கிணற்றில் சீரிப்பாய்ந்த கார் உயிர் தப்பிய குடும்பம் பாலக்கோடு அருகே 75 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன் (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சொகுசுகார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது, தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.1
- எடப்பாடி அருகே மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சர்வரெட்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவானது கடந்த வாரம் பூச்சாற்றுகளிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்... இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சர்வரெட்டியூர்,பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கூடக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா மற்றும் சேவல்களை முனியப்பனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்... மேலும் மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு அழகு குத்தியும் மற்றும் பல்வேறு வகையான வேண்டுதல்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...1
- Post by அன்பரசு1
- முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், புவனகிரியில் அமைந்துள்ள முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் மிக விமர்சையாக நடைபெற்றது.திருக்கல்யாணம் கணபதி பூஜையுடன் தொடங்கி, திருமண சீர்வரிசை தாம்பூலத் தட்டுகள் வைத்து பூஜிக்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல், யாக வேள்வி, மற்றும் திருமண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து கன்னிகாதானம் நிகழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையை திருமாங்கல்யம் அணிவித்து மணமுடித்தார். இந்நிகழ்வின் இறுதியில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளியில் திருக்கருகாவூர் கற்பரச்சாம்பிகை கோவிலின் இணை கோவிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அதிகாலை நடைபெற்றது. அய்யம்பேட்டை செளராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனமும்,கோபுர தரிசனமும் செய்தனர்.2
- கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.1
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்1
- Post by ஆ.கார்த்திக் PFHR1