logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி நகர் உழவர் சந்தையில் ஜூலை 12ஆம் தேதிக்கான காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பீன்ஸ் ரூ.115/110, கருணை ரூ.70, கேரட் ரூ.64, அவரை ரூ.64/62, கத்தரி ரூ.60-50, உள்ளி ரூ.60-30, பாகல் ரூ.54, மிளகாய் ரூ.48/40, நூல்கோல் ரூ.42, பீட்ரூட் ரூ.40, சேனை ரூ.38, பல்லாரி ரூ.38/35, வெண்டை ரூ.35, கொத்தவரை ரூ.35, கோஸ் ரூ.35, முள்ளங்கி ரூ.30, புடலை ரூ.28, உருளை ரூ.26, தக்காளி ரூ.20/18, சவ்சவ் ரூ.20, பூசணி ரூ.18-14 மற்றும் சுரை ரூ.15-10 ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

5 hrs ago
user_Theni Godwin
Theni Godwin
பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
5 hrs ago
9162984e-9a37-4828-a1b4-2375b9c19de4

தேனி நகர் உழவர் சந்தையில் ஜூலை 12ஆம் தேதிக்கான காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பீன்ஸ் ரூ.115/110, கருணை ரூ.70, கேரட் ரூ.64, அவரை ரூ.64/62, கத்தரி ரூ.60-50, உள்ளி ரூ.60-30, பாகல் ரூ.54, மிளகாய் ரூ.48/40, நூல்கோல் ரூ.42, பீட்ரூட் ரூ.40, சேனை ரூ.38, பல்லாரி ரூ.38/35, வெண்டை ரூ.35, கொத்தவரை ரூ.35, கோஸ் ரூ.35, முள்ளங்கி ரூ.30, புடலை ரூ.28, உருளை ரூ.26, தக்காளி ரூ.20/18, சவ்சவ் ரூ.20, பூசணி ரூ.18-14 மற்றும் சுரை ரூ.15-10 ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இப்பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முன்னதாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இப்பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_க.பாலசுப்பிரமணியன்
    க.பாலசுப்பிரமணியன்
    Photographer சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குறுஞ்சங்குளம் கம்மாய்க்குச் செல்லும் நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கால்வாய் அடைக்கப்பட்டதால் கம்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக கால்வாயைத் திறந்து, தடையின்றி நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குறுஞ்சங்குளம் கம்மாய்க்குச் செல்லும் நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கால்வாய் அடைக்கப்பட்டதால் கம்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக கால்வாயைத் திறந்து, தடையின்றி நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    20 hrs ago
  • தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி சாமி தரிசனம் செய்தார். சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமான இந்த கோவிலுக்கு வருகை தந்த அவர், அங்குள்ள காக்கை உருவ சிலைக்கு பொறி படைத்தும், எள் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, மூலவருக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அவர் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி, குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வருவது தனக்கு வழக்கமான ஒன்று தான் என்று கூறினார். மேலும், இந்த இடத்தில் அரசியல் தொடர்பாக ஏதும் பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
    1
    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி சாமி தரிசனம் செய்தார். சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமான இந்த கோவிலுக்கு வருகை தந்த அவர், அங்குள்ள காக்கை உருவ சிலைக்கு பொறி படைத்தும், எள் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, மூலவருக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அவர் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி, குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வருவது தனக்கு வழக்கமான ஒன்று தான் என்று கூறினார். மேலும், இந்த இடத்தில் அரசியல் தொடர்பாக ஏதும் பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்த ஜெபகுமார் (35) மற்றும் சக்கரவர்த்தி (34) ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் முதல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெபகுமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெபகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெபகுமார் மது போதையில் தற்செயலாகக் கீழே விழுந்தாரா அல்லது அவரது நண்பர் தள்ளிவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்த ஜெபகுமார் (35) மற்றும் சக்கரவர்த்தி (34) ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் முதல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெபகுமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெபகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜெபகுமார் மது போதையில் தற்செயலாகக் கீழே விழுந்தாரா அல்லது அவரது நண்பர் தள்ளிவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Jagan
    Jagan
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.