logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை. மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை மதுரை, மார். 16 - மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது உடல்நிலையை குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும் சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநிலங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரணமாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 hrs ago
user_Ponmaran Thekkathir Reporter
Ponmaran Thekkathir Reporter
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
2 hrs ago

மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை. மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை மதுரை, மார். 16 - மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது

93084ccb-2170-43ab-b76b-2875c08c4eb6

உடல்நிலையை குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும் சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநிலங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரணமாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை தெற்கு வாசல் என் எம் ஆர் பாலம் ஜெயவிலாஸ் ஷெட் அருகே இன்று (மார்ச்.16) மாலை வார்டு 86 பகுதியான கீரைத்துறை சுற்று வட்டாரங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை என்று கூறி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேசி தண்ணீர் முறையாக வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    1
    மதுரை தெற்கு வாசல் என் எம் ஆர் பாலம்  ஜெயவிலாஸ் ஷெட் அருகே இன்று (மார்ச்.16) மாலை வார்டு 86 பகுதியான கீரைத்துறை  சுற்று வட்டாரங்களை சேர்ந்த  பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை என்று கூறி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேசி தண்ணீர் முறையாக வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    23 min ago
  • மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை மதுரை, மார். 16 - மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது உடல்நிலையை குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும் சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநிலங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரணமாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    2
    மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மதுரை, மார். 16 -
மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது உடல்நிலையை குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார்.
பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும்
சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநிலங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரணமாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செவல்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்படி பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவபெருமான் மற்றும் நந்தி பெருமான் வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினார். இந்த பிரதோஷ வழிபாட்டில் செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர். வழிபாடு நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி  செவல்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 
அதன்படி பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவபெருமான் மற்றும் நந்தி பெருமான் வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
இந்த பிரதோஷ வழிபாட்டில் செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர்.
வழிபாடு நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_குமார்
    குமார்
    காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    55 min ago
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது
    1
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்
    1
    தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் பூசி அளித்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் தார் பூசி அளித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து ரயில்வே போலீசார் மூன்று நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் பூசி அளித்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் தார் பூசி அளித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து ரயில்வே போலீசார் மூன்று நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை பிடிக்க தீவிர   தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    28 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.