிறோம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம்.எனக்கூறினார் தொடர்ந்து செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக இந்த கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆனால் நீங்கள் இதுவரை கலந்து கொள்ளவில்லை இப்பொழுது அரசியல் காரணங்களுக்காக கிரிவலம் கலந்து கொள்கிறீர்களா என கேட்டபோது பலமுறை நான் திருச்செங்கோடு வந்திருக்கிறேன் கிரிவலம் செல்ல வேண்டிய வாய்ப்பு அப்போது உருவாகவில்லை என்று பௌர்ணமி தினத்தன்று வந்திருப்பதால் கிரிவலம் செல்கிறேன் கிரிவலம் செல்லும் போது பக்தர்களுக்கு எங்கள் வெற்றியையும் எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்கிற வேண்டுதலையும் வைத்து அன்னதானம் வழங்குகிறோம் அவ்வளவுதானே தவிர இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லைதெரிவித்தார் தொடர்ந்து 67 மற்றும் 77 போல் நாங்கள் ஆட்சியமைப்போம் என கூறுகிறீர்கள் 67 பாமரர்கள் ஏழைகள்குதிரை வண்டி ஓட்டுபவர்கள் சைக்கிள் கடைக்காரர்கள் டீக்கடைக்காரர்கள் போன்றவர்கள்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள் இதே போல் 77 இல் படித்தவர்கள் பண்பாளர்கள் பலரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள் அதுபோல் உங்கள் கட்சியிலும் நடக்குமா என செய்தியாளர்கள் கேட்டபோது நிச்சயம் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என கூறினார் தொடர்ந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உங்கள் கொள்கை என கூறும் நீங்கள் இட ஒதுக்கீடு இல்லாத தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளராக அறிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் நிச்சயம் இதையெல்லாம் நடக்கும் நாங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்போம் என கூறினார் அதிமுகவிலிருந்து பலரும் உங்கள் கட்சியில் வந்து சேர்வதால் அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியது போல் தான் உள்ளது என கேட்டதற்குஅப்படியெல்லாம் இல்லை எங்கள் கொள்கை பிடித்தவர்கள் எங்களை பிடித்தவர்கள் எங்கள் வெற்றியை உறுதி செய்தவர்கள் யாருடன் இருந்தால் நல்லது என நினைத்தவர்கள் எங்களை நாடி வருகிறார்கள் நாங்கள் அரவணைத்து செல்கிறோம் என கூறினார் மேலும் இன்று கூட திருச்செங்கோடு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஒன்றிய பெருந்தலைவர் இருந்த பாலசுப்பிரமணியம் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார் எனக்கு கூறினார்தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர்கள் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவிர வேறு யாரும் பெரிய பிரமுகர்கள் வராத நிலையில் அமமுகவுக்கு,ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தான் உங்கள் கட்சியில் இணைகிறார்கள் இது எப்படி அண்ணா திமுகவிலிருந்து வருவதாகவும் எனக் கேட்டபோது அதிமுகவில் சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல எங்களை நாடி வருபவர்களை அரவணைத்து செல்கிறோம் அவ்வளவுதான் அவர்களும் அதிமுகவில் இருந்தவர்கள் தான் என கூறினார்.திமுக தான் எங்கள் அரசியல் எதிரி என திமுகவை ஊழல் கட்சி எனக் கூறும் நீங்கள் ஊழல் புகாரில் சிறை தண்டனை பெருமளவுக்கு போன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றியோ அதிமுகவின் ஊழலைப் பற்றியோ பேசுவதில்லையே ஏன் எனக் கேட்டபோது இது குறித்து ஏற்கனவே பேசி ஆகிவிட்டது என கேள்வியை தவிர்த்தார்.தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என தாவிக்கை நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்ததை குறித்து கேட்டபோது அமைச்சர் சாமிநாதன் இது நகைச்சுவையாக உள்ளது எனக் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவருக்கு வேண்டுமானால் இது நகைச்சுவையாக இருக்கலாம் வரும் 2026 தேர்தலில் தாவீகா மகத்தான வெற்றி பெறும் எங்கள் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வருவார் தொடர்ந்து நிரந்தரம் முதல்வராக இருப்பார் எனதெரிவித்தார்.நிகழ்ச்சி என்பது கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் உடன் இருந்தனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயார் படுத்தும் பணி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து தங்களது காளைகள் தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.1
