முத்துப்பேட்டையில் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 20-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஊர்வலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பது தொடர்பாக இன்று போலீசார் சார்பில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போலீசார் அணிவகுப்பாக புறப்பட்டு, ஆசாத் நகர், பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் செம்படவன்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், ஊர்வலம் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் இந்த ஒத்திகையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஊர்வலப் பாதையில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
முத்துப்பேட்டையில் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 20-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஊர்வலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பது தொடர்பாக இன்று போலீசார் சார்பில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போலீசார் அணிவகுப்பாக புறப்பட்டு, ஆசாத் நகர், பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் செம்படவன்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், ஊர்வலம் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் இந்த ஒத்திகையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஊர்வலப் பாதையில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
- முத்துப்பேட்டையில் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 20-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஊர்வலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பது தொடர்பாக இன்று போலீசார் சார்பில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போலீசார் அணிவகுப்பாக புறப்பட்டு, ஆசாத் நகர், பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் செம்படவன்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், ஊர்வலம் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் இந்த ஒத்திகையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஊர்வலப் பாதையில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.1
- செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், செம்போடை தெற்கு கடைத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (15-09-2026) மாலை மங்கள வாத்தியத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் மற்றும் கடாகர்ஷணத்தைத் தொடர்ந்து முதற்கால யாகபூஜை நடைபெற்றது. இரவில் விமானகலசம், யந்திரம் மற்றும் மூலவர் மூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டு, வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை (16-09-2026) காலை 7.05 மணிக்கு மேல் சூர்யகும்ப பூஜை, கோ பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, இரண்டாம்கால யாகபூஜை, நாடிசந்தானம், ஸ்பார்சாகுதி மற்றும் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் யாத்ராதானம் செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடாகி, அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் விமான கலசத்திற்கு புனிதநீரூற்றி மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மஹா கும்பாபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தகோடிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் மற்றும் அருசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவினை கோவில் நிர்வாக குழுவினரால் சிறப்பான முறையில் நடைபெற்றது.1
- கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில் மனை, புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. நாகை மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, கோவில் மனை மற்றும் பல்வேறு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவில் மனை, ஆற்றுப் புறம்போக்கு, சாலைப் புறம்போக்கு, குளம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், தினக்கூலியை ரூ.700-ஆக உயர்த்தி, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், விவசாய சங்கம் ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- நாகப்பட்டினத்தில் தந்தை பெரியாரின் 148 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம் அருகே கோட்டை வாசல் படியில் தந்தை பெரியாரின் 148 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமையிலும் செயலாளர் புபேஷ் குப்தா முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் பங்கேற்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் வடவூர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்1
- கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி.ஏரியை மீட்க அதிரடி உத்தரவு பொதுமக்கள் மகிழ்ச்சி அரியலூர் - ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி. : முற்றிலும் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்க அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவு. அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சன்னாசிநல்லூர் கிராமத்தில் 125 நாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த 'செரலான் ஏரி' முழுதும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்ட ஆட்சியர் ந.மிருணாளினி கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், சர்வேயர் ஆகியோரை அழைத்து செரலான் ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? என்கின்ற விவரத்தை ஆட்சியர் ந.மிருணாளினி கேட்டு கோப்புகளை பார்வையிட்டார். சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு உள்ள செரலான் ஏரி, சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த ஆக்கிரமிப்பை எப்படி அனுமதித்தீர்கள்? இதுவரை ஏன் அகற்றாமல் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய ஆட்சியர், உடனடியாக ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உத்தரவிட்டார். அப்போது ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பயிர் சாகுபடி செய்திருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். தரிசாக உள்ள இடங்களை உடனடியாக மீட்கவும், பயிர் செய்த இடங்களை சாகுபடி முடிந்தவுடன் மீட்க ஆட்சியர் ந.மிருணாளினி உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஏரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், உடனடியாக ஏரியை மீட்டு நீராதாணத்தை காக்க உத்தரவிட்டது செந்துறை சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.1
- வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தனர்.லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெப்பமும் வறச்சியும் நிலவி வந்தது. மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் குருவை சாகுபடி பயிர்களும் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த சில தினங்களுக்கு மழை பெய்தது.இன்று பகலில் வழக்கமான வெப்பம் இருந்த நிலையில் இரவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்த மழையால் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் கலசத்தில் இடி விழுந்து கலசம் சேதமடைந்து விழுந்ததால் பரபரப்பு. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, கஞ்சனூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. திருக்கோயில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில். சுமார் 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருப்பதாகவும் தினசரி பூஜைகள் நடந்து வந்தாலும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென்று கடுமையான இடி இடித்ததில் மின்னல் வெளிச்சத்தோடு கோயிலின் மூலவ விமானத்தை இடி தாக்கியது. இதனால் கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் இடி விமானத்தை தாக்கியதால் கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மெயின் மின்சார சாதன பொருட்களில் மின் கசிவு ஏற்பட்டு கோயிலின் மூலவ சன்னதியில் முழுவதுமாக புகை மூட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கலசத்தை எடுத்து கோயிலில் உள்ளே வைத்தனர். இது குறித்து இந்த சமய அறநிலையத் துறை மற்றும் திருப்பனந்தாள் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் இடி விழுந்து விமானம் இடிந்த நிகழ்வு பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.1