Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டம், கருவந்தா ஊராட்சியில் சிமெண்ட் சாலை. தண்ணீர் வசதி, பஸ் வசதி, மற்றும் சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டும் கருவந்தா ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது போராட்டத்திற்கு பனை பாதுகாப்பு அணி மாநில தலைவர் வைரக்கண் தலைமை வகித்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற உத்திரவாதம் தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தார்
King
தென்காசி மாவட்டம், கருவந்தா ஊராட்சியில் சிமெண்ட் சாலை. தண்ணீர் வசதி, பஸ் வசதி, மற்றும் சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டும் கருவந்தா ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது போராட்டத்திற்கு பனை பாதுகாப்பு அணி மாநில தலைவர் வைரக்கண் தலைமை வகித்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற உத்திரவாதம் தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தார்
More news from தமிழ்நாடு and nearby areas
- குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அதில், 2021சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் 68% வாக்குகளும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 64சதவீதத்திற்கு குறைவாக வாக்களித்துள்ளனர். நடைபெற இருக்கின்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய இளம் மற்றும் முதல் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.1
- தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்1
- பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது1
- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3
- திண்டுக்கல் -மதுரை சாலையில் இன்று திடீரென தீப்பிடித்து எறிந்தது இந்த தீயின் காரணமாக வான் உயரத்தில் கரும்புகை இருந்த காரணத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டைகள் பெரும் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது1
- தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் அரசின் சாதனை குறித்த விளம்பரங்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அதனை ஊழியர்கள் பேப்பர் ஒட்டி மறைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன1