தேனி பெரியகுளம் சாலை கோ ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனையை தேனி கலெக்டர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் தேனி பெரியகுளம் சாலையில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை விற்பனையை தேனி கலெக்டர் மருத்துவர் வைத்தியநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். கைத்தறி ரக விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக அரசு இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள 2 விற்பனை நிலையங்களுக்கு ரூ.75.50 லட்சம் தீபாவளி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் சந்திரசேகரன் துணை மண்டல மேலாளர் அழகுச் செல்வி விற்பனை நிலைய மேலாளர் அபிராமி மற்றும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பெரியகுளம் மக்கள் நலச் சங்கம் சார்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் வரும் தீபாவளி பண்டிகை தினத்திற்கான ஆடைகளை கோ - ஆப்டெக்ஸ்-ல் வாங்குவதற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர் இந்த நிகழ்வில் பெரியகுளம் மக்கள் நலச் சங்க தலைவர் ஸ்ரீதர் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாஸ்கரன் துணைத் தலைவர் ராஜா துணை செயலாளர் ராஜவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
தேனி பெரியகுளம் சாலை கோ ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனையை தேனி கலெக்டர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் தேனி பெரியகுளம் சாலையில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை விற்பனையை தேனி கலெக்டர் மருத்துவர் வைத்தியநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். கைத்தறி ரக விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக அரசு இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள 2 விற்பனை நிலையங்களுக்கு ரூ.75.50 லட்சம் தீபாவளி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் சந்திரசேகரன் துணை மண்டல மேலாளர் அழகுச் செல்வி விற்பனை நிலைய மேலாளர் அபிராமி மற்றும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பெரியகுளம் மக்கள் நலச் சங்கம் சார்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் வரும் தீபாவளி பண்டிகை தினத்திற்கான ஆடைகளை கோ - ஆப்டெக்ஸ்-ல் வாங்குவதற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர் இந்த நிகழ்வில் பெரியகுளம் மக்கள் நலச் சங்க தலைவர் ஸ்ரீதர் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாஸ்கரன் துணைத் தலைவர் ராஜா துணை செயலாளர் ராஜவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
- தேனி TNEB SE அலுவலக முன் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தேனி கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி NRT சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தேனி கிளை சார்பில் மத்திய மாநில அரசையும் மின்வாரியத்தையும் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சுப்புத்தாயி தலைமை வகிக்க கிளை செயலாளர் மாரிசாமி ஆர்ப்பாட்ட கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் 70 வயது முடிந்த ஓய்வூதியர் அனைவருக்கும் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் மின்வாரிய மறு சீரமைப்புக்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி தங்களது ஓய்வூதிய அமைப்பை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் 8வது ஊதிய குழுவில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள பொருத்த காரணிகளை ஓய்வூதியர்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்க வேண்டும் என்றும் 728 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 2019 ல் பெற்ற தீர்ப்பின்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ் வாழ்த்துரை வழங்க தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன் நிறைவு உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக கிளை பொருளாளர் அமிர்த வேல் பாண்டியன் நன்றி கூறினார் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தேனி கிளை சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்1
- *8 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை நிறைவு* *வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரொக்க பணம் 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலமாக பரிமாற்றம் செய்யபட்டுள்ள 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முத்துராஜ் தகவல்* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் அன்றாட நடைமுறை பணிகளில் லஞ்சப்பணம் கொடுப்பதும், வாங்குவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர் குழுவினர் உள்ளிட்டோர் அலுவலகத்தில் இருந்த போதே திடீரென மாலையில் இருந்து தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினரின் சோதனை மாலையில் இருந்து இரவிலும் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று முடிவடைந்தது சோதனையின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 12,000 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதோடு , அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலம் பரிமாற்றம் செய்யபட்டுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்1
- தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரிகள் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேடி நகராட்சி ஈடுபட்டு வருகிறது தேனி நகர் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் சேகரிக்கப்படும் நீரை ஆய்வு செய்து அந்த நீரில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டறிந்து அதனை தரையில் கொட்டியும் ப்ளீச்சிங் பவுடர் பூசியும் பு ழுக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்க எத்தகைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கொசு மருந்து மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேனி நகரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக அசுத்தமாக இடங்களை வைத்திருந்த நிறுவனங்களுக்கு சுமார் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது1
