தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரிகள் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேடி நகராட்சி ஈடுபட்டு வருகிறது தேனி நகர் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் சேகரிக்கப்படும் நீரை ஆய்வு செய்து அந்த நீரில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டறிந்து அதனை தரையில் கொட்டியும் ப்ளீச்சிங் பவுடர் பூசியும் பு ழுக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்க எத்தகைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கொசு மருந்து மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேனி நகரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக அசுத்தமாக இடங்களை வைத்திருந்த நிறுவனங்களுக்கு சுமார் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரிகள் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேடி நகராட்சி ஈடுபட்டு வருகிறது தேனி நகர் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் சேகரிக்கப்படும் நீரை ஆய்வு செய்து அந்த நீரில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டறிந்து அதனை தரையில் கொட்டியும் ப்ளீச்சிங் பவுடர் பூசியும் பு ழுக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்க எத்தகைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கொசு மருந்து மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேனி நகரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக அசுத்தமாக இடங்களை வைத்திருந்த நிறுவனங்களுக்கு சுமார் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
- ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.1
- திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி1
- நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கண்டு கொள்ளாத தவெக எம்எல்ஏ கூலி உயர்வு மற்றும் நிவாரணம் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கண்டு கொள்ளாத தவெக எம்எல்ஏ வை கண்டித்தும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் நெசவாளர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பிரதானமாக பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை நெசவு செய்யப்பட்டு வருகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூறிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 6 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியார்பட்டி தெருவில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்தும், பிச்சை எடுத்தும்,சாலை மறியலில் ஈடுபட்டும் கடந்த 10 நாட்களாக நெசவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலையில் தொடர்ந்து போராட்டங்களை நெசவாளர்கள் நடத்திவரும் நிலையில் இந்தப் போராட்டம் குறித்தும் நெசவாளர்களின் கோரிக்கை குறித்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், மற்றும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் நெசவாளர்களிடம் பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசு நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமகிருஷ்ணாபுரத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த அறப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் தமிழக அரசு தலையிட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.1
- அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் தேர்த்திருவிழா பக்தர்கள் பரவசம். கரூரில், அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா-பக்தர்கள் பரவசம். கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. புரட்டாசித் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வெள்ளி அனுமாா், கருட வாகனத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கடந்த 21-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பூதேவி- ஸ்ரீதேவி மற்றும் கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் தேரோட்ட ம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பரவச தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து மாட வீதிகளில் உள்ள மண்டபங்களில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்க வழங்கினர்.1
- தேனி மாவட்டம் போடி அருகே திறந்தவெளி கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பசுமாடு உயிரிழப்பு கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சன்னாசிபுரம் செட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தென்னந்தோப்புகளும் விவசாய நிலங்களும் நிறைந்த இப்பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற தனது பசு மாட்டை வீட்டிற்கு அழைத்து வர கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சேதுராமன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் பசுமாடு எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. சுமார் 30 அடி ஆழமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த போர்வெல் கிணறு பாதியிலேயே கைவிடப்பட்ட ஒன்றாகும். இதன் வாய் பகுதி பலவீனமான தகரத்தைக் கொண்டு மூடப்பட்டிருந்ததால், அதை கவனிக்காமல் கால் வைத்த பசுமாடு தகரம் உடைந்து கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குக் போராடியுள்ளது. உடனடியாக மாட்டின் உரிமையாளர் கண்ணன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எக்ஸ்கவேட்டர் (JCB) இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த பசு மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், மீட்புப் பணிக்கு முன்பே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மிக்க சிரமத்திற்கு இடையே கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் இருந்த கன்றும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் கன்று ஈனவிருந்த பசுவும் அதன் கன்றும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கிணற்றில் தகரம் மட்டுமே மூடப்பட்டிருந்ததால், பலமுறை கால்நடைகள் விழுந்து மீட்கப்பட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்கச் சாலையோரத்தில் உள்ள இந்த ஆபத்தான கிணற்றை உடனடியாக நிரந்தரமாக உயரமான தடுப்பு சுவர் உயரமாக அமைத்து இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாதவாறு வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்குச் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு மனுவை சின்னமனூர் சர்வேயர் ஜெகநாதன் உதவியாளர் ஜெயமணியுடன் அளவீடு செய்ய சென்ற போது 2 பேரையும் K Kகுளம் அண்ணாமலை நகரில் குடியிருக்கும் செல்வராஜ் ரஞ்சித் சந்திரன் ஆகியோர் அளவீடு செய்ய விடாமல் தாக்கியதால் காடைமடைந்து தேனி க.விலக்கு GHல்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நடந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட நில அளவை துறைஅலுவலர் சங்கத் தலைவர் கா கணேஷ் குமார் தலைமையிலும். தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு சங்கத் தலைவர் வேல்முருகன் முன்னிலையும் தமிழ்நாடு நில அளவை வரைவாளர் சங்கத் தலைவர் அதியமான் மற்றும் தமிழ்நாடு நில அளவைத் துறை புல உதவியாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் மற்றும் நில அளவையாளர்கள் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் நில அளவையாளர் ஜெகன்நாதன் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமெனவும். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கை செயல்படவில்லை என்றால் வருவாய்த் துறை மற்றும் அலுவலர் சங்கம் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர் சங்கத் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார் தெரிவித்தார்1
- ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.1