Shuru
Apke Nagar Ki App…
கைலாய வாக்கியங்கள் முழங்க தேரோட்டம் திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் நாளான இன்று மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நம்ம ஊரு புதுக்கோட்டை

More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் கிழக்கு: வண்ணத்துப்பூச்சி சுமந்துவருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கலை கட்டிய புத்தாண்டு மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் அருள்தந்தை அருமைசாமி தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான நன்றி திருப்பலியும், 2026ஆண்டிற்கான சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆலய பலிபீடத்தில் இருந்த 2025 ஆம் ஆண்டு மறைந்த பின் வண்ணமயமான எண்ணங்களுடன் வளமான புதிய ஆண்டு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் வண்ணத்துப்பூச்சி 2026ம் புதிய ஆண்டை சுமந்து வருவது போன்று புத்தாண்டு பிறந்தந்தது1
- புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் . தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கலில் முக்கியமான ஒன்றாக உள்ளது. சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும், மக்களின் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இன்று புத்தாண்டு தினம் மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குடும்பத்துடன் வருகை தந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்துவிட்டு, சுருளிஅருவியில் உள்ள பூத நாராயணன் கோவில், முருகன் கோயில், அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவி அமைந்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்கள் அதிகப்படியாக சுருளி அருவியில் வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.1
- தர்மபுரி: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி சாமி திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழன் அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு தங்கக் கவச அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 8:30 மணி வரை சாமி சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற சாமி தரிசனம் செய்தனர் புத்தாண்டு பிறப்பையொட்டி காலை 8:30 மணி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது1
- தர்மபுரி நகரம் குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பு முன்னிட்டு சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கேரள மாநில பக்தர்கள் குழந்தைகள் புத்தாடை அணிவித்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாக குழு ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது1
- இன்று ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்.1
- ஆனைமலை பெருமாள் சாமி மலை குறித்து மக்களிடையே தலைமுறை தலைமுறையாக சொல்லப்படும் சில முக்கிய உள்ளூர் புராணக் கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 🐘 1️⃣ ஆனை வடிவில் தோன்றிய மலை – “ஆனைமலை” பெயர்க் காரணம் பழமையான ஒரு நம்பிக்கைப்படி, ஒரு காலத்தில் அகந்தை கொண்ட ஒரு அசுரன் யானை (ஆனை) வடிவம் கொண்டு மக்களைத் துன்புறுத்தினான். அவனது அட்டகாசத்தை அடக்க திருமால் (பெருமாள்) இந்த மலைப்பகுதியில் தோன்றி, அவனை வதம் செய்தார். 👉 அந்த யானையின் உடல் மலையாக மாறியதால், “ஆனை + மலை = ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். 🌿 2️⃣ சித்தர்கள் தவம் செய்த புனித மலை இந்த மலைப்பகுதி, பண்டைய காலங்களில் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் செய்த இடம் என்று கூறப்படுகிறது. பெருமாள், தவத்தில் இருந்த சித்தர்களுக்கு நாராயண தரிசனம் அளித்ததாக ஒரு புராணம் உண்டு. அதனால் இந்த மலை மந்திர சக்தி நிறைந்த தலம் என நம்பப்படுகிறது. இன்று கூட, சிலர் “இரவில் மணி ஒலி, சங்க நாதம்” கேட்பதாகச் சொல்வார்கள். 🌄 3️⃣ நேரில் தோன்றிய பெருமாள் – பக்தர் காப்புக் கதை ஒரு காலத்தில், மலையடிவார கிராமத்தை ஒரு கடுமையான நோய் தாக்கியதாகவும், அப்போது மக்கள் பெருமாளை வேண்டி விரதம் இருந்து மலை ஏறி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. 🙏 அந்த இரவில், பெருமாள் ஒரு வயதான அந்தணர் போல தோன்றி, “பயப்படாதீர்கள்” என்று அருளியதாக நம்பிக்கை. 👉 மறுநாளே நோய் விலகி, அதன் நினைவாக இந்த மலை பெருமாள் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். 🪔 4️⃣ விளக்கு அணையாத அதிசயம் உள்ளூர் மக்களிடையே சொல்லப்படும் மற்றொரு கதை: ஒருகாலத்தில், மலைக்கோயிலில் ஏற்றிய நெய் விளக்கு பல நாட்கள் அணையாமல் எரிந்ததாம். அதனை பெருமாளின் நித்திய வாசம் என்பதற்கான அடையாளமாகக் கருதினர். இன்றும், ➡️ புரட்டாசி சனிக்கிழமைகளில் ➡️ வைகுண்ட ஏகாதசி நாளில் விளக்கு வழிபாடு மிக முக்கியமாக நடக்கிறது. 🌼 5️⃣ வேண்டுதல் நிறைவேற்றும் மலை இந்த மலையில், நேர்மையான மனதுடன் பாத யாத்திரையாக (நடந்து) விரதம் இருந்து வழிபட்டால் ✨ வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். குறிப்பாக: குழந்தை பாக்கியம் நீண்டகால நோய் நீக்கம் வேலை / தொழில் முன்னேற்றம் இவைகளுக்காக அதிகம் வேண்டுகின்றனர்.1
- கைலாய வாக்கியங்கள் முழங்க தேரோட்டம் திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் நாளான இன்று மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- பழநி பேருந்து நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு பழநி மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாமல் அவதி.1