- ஒரு வினாடியில்.1
- Tamil Golden Actor Nagesh Sir Dialogue! Life Fact மக்களே 👌 என்றும் உங்கள் நினைவுகளுடன்🙏 🎭 Nagesh – வாழ்க்கை வரலாறு (Biodata – தமிழ்) முழுப் பெயர்: யேஷ்வந்த் ராவ் திரைபெயர்: நாகேஷ் பிறந்த தேதி: 27 செப்டம்பர் 1933 பிறந்த இடம்: தார்வாட், கர்நாடகா (அப்போது மும்பை மாநிலம்) இறந்த தேதி: 31 ஜனவரி 2009 வயது: 75 தேசியம்: இந்தியன் மொழி: தமிழ் தொழில்: நடிகர், நகைச்சுவையாளர் திரைத்துறை: தமிழ் சினிமா 🎬 திரைப் பயணம் நாகேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மாமன்னர் என அழைக்கப்பட்டவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர மற்றும் காரக்டர் ரோல்கள் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1960–70களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ⭐ பிரபலமான திரைப்படங்கள் சர்வர் சுந்தரம் காதலிக்க நேரமில்லை எதிர்நீச்சல் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் மைக்கேல் மதன காமராஜன் 🏆 விருதுகள் பத்ம பூஷண் – இந்திய அரசின் உயரிய குடிமகன் விருது கலைமாமணி – தமிழக அரசு பல மாநில மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் ❤️ சிறப்பு நகைச்சுவையை நடிப்பு கலை என்ற உயரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஊக்கமாக இருந்தவர் உடல் மொழி, முகபாவனை, டைமிங்—அனைத்திலும் சிறந்தவர்1
- *பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !!* வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெண்களுக்கான *TATA ELECTRONICS மற்றும் VPB MEMORIAL TRUST* இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாள் : 04-01-2026 இடம் : சிநேகா மஹால் வேடசந்தூர் நேரம் : காலை 9மணி முதல் 5மணி வரை முகாமை துவக்கி வைப்பவர் ; *Dr.VPB.பரமசிவம்MBBS* கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெண்கள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்2
- வேடசந்தூர் அருகே காக்கா தோப்பு, முனியப்பன் கோவில் பிரிவு அருகே இன்று இன்று ஆம்புலன்ஸ் டாட்டா ஏஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் மூன்று பேர் காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்.1
- உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தக்கோரி தேனி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வைத்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திருச்செங்கோட்டை தலைமை இடமாக வைத்து போர்வெல் உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது.அங்குள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இந்தியா முழுவதும் சென்று பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் ,வாகன பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை உள்ளிட்ட சார்பு தொழில் பணிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் துளைபோட பயன்படுத்தப்படும் காப்பர், ராடு உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களின் விலை சந்தை மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுவதால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.சீனாவில் இருந்து வரும் காப்பர் மூலப்பொருள் வரத்து நின்றதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் கையிருப்பில் உள்ள காப்பர் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20,000 ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் குறிப்பாக விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தி ஏஜெண்டுகளிடமும் பொதுமக்களிடமும் போர்வெல் உரிமையாளர்களால் வாங்க முடியவில்லை.இதனால் இந்தியா முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் போர்வெல் உரிமையாளர்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க தற்போது 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுத்து உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தும் வரை காலவரையற்ற முறையில் தங்களது போராட்டம் தொடரும் என போர்வெல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.1