logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒகேனக்கலில் காவிரி ஆற்றை தூய்மையாக வைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் பென்னாகரம்:29 ஒகேனக்கல் காவிரி ஆற்றை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பாதுகாக்க வலியுறுத்தி வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ஒகேனக்கல் முதலைப் பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட ஈமச்சடங்குகளை செய்துவிட்டு, தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை ஆற்றில் வீசி செல்கின்றனர். இதனால் தண்ணீர் குறையும் காலங்களில் முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் துணிக் கழிவுகள் அதிகளவில் தேங்கி, துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், அண்ணாமலை உருவாக்கிய வீ த லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, வரும் 30-ஆம் தேதி ஒகேனக்கல் முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் தேங்கியுள்ள துணிக் கழிவுகளை அகற்றுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, வீ த லீடர்ஸ் தன்னார்வலர் கவிதா பழனிச்சாமி தலைமையில், குழுவினர் ஒகேனக்கல் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் ஈமச்சடங்கு செய்ய வந்த பொதுமக்கள், புரோகிதர்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, காவிரி ஆற்றில் துணிகள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட கழிவுகளை வீச வேண்டாம் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் ஆற்றில் வீசும் துணிகள் மற்றும் கழிவுகளை சேகரித்து வைப்பதற்காக ஆங்காங்கே இரும்பு குப்பைத் தொட்டிகளும் வைக்கப்பட்டன. “காவிரி நதியை நமது முன்னோர்கள் தாயாகவும், கடவுளாகவும் வழிபட்டுள்ளனர். தமிழகத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியை தூய்மையாகவும், அழகாகவும் பாதுகாப்பது அனைவரின் கடமை. ஆற்றில் வீசப்படும் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பல்வேறு நோய்க்கிருமிகள் உருவாகவும் காரணமாகின்றன. எனவே, காவிரி ஆற்றில் எந்தவிதமான கழிவுகளையும் வீசாமல், குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்” என வீ த லீடர்ஸ் குழுவினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

5 hrs ago
user_SURENDIRAVARMA. C
SURENDIRAVARMA. C
Local News Reporter Palakkodu, Dharmapuri•
5 hrs ago
fbe7c5d8-dee3-48cb-8b9f-633b87938a8b

ஒகேனக்கலில் காவிரி ஆற்றை தூய்மையாக வைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் பென்னாகரம்:29 ஒகேனக்கல் காவிரி ஆற்றை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பாதுகாக்க வலியுறுத்தி வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ஒகேனக்கல் முதலைப் பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட ஈமச்சடங்குகளை செய்துவிட்டு, தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை ஆற்றில் வீசி செல்கின்றனர். இதனால் தண்ணீர் குறையும் காலங்களில் முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் துணிக் கழிவுகள் அதிகளவில் தேங்கி, துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், அண்ணாமலை உருவாக்கிய வீ த லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, வரும் 30-ஆம் தேதி ஒகேனக்கல் முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் தேங்கியுள்ள துணிக் கழிவுகளை அகற்றுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, வீ த லீடர்ஸ் தன்னார்வலர் கவிதா பழனிச்சாமி தலைமையில், குழுவினர் ஒகேனக்கல் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் ஈமச்சடங்கு செய்ய வந்த பொதுமக்கள், புரோகிதர்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, காவிரி ஆற்றில் துணிகள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட கழிவுகளை வீச வேண்டாம் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் ஆற்றில் வீசும் துணிகள் மற்றும் கழிவுகளை சேகரித்து வைப்பதற்காக ஆங்காங்கே இரும்பு குப்பைத் தொட்டிகளும் வைக்கப்பட்டன. “காவிரி நதியை நமது முன்னோர்கள் தாயாகவும், கடவுளாகவும் வழிபட்டுள்ளனர். தமிழகத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியை தூய்மையாகவும், அழகாகவும் பாதுகாப்பது அனைவரின் கடமை. ஆற்றில் வீசப்படும் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பல்வேறு நோய்க்கிருமிகள் உருவாகவும் காரணமாகின்றன. எனவே, காவிரி ஆற்றில் எந்தவிதமான கழிவுகளையும் வீசாமல், குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்” என வீ த லீடர்ஸ் குழுவினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் ஆத்தூர் தலைவாசல் கருமந்துறை பகுதிக்கு புதிய வழித்தடம் பேருந்தை தொடங்கி வைத்தார் மேலும் புதிய பேருந்து ஆத்தூர் பணி மணைக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
    1
    புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் ஆத்தூர் தலைவாசல் கருமந்துறை பகுதிக்கு புதிய வழித்தடம் பேருந்தை தொடங்கி வைத்தார் மேலும் புதிய பேருந்து ஆத்தூர் பணி மணைக்கு  வழங்கப்பட்டது இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    1
    மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • பூண்டி நகராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாநகராட்சி குப்பை லாரிகள் வழிமறித்து சிறைபிடிப்பு... திருப்பூர் மாவட்டம்,பூண்டி நகராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உட்பட மொத்த கவுன்சிலர்களும் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் குப்பை லாரிகளை வழி மறித்து சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு மூன்று மாதங்களாக தேங்கிய குப்பைகளை, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அம்மாபாளையம் பாறைக்குழியில் அடாவடியாக குப்பை கொட்டும் போக்கைக் கண்டித்தும், வரிசைகட்டி நிற்கும் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    பூண்டி நகராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாநகராட்சி குப்பை லாரிகள் வழிமறித்து சிறைபிடிப்பு...
திருப்பூர் மாவட்டம்,பூண்டி நகராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உட்பட மொத்த கவுன்சிலர்களும் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் குப்பை லாரிகளை வழி மறித்து சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு மூன்று மாதங்களாக தேங்கிய குப்பைகளை, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அம்மாபாளையம் பாறைக்குழியில் அடாவடியாக குப்பை கொட்டும் போக்கைக் கண்டித்தும், வரிசைகட்டி நிற்கும் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    user_முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
    1
    காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
    user_த.சுரேஷ்
    த.சுரேஷ்
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு . சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
    1
    சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு 
நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு .
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹.30 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையில்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ₹.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். வீ கொடுக்கல் பயிர் கடன், நகைகடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
    1
    டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹.30 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையில்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ₹.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். வீ கொடுக்கல் பயிர் கடன், நகைகடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.