Shuru
Apke Nagar Ki App…
தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்.... கடலூர் மாவட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் வட்டம், கடவாச்சேரி பகுதியில் தாயுமானவர் திட்டத்தினை துவக்கிவைத்து, மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி உட்பட பலர் உள்ளனர்.
C K RAJAN Journalist
தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்.... கடலூர் மாவட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் வட்டம், கடவாச்சேரி பகுதியில் தாயுமானவர் திட்டத்தினை துவக்கிவைத்து, மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி உட்பட பலர் உள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.2
- கொத்தமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அதிகாலையில் கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாகவும், கோபம் இல்லாமலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் எனவும், இந்த சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.1
- மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- ஆண்டிபட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருதலைப்பட்சமாக அகற்றபடுவதாக பொதுமக்கள் . தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் ஒருதலைப் பட்சமாக பராபட்சமாக அகற்றப்படுவதாகவும்தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீது பொதுமக்கள் புகார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர்பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது.மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புக்கள் செய்து பயன்படுத்தி வருவதால் 100 அடியுள்ள சாலையின் அகலம் 20 அடிகள் வரை குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது உயிர்பலியும் ஏராளமானோர் படுகாயங்களும் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை துறையினர் வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம் நிலஅளவை துறையினர் மின்துறையினர் காவல்துறையினர் ஆகியோரோடு இணைந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான ஜக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை அகற்றும் பணியை துவக்கினர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.ஒரு தலைப்பட்சமாக பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும்,பெரிய வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் ஆகியவற்றின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை என்றும்,சிறிய கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் கடைகள் ஆகியவையே ஆற்றப்படுவதாகவும் புகார் கூறும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதுவரை நான்கு முறை ஆண்டிபட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் முழுமையாக ஆக்கிரமப்புக்கள் அகற்றப்படாமல் கண் துடைப்பாகவே இப்பணிகள் நடைபெற்றதாகவும்,இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதின் நோக்கம் நிறைவேறாமல் வழக்கம்போல் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாகவும் எனவே முறையாக முழுமையாக பாரபட்சமில்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.4
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் ஆசாரி வின்சென்ட் ராஜ் என்பவர் வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.1
- ராயக்கோட்டை மேம்பாலம் மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா பேருந்து மற்றும் கார் மோதி விபத்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா அரசு பேருந்தின் பின்பக்கம் வந்த ஷிப்ட் கார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இந்த விபத்து சம்பந்தமாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் கர்நாடக பேருந்து ஓட்டுனர் ரவிகாந்த் மற்றும் கார் ஓட்டுநர் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த சுந்தர் இரண்டு நபர்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- தேனி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1