Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வட்டத்தில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து 23வட்ட அஇஅதிமுக பொறுப்பாளர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக இப்பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது. இனியும் காஞ்சிபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா அல்லது சுகாதார சீர்கேட்டால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு பிறகுதான் கண் விழிக்குமா என வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.!1
- ஊத்தங்கரை ஸ்ரீகுரு நாட்டியாலயா பரத நாட்டியப் பள்ளி சார்பில் மாநில அளவிலான பரதநாட்டியப் போட்டி. ஊத்தங்கரை ஸ்ரீகுரு நாட்டியாலயா பரத நாட்டியப் பள்ளி சார்பில் மாநில அளவிலான பரதநாட்டியப் போட்டி நடைபெற்றது. ஊத்தங்கரை ஓம் சக்தி மகாலில் ஸ்ரீகுரு நாட்டியாலயா பரத நாட்டியப் பயிற்சிப் பள்ளி சார்பில் 6 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவியருக்கு இளையோர் மூத்தோர் பிரிவில் தணி, இருவர் நடனம் என்ற பிரிவில் மாநில அளவிலான பரதநாட்டியப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வழக்குரைஞர் பிரபாவதி கணேசன்.தேவர பாடல்ஆசிரியர் கிருஷ்ணவேணிஅம்மையார் முன்னிலை வகித்தார். பள்ளி நிறுவனர் டாக்டர்.வீரலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தருமபுரி ஸ்ரீ வர்ணம் நாட்டியாலயா நிறுவனர் இராஜலட்சுமி சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் தருமபுரி ஸ்ரீசிவா நாட்டியாலயா நடனகுரு அம்பிகா, கிருஷ்ணகிரி தேன்தமிழ் நாட்டியாலயா நடன குரு மதுமொழி ஆனந்த் ஆகியோர் விருந்தினராகப் பங்கேற்றனர். இப்போட்டிகளை ஊத்தங்கரை கலாஸ் கலாலயா சந்திரன், கலைவளர்மணி ஞானசத்தி, கிருஷ்ணகிரி ஸ்ரீ கிருஷ்ணா யோக நாட்டியாலயா நிறுவனர் ஜெய்வித்யா ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து நடத்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜேசிஐ தேசியப்}பயிற்சியாளர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் ராஜலட்சுமி சரவணன் அவர்கள் மாணவச் செல்வங்களுக்கு பரதக்கலையின் மகத்துவம் பற்றியும் நடனக் கலையால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றியும் தெளிவாக விளக்கினார் . போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க்கு பரிசுகள்,பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நாட்டியத் தாரகை }2026 எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பிறகு பல மாவட்டங்களிலிருந்து பங்கேற்ற நாட்டியப் பள்ளிகள் சார்பில் ஆருத்ரா நாட்டிய சமர்ப்பணம் எனும் ஆன்மீக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ குரு நாட்டியாலயா நடன குரு டாக்டர்.வீ.வீரலட்சுமி தமிழரசன் அவர்கள் மிகச் சிறப்பாக இன் நிகழ்ச்சினை நடத்தினார்.1
- பொதுமக்களை துரத்திய ஒற்றை யானையால் பரபரப்பு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சமீப நாட்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளனர் வழக்கமாக கோடைகாலங்களில் தண்ணீர் & உணவுக்காக வரும் யானைகள் தற்போது முன்னதாகவே வந்துள்ளது. முண்டச்சி பள்ளம் என்ற பகுதியில் இன்று திங்கள்கிழமை யானை ஒன்று சாலை கடக்கும்போது இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் ஹாரன் அடித்து யானையை அச்சுறுத்தியதை அடுத்து யானை சிறிது தூரம் அவர்களை துரத்தி சென்றது இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சத்தில் பயந்து ஓடினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது பின்னர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்4
- தருமபுரி டாஸ்மார்க் குடோன் அருகே நிற்கும், சரக்கு வாகனங்களில் இரவு நேரத்தில், பதுபாட்டல்களை திருடும் கும்பல்-சரக்கு வாகனங்களை டாஸ்மார்க் குடோனில் நீறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டுமென்று ஓட்டுநர்கள் வலியுறுத்தல். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு அனுப்பும் மது பாட்டில்களை, இருப்பு வைத்து, பிரித்து அனுப்புவதற்கான மதுபானக் கிடங்கு தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரியில் மது பாட்டில்களை கொண்டு வரப்படுகிறது. ஆனால் இரவு நேரங்களில் லாரிகள் வந்தால், மது பாட்டில் சேமித்து வைக்கும் கிடங்கிறாகுள் லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரம் நிற்கும், மது பாட்டில்கள் ஏற்றி வரும் சரக்கு லாரியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தார்பாலினை கிழித்து, மதுபான மது பாட்டில்களை திருடி செல்கின்றனர். இதனால் மது பாட்டில்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி, மது பாட்டில் சேமிப்பு கிடங்கில் லாரியை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்துள்ளனர். ஆனாலும் லாரிகளை உள்ளே நிறுத்த அனுமதிக்க வில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சாலையோர நின்றிருந்த லாரி மீது ஏறி தார்பாலினை கிழித்து மது பாட்டில்களை திருடியுளாளனர். அப்பொழுது லாரி ஓட்டுநர்கள் வந்ததும் மது பாட்டில்களை விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் மது பாட்டில் சேமிப்பு கிடங்கிற்குள்ளேயே லாரிகளை நிறுத்த அரசு அனுமதிக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் மதுபாட்டில் சேமிப்பு கிடங்குகளிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. தருமபுரியில் மட்டும் சேமிப்பு கிடங்களுக்குள் லாரி நிறுத்த அனுமதிக்காமல், இங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுவதால், லாரி மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே லாரி சேமிப்பு கிடங்களுக்குள் நிறுத்துவதற்கு, முடிவு தெரியும் வரைக்கும் மது பாட்டில்களை கூட சேமிப்பு கடைகள் இறக்க மாட்டோம் என லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.1
- பாலக்கோடு அருகே சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- paree matric higher secondary school Pullambadi. contact 99424646052
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1