- காலத்திற்கான நெல் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள விவசாயிகள்.. வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலத்திற்கான நெல் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள விவசாயிகள்.. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம் , தம்பிபட்டி, அத்திகோயில் ,கோட்டையூர், மகாராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல் ,தென்னை என்பது பிரதான விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் என்பது விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.வத்திராயிருப்பு பகுதியில் இரண்டு போகம் நெல் விவசாயம் என்பது நடைபெற்று வருகிறது. மழையை எதிர்பார்த்து தங்களது விவசாயப் பணிகளை துவங்காமல் இருந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காலத்திற்கான நெல் விவசாய பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ளனர். அதன் முதற்கட்ட பகுதியாக விவசாய நிலத்தை உழவு செய்யும் பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.1
- ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது. எம்.பி பேட்டி முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும், மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிய தலைமைச் செயலகம் குறித்து எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி. சென்னையில் இருந்து சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் இன்று (செப்.23) மதுரை விமான நிலையம் வந்தார் .அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். தலைமை தேர்தல் ஆணையர் புகை இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். ஆனால் இன்று வந்த செய்தியில் பார்ம் சிக்ஸ் மாற்றத்திற்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று நான்கு முறை மம்தா பானர்ஜி சின்னத்தை முடக்கி இருக்கிறார்கள். முதல்வராக இருந்த கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள், அமைச்சர் ஜெய்சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். புதிய வாக்காளர்களின் தாய் தந்தை தாத்தா பாட்டி வாக்காளர்களாக இருக்கிறார்களா என கேள்வி கேட்டு அவர்களை நீக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள். தேர்தல் மீது சந்தேகம் வந்து விடுகிறது இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இதில் நீடிக்க கூடாது. அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் அரசு செவி சாய்க்கவில்லை இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடைமுறை இருக்கிறதா? என கேள்விக்குறியாக உள்ளது. ஒரு முறை வரி விதிக்க பழகிவிட்டால் எல்லா விதத்திலும் வரிவிதிப்பார்கள். கடை நடத்துபவர்கள் பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்கள் கட்ட மாட்டார்கள் நுகர்வோர் தான் கட்டுவார்கள். வீரமணி வழக்கு தொடர்பான கேள்விக்கு? பத்திரிக்கையில் வரும் செய்தியை வைத்து நான் கருத்து சொல்கிறேன் விசாரணை நடைபெறுகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் கடந்த ஆட்சியில் அரசியல் என்பதை விசாரணைக்கு பிறகு தான் சொல்ல முடியும். இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு? என்னுடைய கருத்து வேறுபட்டது தான் ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது இதை நான் ஒத்துக்கொள்கிறேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. அவர்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த கேள்விக்கு? முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும் மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தலைமை செயலகத்தை பொறுத்த அளவில் என்னை பொருத்தவரை திருச்சியில் வைக்க வேண்டும். சென்னையிலேயே கட்ட தேவையில்லை திருச்சி தான் மையம். சட்டமன்றத்தையே வேற ஊரில் கட்டுங்கள் திருச்சியில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு துறையையும் மதுரை கோவை திருச்சி என பிரிக்க வேண்டும் என்றார்.1
- திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டியில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- தேனி பெரியகுளம் சாலை கோ ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனையை தேனி கலெக்டர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் தேனி பெரியகுளம் சாலையில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை விற்பனையை தேனி கலெக்டர் மருத்துவர் வைத்தியநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். கைத்தறி ரக விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக அரசு இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள 2 விற்பனை நிலையங்களுக்கு ரூ.75.50 லட்சம் தீபாவளி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் சந்திரசேகரன் துணை மண்டல மேலாளர் அழகுச் செல்வி விற்பனை நிலைய மேலாளர் அபிராமி மற்றும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பெரியகுளம் மக்கள் நலச் சங்கம் சார்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் வரும் தீபாவளி பண்டிகை தினத்திற்கான ஆடைகளை கோ - ஆப்டெக்ஸ்-ல் வாங்குவதற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர் இந்த நிகழ்வில் பெரியகுளம் மக்கள் நலச் சங்க தலைவர் ஸ்ரீதர் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாஸ்கரன் துணைத் தலைவர் ராஜா துணை செயலாளர் ராஜவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்1